பும்டி

மணிப்பூரின் ஏரித் தீவு

பும்டி (Phumdi) என்பது வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லோக்டாக் ஏரியின் பிரத்யேகமான மிதக்கும் தீவுகளின் தொடராகும். அவை ஏரிப் பகுதியின் கணிசமான பகுதியை உள்ளடக்கியது. இதன் சிதைவின் வெவ்வேறு கட்டங்களில் தாவரங்கள், மண் மற்றும் கரிமப் பொருட்களின் பன்முகத்தன்மை கொண்டவை. ஏரியின் தென்கிழக்கு பகுதியில் 40 கிமீ 2 (15.4 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய ஒற்றை பெருந்திரள் பும்டி ஒன்று உள்ளது. இந்த பெருந்திரளானது கெய்புல் லாம்சோ தேசிய பூங்கா என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய மிதக்கும் பூங்காவாகும். இந்த பகுதியில் பூர்வீகமாக உள்ள மணிபுரி மொழியில் சங்காய் எனப்படும் ஆபத்தான தாமின் மான் இனங்களை பாதுகாக்க இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. [1] [2] [3] [4] [5] [6]

பும்டிகளில் செழித்து வளரும் ஒரு சங்காய் மணிபுரி மான்

மீன்பிடித்தல் மற்றும் பிற வாழ்வாதார பயன்பாடுகளுக்காக உள்ளூர் மக்களால் தங்கள் குடிசைகளை கட்டியெழுப்ப பும்டிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு சுமார் 4000 பேர் வசிக்கின்றனர். [5] [7] அதபூம்கள் என்பது செயற்கையான வட்டவடிவ பும்டியாகும். இது கிராம மக்களால் மீன் வளர்ப்புக்கான கட்டடங்களாக பயன்படுத்தபட்டு வருகிறது. இவ்வகை நீர் வேளாண்மை முறையானது ஏரியில் பும்டிகளின் பெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [8] [9]

பாரம்பரிய நடைமுறை

பும்டியில் காணப்படும் தாவரங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்தபோதிலும், 1886 வரை மணிப்பூர் வர்த்தமானியில் மிதக்கும் தீவுகளைக் கொண்ட ஈரநிலங்கள் குடியிருப்பாளர்களால் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன என்று பதிவு செய்தன. [7] 1986 ஆம் ஆண்டில் இத்தாய் தடுப்பணை கட்டப்படுவதற்கு முன்பு, பும்டிகளில் 207 காங்போக்ஸ் (குடிசைகள் அல்லது கொட்டகைகள்) பதிவாகியிருந்தன. ஆனால் 1999 ஆம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், லோக்டாக் மேம்பாட்டு ஆணையம் இதுபோன்ற 800 கட்டமைப்புகளை அறிவித்தது. பல குடிசைகள் நிரந்தர குடியிருப்புகளாக மாற்றப்பட்டது. சுமார் 4,000 பேர் இந்த மிதக்கும் குடிசைகளில் வாழ்கிறார்கள். மீனவர்களாக தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கிறார்கள். [5] நெகிழிக் கயிறுகள், கனமான பாறைகள், மரம், மூங்கில், துத்தநாக தகடுகள் மற்றும் இரும்பு கம்பிகளைப் பயன்படுத்தி குடிசைகள் கட்டப்பட்டுள்ளன. [10] [11] [8] [9] சாண்ட்ரா தீவில் உள்ள பும்டிகள் ஒரு சுற்றுலா விடுதியாக கட்டப்பட்டுள்ளது. [12]

சுற்றுச்சூழல் அமைப்பு

படர்ந்த தாவரங்கள், கரிம குப்பைகள் மற்றும் மண்ணின் மிதக்கும் நிறை தடிமனாக இருக்கும். இது சில சென்டிமீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை மாறுபடும். [13] அது மட்கிய கருப்பு நிறத்திலும், நுண்துகள்கள் கொண்டதாகவும் இருக்கும். ஒரு பும்டியின் தடிமன் 20 சதவீதம் மட்டுமே நீர் மேற்பரப்புக்கு மேலே மிதக்கிறது. மற்ற 80 சதவீதம் நீரில் மூழ்கியுள்ளது. லோக்டாக் நீர்மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு முன்பு, பும்டிகளை கொண்ட பூங்கா பகுதி வெறும் சதுப்பு நிலமாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இரண்டு சுற்றுச்சூழல் மண்டலங்கள் உருவாகியுள்ளன. ஒன்று, ஏரியின் விரிவாக்கம், மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. மற்றொன்று, பும்டி, மீதமுள்ள மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியது.

பும்டிகளின் வாழ்க்கைச் சுழற்சி பொதுவாக பருவகால மாறுபாட்டிற்கு உட்பட்டது. மழைக்காலங்களில் நீர்மட்டம் அதிகமாக இருக்கும் போது, பும்டிகள் மிதக்கிறது. ஆனால் வறண்ட காலங்களில், நீர் மட்டம் குறையும் போது, பும்டிகள் ஏரி படுக்கையைத் தொட்டு அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடுகிறது. ஈரமான பருவம் திரும்பும்போது, அவை மீண்டும் மிதக்கின்றன. மேலும் தாவரங்களின் வேர்களில் போதுமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும் உயிரி உயிர்வாழ்கிறது. [14] இருப்பினும், ஆண்டு முழுவதும் ஏரியில் அதிக நீர்மட்டம் கொண்ட சமகால நிலைமை, ஏரி – கீழ் ஊட்டச்சத்துக்களுக்கு 'உணவளிக்கும்' செயல்முறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் உயிர்வாழ்வு இழப்பு மற்றும் தீவுகள் சுருங்கிப் போகின்றன. ஜனவரி 1999 இல், பூங்காவின் வடக்கில் ஒரு பெரிய பகுதியான பும்டி துண்டுகளாக உடைந்து பூங்கா பகுதியிலிருந்து விலகி, சங்காய் மானின் வாழ்விடத்தை அச்சுறுத்தியது.

காட்டு அரிசி அதிக உற்பத்தி திறன் கொண்ட இனங்கள்

வனவிலங்கு

ஏரியின் அனைத்து பும்டிகளிலும் மிகப்பெரியது லோக்டாக் ஏரியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது கெய்புல் லாம்சோ தேசிய பூங்காவை உருவாக்குகிறது. இந்த பூங்கா ஆபத்தான மணிப்பூர் தாமின் மானின் கடைசி இயற்கை அடைக்கலம் ஆகும். இது உள்நாட்டில் சங்காய் என அழைக்கப்படுகிறது, இது சங்காய் மானின் மூன்று துணை இனங்களில் ஒன்றாகும். இது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. [13] [15]

Left: sambar or (Cervus unicolor) in the park. Right: light phase Asian rock python (python molurus molurus) below a tree

பூங்காவின் முதன்மை இனமான தாமின் மானைத் தவிர, பூங்காவில் காணப்படும் பிற விலங்கினங்கள் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் புலம் பெயர்ந்த மற்றும் வசிக்கும் பறவையினங்களும் உள்ளன. [16] [17] [18]

பாலூட்டி இனங்களான பன்றி மான், காட்டுப்பன்றி, பெரிய இந்திய குரங்குகள், பொதுவான ஓட்டர், நரி, காட்டுப் பூனை, ஆசிய பொன்னிறப் பூனை, வளைகுடா மூங்கில் எலி, கஸ்தூரி எலி, பொதுவான எலி, பழ வௌவால், மற்றும் கடமான் போன்றவை. [16] [17] [18]

ஊர்வன இனங்களில் நில ஆமை, மலைப்பாம்பு, இந்திய மலைப்பாம்பு மற்றும் வங்காள உடும்பு போன்றவை இங்கு மிகவும் பொதுவானவை. பச்சோந்தி, அரணை, ஆமை, கண்ணாடி விரியன், புல்விரியன், கட்டு விரியன், கண்குத்தி பாம்பு, திருவாங்கூர் குக்குரி பாம்பு ஆகியவை ஊர்வனவற்றைக் குறிக்கின்றன.பொதுவான பல்லி ஆகியவை இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இந்திய மலைப்ப் பாம்புகள் என்பது பூங்காவில் காணப்படும் ஒரு ஆபத்தான உயிரினமாகும். [16] [17] [18]

பூங்காவில் காணப்படும் முக்கிய பறவை இனங்கள் புலம் பெயர்ந்த மற்றும் வசிக்கும் பறவையினங்கள் ஆகும். அவற்றில் சில கிழக்கு இமாலய பட்டாம்பூச்சிகள் உள்ளன. மீன்கொத்தி, கரும்பருந்து, வானம்பாடி, வடக்கு மலை மைனா, பர்மிய கறுப்பு வெள்ளை மைனா, வட இந்திய கருப்பு கரிச்சான், கிழக்கு காடு காகம், மஞ்சள் தலை குருவி, புள்ளி மூக்கு வாத்து, நீல-சிறகு இளம்பச்சை வாத்து, சிவந்த சிறகு வாத்து, முக்காடிட்ட கொக்கு, பர்மிய கொக்கு, இந்திய கம்புள் கோழி மற்றும் சிவப்பு மார்புடைய பல வண்ணங்களால் ஆன மரங்கொத்தி போன்றவையாகும். [16] [17] [18]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பும்டி&oldid=3798738" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்