பாகீரதி அம்மா

பாகீரதி அம்மா (Bhageerathi Amma) (பிறப்பு 1914கள்-23 சூலை, 2021) ) கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இந்திய பெண்ணாவார். இவர் தனது 105 வயதில் கல்வியறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றபோது தேசிய அளவில் கவனத்திற்கு வந்தார். இவர் நாரி சக்தி விருதுடன் கௌரவிக்கப்பட்டார் மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவரைப் பாராட்டினார்.

வாழ்க்கை

1914களில் பிறந்த இவர் தற்போது கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பிரக்குளத்தில் வசிக்கிறார். ஒரு பிரசவத்தில் இவரது தாயார் இறந்தவுடன், தனது இளைய உடன்பிறப்புகளை கவனித்துக்கொண்டார். இவரது கணவர் 1930 களில் இறந்தார். இதனால் தனது குழந்தைகளை தனியாக வளர்த்தெடுத்தார்.[1] இவருக்கு 5 அல்லது 6 குழந்தைகளும், 13 அல்லது 16 பேரப்பிள்ளைகளும், மேலும் 12 பெரிய-பேரக் குழந்தைகளும் இருப்பதாக தெரிகிறது.[2] இவர், இந்த வயதிலும் தொலைக்காட்சியில் துடுப்பாட்டம், நாடகத் தொடர் போன்றவற்றை பார்த்து ரசிக்கிறார்.[3]

தேர்வு

தனது 105 வயதில், இவர் தனது கல்வியைத் தொடர முடிவு செய்து கணிதம், மலையாளம், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் தேர்வுகள் எழுதினார். இவரது வயது காரணமாக, கேரள எழுத்தறிவுத் திட்ட இயக்ககம் மூன்று நாட்களுக்கு மேல் வீட்டிலேயே தேர்வு செய்ய அனுமதித்தது.[3] இவர் 275க்கு 205 மதிப்பெண்களைப் பெற்றார். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மிக வயதான நபரானார்.[4]

விருதுகளும் அங்கீகாரமும்

இவர், 2019 நாரி சக்தி விருது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி இவரை புகழ்ந்து பேசினார்: "நாம் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்பினால், அதற்கான முதல் முன் நிபந்தனை நமக்குள் இருக்கும் மாணவப் பருவம் ஒருபோதும் இறக்கக்கூடாது ".[5] இவரைப் போன்றே கற்றல் தேர்வெழுதிய மற்றொரு வெற்றியாளர் கேரளாவைச் சேர்ந்த 98 வயதான கார்த்தியாயனி அம்மா என்பவராவார். <[6]

உடல்நலக்குறைவு காரணமாக அம்மா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் விரைவில் இவர் ஓய்வூதியாமாக மாதத்திற்கு 1,500 ரூபாயைப் பெற்றார். ஓய்வூதியம் பெறுவதற்கு தனது ஆதார் அடையாள அட்டை தகவல்களை இவரால் கொடுக்க முடியவில்லை, ஆனால் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி இவருக்கு உதவியது.[5][7]

இறப்பு

வயது மூப்புகாரணமாக 23 சூலை 2021, அன்று தனது 107 வயதில் அம்மா இறந்தார்.[8][9]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாகீரதி_அம்மா&oldid=3931286" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை