மீன் கொத்தி

ஒரு பறவை இனம்

மீன் கொத்திகள் (Kingfisher), இக்குடும்பத்தை (Alcedinidae) சேர்ந்த பறவைகள் சிறியது தொடக்கம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பறவைகளாகும். கொரசிபோர்ம் வர்க்கத்தை சேர்ந்த இப்பறவைகள் கடும் நிறத்தை சார்ந்தவை. இப்பறவைகள் பரந்த நோக்கமுள்ள விநியோகம் உடையவை. மேலும் இப்பறவைகள் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஓசினியாவின் வெப்ப மண்டல பிரதேசங்களில் காணப்படுபவை ஆகும் . இக்குடும்பத்தை சேர்ந்த பறவைகள் 114 இனங்களை கொண்டவை. மேலும் இவைகள் மூன்று உப குடும்பங்களையும், 19 இனங்களையும் கொண்டவை. இப்பறவைகள் பெரிய தலை, நீளமானவையாகவும், கூரானவையாகவும், குறுகிய கால்கள், கட்டையான வால்களையும் கொண்பவை. இப்பறவைகளில் பெரும்பாலானவை கடும் நிறம்கொண்ட இறகுகளை கொண்டவை. மேலும் ஆண், பெண் பறவைகளுக்கு இடையில் சிறிது நிறமாற்றம் உண்டு. இப்பறவைகளில் சில மட்டுமே காடுகளில் காணப்படும். இப்பறவைகள் பல்வேறுபட்ட இரைகளை தான் இருக்கும் இடத்தில் இருந்து பாய்ந்து சென்று பிடிக்கும் இயல்புடையவை. வழமையாக இப்பறவைகள் ஆறுகள், குளங்களுக்கு அருகில் மீன்களை உண்பதை அவதானிக்கலாம். இருப்பினும் பெரும்பாலான இப்பறவையின் இனங்கள் முள்ளந்தண்டிலி அங்கிகளை உணவாக உட்கொள்ளும். இப்பறவைகளின் கூடுகள் பெரும்பாலும் பொந்துகளாகவோ, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உருவாக்கப்பட்ட சுரங்கங்களாகவோ காணப்படலாம். இப்பறவைகளில் சில இனங்கள் மாத்திரம் சுதேச வர்க்கங்களாக காணப்படும். ஆகையால் இப்பறவைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கும் வர்க்கத்தில் உள்ளடக்கப்படும்.

மீன் கொத்தி
Azure kingfisher (Ceyx azureus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Suborder:
Alcedines
குடும்பம்:
Alcedinidae

Rafinesque, 1815
Subfamilies

Alcedininae
Halcyoninae
Cerylinae

மீன் கொத்திகளின் உலகலாவிய பரம்பல்
Phylogeny of the Alcedinidae
Alcedinidae

Alcedininae

Halcyoninae

Cerylinae

Cladogram based on Moyle (2006)[1]

வகைப்பாடு

மீன் கொத்திகள் கொரசிபோர்ம் வர்க்கத்தை சேர்ந்த அல்சினிடே குடும்பத்தை சேர்ந்தவை. இக்குடும்பத்தின் பெயர்கள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பல்துறை வல்லுனர் கொன்ஸ்தாந்தின் சாமுவேல் ரபினஸ்கியுவினால் 1815 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[2][3] இப்பறவைகளின் மூன்று உப குடும்பங்களாவன.1. மர மீன் கொத்திகள்2. ஆற்று மீன் கொத்திகள்3. நீர் மீன் கொத்திகள் [4]ஒரு சில வகை பறவைகள் மாத்திரம் மூன்று உபகுடும்பங்களை குடும்ப நிலைக்கு உயர்த்துகின்றது.

பறவை அளவுகள்

ஆபிரிக்க குள்ள மீன் கொத்திகள் (Ispidina lecontei) மிகவும் குறுகிய பறவை வர்க்கத்தை சேர்ந்தவை. இவ்வகை பறவைகள் சராசரியாக 10 சென்டிமீட்டர் நீளமுடயவையாகும். மேலும் 9 தொடக்கம் 10 கிராம் நிறையுடயவை.[5] ஆபிரிக்க பருத்த மீன் கொத்திகள் (Megaceryle maxima) 42 சென்டிமீட்டர் தொடக்கம் 46 சென்டிமீட்டர்வரை நீளமுடயவை. மேலும் 255 கிராம் தொடக்கம் 426 கிராம் வரை நிறையுடையவை. [6]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மீன்_கொத்தி&oldid=2678468" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை