பீரங்கி வண்டி

பீரங்கி வண்டி (tank) அல்லது தகரி என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி எஃகு கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது.

போர்க்களத்தில் முதலில் 1916 இல் பயன்பட்ட பிரித்தானிய மார்க் 1 தகரி. இது சாலமன் கரப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது
இரண்டாம் உலகப் போரில் 1943 இல் இத்தாலியில் பயன்படுத்தப்பட்ட பிரித்தானிய எம்4 செர்மன் வகை பீரங்கி வண்டி
A row of seven large German tanks from World War Two lined up with their long cannons pointing up at an angle, as if saluting
செருமனி செய்திப்படத்துக்காக அணிவகுத்து நிற்கும் செருமானிய டைகர் II தகரிகள்,503rd heavy tank battalion (Germany)

அமைப்பு

தற்காலத் தகரிகள் அனைத்துப்பொது இயங்குநிலைத் தரை ஆயுத அமைப்புச் செயல்மேடைகள் ஆகும். இதில் சுழலும் துப்பாக்கிப் படுகையில் பேரளவீட்டுச் சுடுகலன் நிறுவப்பட்டிருக்கும். உடன் எந்திரத் துப்பாக்கிகளும் மற்ற பிற ஆயுதங்களும் அமைந்திருக்கும். படைக்குழுவுக்கும் ஆயுதங்களுக்கும் செலுத்தும் அமைப்புகளுக்கும் இயங்குதிறத்துக்கும் பாதுகாப்பளிக்க இது அடர்ந்த ஊர்திக் கவசத்தால் மூடப்பட்டுச் சக்கரங்களில் இயங்காமல் சுழல் தடத்தில் இயங்கும். எனவே இவை முரடான தரைப்பரப்பிலும் இயங்கிப் போர்க்களத்தில் மிக மேப்பட்ட இடத்தில் அமைந்து இயங்கவல்லதாக உள்ளது. இந்தக் கூறுபாடுகள் தகரி போர்த்தந்திரத்தோடு செயல்பட வழிவகுக்கிறது. திறம் மிக்க ஆயுதங்களின் சேர்மானம் தகரியின் துப்பாக்கி வழியாகச் சுடுகிறது. இது தனது தற்காப்புதிறத்தால் எதிரிப்படையின் சுடுதலில் இருந்தும் தப்பிக்கவல்லதாகும். இவை முற்றுகை, தற்காப்பு ஆகிய இருநிலைகளிலும் போர்க்களத்தில் கவச வண்டி அலகுகளுக்குத் தேவைப்படும் அனைத்துச் செயல்களையும் ஆற்றும் வல்லமைகொண்ட அலகுகளாக அமைகின்றன.[1] தற்காலத் தகரி முதல் எளிய கவச ஊர்திகளில் இருந்து ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் உருவானதாகும். உள் எரி பொறி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் கவச வண்டிகளின் வேகமான இயக்கத்துக்கு உதவின. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, தகரிகள் தன் முதல் தோற்றத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக பேரளவு திறமை மாற்றங்களைப் பெற்றன.

உருவாக்கம்

முதல் உலகப் போரின்போது ஒருங்கே பெரும்பிரித்தானியாவும் பிரான்சும் தகரிகளைத் தனித்தனியாக மேலைய போர்முனையின் குழிப்பள்ள போரை உடைக்க உருவாக்கின. இங்கிலாந்து இலிங்கனில் உள்ள வில்லியம் பாசுட்டர் குழுமம் 1915 இல் உருவாக்கிய முதல் ஆய்த ஊர்தி சின்ன வில்லி என அழைக்கப்பட்டது. இதன் தட்த்தட்டுகளை அக்குழுமத்தின் வில்லியம் டிரைட்டனால் உருவாக்கப்பட்டது, இதன் பல்லிணைஇபேழையும் கல்லும் படைமேலராகிய வால்டேர் கோர்டான் வில்சனால் உருவாக்கப்பட்ட்து.[2] இந்த முதனிலைப் புதிய வடிவமைப்பு, 1916 இல் முதலில் சொம்மே போரில் பயன்படுத்திய பிந்தைய பிரித்தானிய மார்க் I தகரியாக படிமலர்ந்தது.[2] உருவாக்கத்தின் தொடக்கநிலைக் கட்டங்களிலேயே தகரி எனும் பெயரைப் பிரித்தானியப் படை வழங்கியது. முதல் உலகப் போரில் பிரித்தானியரும் பிரெஞ்சுப் படையும் ஆயிரக்கணக்கான தகரிகளை செய்ய, இதன் வல்லமையில் நம்பிக்கையற்ற செருமானியர் 20 தகரிகளை மட்டுமே உருவாக்கினர்.

இரண்டாம் உலகப்போர்

தகரிகள் போரிடைக் காலத்தில் மிகப் பெரியனவாகவும் திறன்மிக்கனவாகவும் படிமலர்ந்து, இரண்டாம் உலகப் போர்க்காலத் தகரிகளாகப் படிமலர்ந்தன. இதில் கவசப் படைக்கலஞ்சார்ந்த பல கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன; சோவியத் ஒன்றியம் கால்கின் போரில் 1939 ஆகத்து திங்களில் முதல் பெருந்திரள் தகரி வான் தாக்குதலைத் தொடுத்தது.[3] பின்னர், முதன்மைப் போர்க்களத் தகரியின் முன்னோடிகளில் ஒன்றாகிய T-34 வகை தகரியை உருவாக்கியது. இருவாரக் காலத்துக்கும் முன்பாக, செருமனி மின்னல்போர் எனும் பேரளவு கவச ஊர்திகளை வடிவமைத்தது. இதில் ஒடிகள் பூட்டிய தன்னியக்கப் பெருந்திரள் தகரிகள் பயன்பாட்டால், புதுவகைக் காலாட்படை, தரைப்படைக்கல அணி, வான்படையணி ஆகியவற்றை இணைவாக அணிதிரட்டி, எதிரிப்படை முகப்பை உடைத்து பகைவரின் எதிர்ப்பை முறியடித்தது.

இரண்டாம் உலகப் போரின் பின்னரைப் பகுதியில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்வெடிப்பு தகரிதகர் படைக்கலங்கள் பாஞ்சர்பாசுட்டு போன்ற எடைகுறைந்த காலாட்படை சுமக்கும் தகரிதகர்ப்பு ஆயுதங்களை உருவாக வழிவகுத்தன. இவை சிலவகை தரிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தன. பனிப்போர்க் கால ஆயுதங்கள் இந்த ஆயுதங்களைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதனால், 1960 களில் மிகவும் மேம்பாடான கவசங்கள் உருவாகின; குறிப்பாக, கூட்டுக் கவசங்கள் உருவாகின. மேம்பாடான பொறிகளும் செலுத்தமும் தொங்கல்களும் இக்காலத் தகரிகளைப் பெரிய அளவில் வளர வழிவகுத்தன. துப்பாக்கித் தொழில்நுட்பம் சில கூறுபாடுகளின் மாற்றங்களாலும் வெடிகுண்டு வடிவமைப்பின் மேம்பாட்டாலும் குறிபார்த்தல் அமைப்புகளின் மேம்பாட்டாலும் கணிசமாக வளர்ந்தது.

பயன்பாடு

பனிப்போரின்போது முதன்மைப் போர்த் தகரி பற்றிய கருத்துப்படிமம் உருவாகித் தற்காலப் படைகளின் முதன்மையான உறுப்பாகியது.[4] 21 ஆம் நூற்றாண்டில், சீரிலா பொர்முறைகளின் வளர்நிலைப் பாத்திரத்தாலும் பனிப்போரின் முடிவாலும், விலைமலைந்த ஏவுகல செலுத்த வெடிகுண்டுகள் உலகமெங்கும் தோன்றியதால் தகரிகளின் பயன்பாட்டின் முதன்மைநிலை அருகலானது. இப்போது அவை தனியாகப் பயன்படுவதில்லை. மாறாக அவை கூட்டுப் படைக்கல அணிகளில் காலாட்படையின் போர்க்கல ஊர்திகளில் ஒருபகுதியாக மாறிவிட்டன. இவை கண்காணிப்புவான்கலங்களின் அல்லது தரைநோக்கித் தாக்கும் வான்கலங்களின் துணையோடு செயல்படுகின்றன.[5]

இந்தியாவில் பீரங்கி வண்டி

இந்தியா உருசியவகை T -72 பீரங்கி வண்டி, T-90 பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்துகிறது.அர்ஜுன் என்னும் பீரங்கி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது முழுக்கமுழுக்க இந்தியாவிலே வடிவமைத்து செய்யப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.

19ம் நுாற்றாண்டு வகைமைப் பீரங்கிவண்டியின் பக்கத் தோற்றப்படம்

வரலாறு

கருத்துப்படிமங்கள்

தகரி படைக்கு இயங்குதிறப் பாதுகாப்பும் சுடுதிறமும் வழங்க விரும்பிய பண்டைய கருத்துப்படிமத்தின் 20 ஆம் நூற்றாண்டு நடைமுறைப்படுத்தல் ஆகும். உள் எரி பொறி , கவசத் தட்டு, தொடர்ச்சியான தடம் ஆகியவை தற்காலத் தகரி புனைவுக்கான முதன்மையான புத்தாக்கங்களாகும்.

இலியனார்தோ தாவின்சி முன்மொழிந்த ஊர்தி

பல தகவல் வாயில்கள் வழியாக இலியனார்தோ தா வின்சியும் எச். ஜி. வெல்சும் ஏதோ ஒருவகையில் தகரியைப் புதிதாக்க் கண்டுபிடித்ததாக அறிகிறோம். முன்னவரது 15 ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியின் ஓவியங்கள் த்கரியை விவரிக்கின்றன. இவற்றில் சுற்றிலும் சுடுகலன்கள் பூட்டிய சக்கர ஊர்திகள் மாந்தத் திறனால் இழுக்கப்படுவதாக வரையப்பட்டுள்ளன. என்றாலும் மாந்தர்குழு நெடுந்தொலைவுக்கு இந்த ஊர்திகளை இழுத்துச் செல்ல்ல் அரிய பணியாகும். மேலும் இப்பணிக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதும் குறுகிய இட நெருக்கடியால் சிக்கலானதாகும். 15 ஆம் நூற்றாண்டில், ஜான் சிசுகா துப்பாக்கிகளைக் கொண்ட கவச வண்டிகளை வடிவமைத்து பல போர்களில் அவற்றைத் திறம்பட இயக்கி வெற்றியோடு பயன்படுத்தியுள்ளார்.

சக்கர ஊர்திகளின் இயங்குதிறத்தை மேம்படுத்த, அவற்றின் எடையைப் பரவலாக்கித் தரையழுத்தத்தைக் குறைத்து இழுவலிமையைக் கூட்டும் "கம்பளிப்புழு" த் தடமுறை எழுந்தது. இதற்கான செய்முறைகள் 17 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. 19 ஆம் நூற்றாண்டுக்குள் பல வடிவங்களில் நடைமுறையில் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இரிச்சர்டு உலோவல் எட்ஜ்வொத் கம்பளிப்புழுத் தடமுறையை உருவாக்கியதாக அடிக்கடி கூறப்படுகிறது. இவர் 1770 இல் தன்னையே சுமந்து சென்று சாலையை வேயும் எந்தரம் ஒன்றுக்குப் பதிவுரிமம் பெற்றத் உண்மைதான். ஆனால், இது அவரது சொல்தேர்வே ஆகும். அவரே தன் நாட்குறிப்பில் குதிரையால் ஓட்டப்பட்ட உயரமான சுவர்களையும் குதித்து தாண்டும் எட்டுச் சக்கர மர வண்டியைப் பற்ரி விவரித்துள்ளார். ஆனால் இந்த விவரிப்புக்கும் கம்பளிப்புழுத் தடத்துக்கும் எந்த ஒட்டுபத்தும் இல்லை.[6] அன்னல், கவசத் தொடர்கல் 19 ஆம்நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றின. பலகவசமிட்ட நீராவி, பாறைநெய் எரிமப் பொறிகள் இயக்கிய ஊர்திகளும் முன்மொழியப்பட்டன.

முதல் உலகப் போர்

படத்தொகுப்பு

பனிப் போர்

பனிப்போர்க் காலச் சோவியத் T-72 தகரி தான் உலகமெங்கும் நிறுவிய முதன்மைப் போர்க்களத் தகரி ஆகும்.[7]

வடிவமைப்பு

தகரியின் திறமையை மதிப்பிடும் மூன்று மரபான காரணிகளாக ஆற்றல் மிக்க விசைப்பொறிகளின் உதவியுடன் திறமையான சுடுதிறம் (Firing capabilities), வெடிபொருள் சாதனங்கள், மற்றும் மிதிவெடிகள் போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு (protection), கடினமான நிலங்களிலும், குறிப்பிடத்தக்க வினைத்திறனுடன் நகரும் திறன் (mobility) ஆகியவை கருதப்படுகின்றன.[8]

தகரிப்போர்க் கட்டங்கள்

போர்ஆண்டுதகரிகளின்
மொத்த
எண்ணிக்கை
குறிப்புகள்
சொம்மே போர்191649போரில் தகரிகள் முதலில் பயன்படுத்தப்பட்டன[9][10]
காம்பிரா போர் 91917)1917378தரிகள் முதலில் வெற்றிகரமாகப் பயன்பட்டன[11]
வில்லெர்சு-பிரெடோன்னியூக்சு இரண்டாம் போர்191823முதல் தகரியும் தகரிப்போரும்
எசுபானிய உள்நாட்டுப் போர்1936–1939~700போரகத் தகரிச் சண்டை
போலந்து முற்றுகை1939~8,000"Blitzkrieg" எனும் சொல் உருவாக்கம்
பிரெஞ்சுப் போர்19405,828பெரும்படையில் தகரியின் திறம்
கர்சுகுப் போர்194310,610ஒரே போரில் பெரும்பாலான தகரிகள்
சீனாய்ப் போர் (1973)19731,200முதன்மைப் போர்த்தகரிகளிடையிலான சண்டை
வளைகுடாப் போர்1991~6,000தற்கால உயர்தொழில்நுட்பத் தகரிகளின் வெற்றி

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பீரங்கி_வண்டி&oldid=3688752" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை