பிராங்க் சினாட்ரா

பிரான்சிசு ஆல்பர்ட்டு பிராங்க் சினாட்ரா (Francis Albert Frank Sinatra, திசம்பர் 12, 1915 – மே 14, 1998) அமெரிக்க பாடகர், இசைக்கலைஞர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 60 ஆண்டுகளாக பாடியுள்ள சினாட்ராவின் இசைத்தட்டுக்கள் 250 மில்லியனுக்கும் மேலாக உலகெங்கும் விற்பனையாயுள்ளன. இசை வரலாற்றில் மிகச் சிறந்த, மிகுந்தப் பாராட்டுக்களைப் பெற்ற ஒருவராக விளங்குகின்றார்.[4]

பிராங்க் சினாட்ரா
1960இல் சினாட்ரா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரான்சிசு ஆல்பர்ட்டு சினாட்ரா
பிற பெயர்கள்ஓல்' புளூ ஐசு[1]
தி சேர்மன் ஆப் தி போர்டு[1]
தி வாய்சு[1]
பிராங்கி
பிறப்பு(1915-12-12)திசம்பர் 12, 1915
ஹோபோகின், நியூ செர்சி, ஐ.அ[2]
இறப்புமே 14, 1998(1998-05-14) (அகவை 82)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ
இசை வடிவங்கள்வாய்ப்பாட்டு ஜாசு, மரபார்ந்த பாப்பிசை, பிக் பேண்டு, சுவிங் இசை
தொழில்(கள்)பாடுதல்[1]
நடிகர்[1]
தயாரிப்பாளர்[1]
இயக்குநர்[1]
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1935–1995[3]
வெளியீட்டு நிறுவனங்கள்கொலம்பியா, கேப்பிடல், ரிப்பிரைசு
இணைந்த செயற்பாடுகள்ராட் பேக்
பிங்கு கிராசுபி
நான்சி சினாட்ரா
இணையதளம்www.franksinatra.com

இவருக்கு "ஓல்டு புளூ அய்சு" என்ற செல்லப்பெயரும் உண்டு. "முதல் நவீன பாப்பிசை சூப்பர்ஸ்டார்" என த நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.[5] துவக்கத்தில், இவர் பெரும்பாலும் காதல் பாடல்களைப் பாடிவந்த மென்குரலாளர் என்றே அறியப்பட்டார். 1950களிலும் 1960களிலும் சினாட்ரா இசுவிங், ஜாஸ் வகைப் பாடல்களையும் பாடி வந்தார். சினாட்ரா ராட்பேக் என்ற குழுவிலும் அங்கமாயிருந்தார்.[6] இது மகிழ்கலை நடத்துநர்களின் குழுமமாக 1950களிலும் 1960களிலும் இயங்கி வந்தது. இந்தப் பெயர் முறையானதல்ல, அலுவல்முறையான குழுவும் அல்ல; நண்பர்களின் குழாமாக செயல்பட்டது. இந்தக ்குழுவில் சினாட்ரா, டீன் மார்ட்டின், சாம்மி டேவிசு ஜூனியர், பீட்டர் லாபோர்டு, ஜோயி பிஷப், மற்றும் ஹம்பிறி போகார்ட், ஜூடி கார்லேண்ட், லாரென் பக்கால், சித் லுஃப்ட், சிர்லி மாக்லைன் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்தனர்.

இளமை

ஹோபோகின், நியூ செர்சி, இருபதாம் நூற்றாண்டின் துவக்கம்

பிரான்சிஸ் ஆல்பர்ட் சினாட்ரா [a] was born on திசம்பர் 12, 1915இல் ஹோபோக்கினின் மன்றோ தெருவிலுள்ள மாடிக் குடியிருப்பில் பிறந்தார்.[8] தற்போது இவ்விடத்தில் செங்கல் வளைவொன்று நாட்டப்பட்டுள்ளது; நடைமேடையில் உள்ள ஓர் வெங்கல அறிவிக்கையில், "பிரான்சிசு ஆல்பர்ட் சினாட்ரா: தி வாய்சு" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.[8]

இத்தாலிய குடியேறிகளான அந்தோணி மார்ட்டின் சினாட்ராவிற்கும் [9] டோல்லி சினாட்ராவிற்கும் ஒரே மகனாகப் பிறந்தார்.[10][11] சினாட்ரா பிறக்கும்போது 13.5 pounds (6.1 kg) எடையுடன் இருந்தார். பற்றுக்குறடு கொண்டே பிரசவம் பார்க்கப்பட்டது. இதனால் சினாட்ராவின் கன்னம், கழுத்து, காதுகளில் வடு ஏற்பட்டது. காதில் ஏற்பட்ட குறை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.[12] பிறப்பின்போது ஏற்பட்ட காயங்களால் புனித பிரான்சிசு தேவாலயத்தில் நடைபெறவிருந்த திருமுழுக்கு ஏப்ரல் 2, 1916 வரை தள்ளிப்போடப்பட்டது.[13] சிறுவயதில் அவரது மாத்தாய்டு எலும்பில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் கழுத்தில் நிரந்தர தழும்பு ஏற்பட்டது. பாலினப் பருவத்தில் ஏற்பட்ட ஆக்னே நோயால் முகமும் கழுத்தும் வடுக்கள் மிகுந்திருந்தன.[14] சினாட்ரா உரோமன் கத்தோலிக்கர் ஆவார்.[15]

நடிப்புப் பணிவாழ்வு

சினாட்ரா நடிகராகவும் விளங்கினார். தி மஞ்சூரியன் கேன்டிடேட், பிரம் இயர் டு எடர்னிடி, தி மேன் வித் தி கோல்டன் ஆர்ம் ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரம் இயர் டு எடர்னிடி திரைப்படத்தில் சிறந்த துணைநடிகருக்கான அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.[16]

தனி வாழ்வு

சினாட்ரா நான்கு முறை திருமணம் புரிந்துள்ளார். 1939 முதல் 1951 வரை நான்சி பர்பாடோவுடன் திருமண வாழ்க்கை நடத்தினார். அவா கார்டினருடன் 1951 முதல் 1957 வரையும் மியா பர்ரோவுடன் 1966இலிருந்து 1968 வரையும் கடைசியாக பார்பரா சினாட்ராவுடன் 1976இலிருந்து மே 14, 1998இல் இறக்கும் வரையிலும் இணைந்து வாழ்ந்துள்ளார்.

இறப்பு

சினாட்ரா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் செடர்சு சினாய் மருத்துவ மையத்தில் மே 14, 1998இல் மாரடைப்பால் இறந்தார். அவரது மனைவி பார்பரா இறக்கும்போது உடனிருந்தார்.சினாட்ராவின் கல்லறை மீது "சிறந்தது இன்னும் வரவேண்டியுள்ளது" என எழுதப்பட்டுள்ளது.[17]

குறிப்புகள்

மேற்கோள்கள்

நூற்கோவை

Gildo De Stefano, The Voice - Vita e italianità di Frank Sinatra, Coniglio Press, Roma 2011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8860632595

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிராங்க்_சினாட்ரா&oldid=3788424" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை