உடும்பு

உடும்பு
புதைப்படிவ காலம்:
மயோசீன்-அண்மை
பாறை உடும்பு (Varanus albigularis)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
உடும்புவகையி
பேரினம்:
உடும்பு

மெர்ரம், 1820
இனம்
70க்கும் அதிகமானவை, உரையைப் பார்க்க.

உடும்பு () (Monitor lizard) என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புலால் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (Varanus bitatawa) , வரானசு மபிடாங் (Varanus mabitang) மற்றும் வரானசு ஒலிவாசியசு (Varanus olivaceus ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது.[1][2] இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன.[3] உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.

பரவல்

வரானசின் பல்வேறு இனங்கள் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ளன; ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, நியூ கினியா, ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகள், தென் சீனக் கடல் போன்ற பகுதிகளில் இவற்றைக் காணலாம்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உடும்பு&oldid=3582503" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை