பாஸ் நீரிணை

பாஸ் நீரிணை (Bass Strait) தாஸ்மானியாவை அவுஸ்ரேலியப் பெருநிலப்பரப்பின் தெற்குப் பகுதியை (குறிப்பாக விக்டோரியா மாநிலத்தை) பிரிக்கும் கடல் நீரிணையாகும்.

பாஸ் நீரிணை மற்றும் அதனுடன் இணைந்த முக்கிய தீவுகள்

கண்டுபிடிப்பு

இந்நீரிணையை 1797 இல் முதலில் அடைந்த ஐரோப்பியர் ஜோர்ஜ் பாஸ் என்பவர். இவரது நினைவாக நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் ஜோன் ஹண்டர் இந்நீரிணைக்குப் இப்பெயரைச் சூட்டினார்.

இந்நீரிணை மிகக் குறுகலான இடத்தில் 240 கிமீ அகலமானது. பொதுவாக 50 மீட்டர் ஆழமானது. இங்குள்ள கிங் தீவு, பிளிண்டர்ஸ் தீவு போன்றவற்றில் மனித குடியேற்றங்கள் இடம்பெற்றன. இந்நீரிணைப் பகுதியில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நீரிணைக்குக் குறுக்காகப் பயணிக்க இலகுவான முறை வான்வழிப் போக்குவரத்தாகும்.

தாஸ்மானியாவின் ஏனைய நீர் நிலைகளைப் போலவே பாஸ் நீரிணையின் குறைந்த ஆழம் காரணமாக கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதனால் 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பல கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்நீரிணையில் கிழக்குப் பகுதியைக் கண்காணிக்கும் பொருட்டு 1848 ஆம் ஆண்டில் டீல் தீவில் கலங்கரை விளக்கம் ஒன்று நிறுவப்பட்டது. பின்னர் 1859 இலும், 1861 இல் கிங் தீவிலும் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டன.

தீவுகள்

இந்நீரிணையில் 50 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு

  • மேற்குப் பகுதி
    • கிங் தீவு
    • ஹண்டர் தீவு
    • ரொபின்ஸ் தீவு
  • தெற்குப் பகுதி
    • பிளிண்டர்ஸ் தீவு
    • கேப் பாரன் தீவு
    • கிளார்க் தீவு
    • 50இற்கும் மேற்பட்டவை
  • வடகிழக்க்குப் பகுதி
    • டீல் தீவு
    • ஹோகன் தீவு
    • கேர்ட்டிஸ் தீவு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாஸ்_நீரிணை&oldid=1348772" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை