மகதான் மாகாணம்

மகதான் மாகாணம் (Magadan Oblast, உருசியம்: Магаданская область, மகதான்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தூரகிழக்கு நடுவண் மாவட்டப் பகுதியைச் சேர்ந்தது. இதன் எல்லைகளாக வடக்கே சுகோத்கா தன்னாட்சி வட்டாரம், கிழக்கே கம்சாத்கா கிராய், தெற்கே காபொரோவ்சுக் கிராய், மேற்கே சகா குடியரசு ஆகியன உள்ளன. இதன் தலைநகர் மகதான் ஆகும். மக்கள்தொகை: 156,996 (2010 கணக்கெடுப்பு).[9]

மகதான் மாகாணம்
Magadan Oblast
மாகாணம்
Магаданская область
மகதான் மாகாணம் Magadan Oblast-இன் கொடி
கொடி
மகதான் மாகாணம் Magadan Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தூரகிழக்கு[2]
பொருளாதாரப் பகுதிதூரகிழக்கு[3]
நிர்வாக மையம்மகதான்[4]
அரசு
 • நிர்வாகம்மாகாண சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[7]விளதீமிர் பெச்சியோனி[6]
பரப்பளவு[8]
 • மொத்தம்4,61,400 km2 (1,78,100 sq mi)
பரப்பளவு தரவரிசை11வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்1,56,996
 • Estimate (2018)[10]1,44,091 (−8.2%)
 • தரவரிசை81வது
 • அடர்த்தி0.34/km2 (0.88/sq mi)
 • நகர்ப்புறம்95.4%
 • நாட்டுப்புறம்4.6%
நேர வலயம்[11] (ஒசநே+11)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-MAG
அனுமதி இலக்கத்தகடு49
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.magadan.ru/

வரலாறு

மகதன் ஒப்லாஸ்து திசம்பர் 3 1953இல் நிறுவப்பட்டது.[13] இது கோல்யாமா பகுதியால் பிரபலமாக அறியப்பட்டது. இங்கு பெருமளவிளான மூலப் பொருட்டளான தங்கம், வெள்ளி, வெண்கலம், டங்ஸ்டன், போன்றவை உள்ளன. இங்கு ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் கணிமச் சுரங்கங்கள் தோண்டுதல், சாலை கட்டுமானங்கள் போன்ற பணிகள் 1930 களிலும் 1940 களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இங்கு இருந்த கட்டாய உழைப்பு முகாம்வாசிகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. ஸ்டாலின் இறந்த பிறகு இந்த முகாம்கள் கலைக்கப்பட்டன. பிராந்தியத்தின் நிர்வாகம் இதன் முன்னாள் பொறுப்பாளர்களிடம் வந்தது.தங்கச் சுரங்கம் போன்ற சுரங்கப் பணிகளுக்கு குற்றவாளிகளுக்கு பதிலாக ஊதியம் கொடுத்து தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி விரைவான பொருளாதார விரிவாக்கம் செய்யப்பட்டது,

இப்பகுதியின் பூர்வீகக் குடி மக்களான இவின்ஸ், கொர்யாக்ஸ், யுபிக்ஸ், சுக்சிஸ், ஓரோசிஸ், சுவன்ஸ், இடில்மென்ஸ் ஆகிய மக்கள் பாரம்பரியமாக இணைந்து மீன்பிடித்துக் கொண்டு ஓக்கோட்ஸ்க் கடற்கரை பகுதியில் இருந்து கோல்யாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு வரை வாழ்ந்த இம்மக்கள் தொழில்மயமாக்கலால் அவதிப்பட்டார். ஆனாலும் இப்பகுதியில் 1987 வரை நிறுவனங்களின் ஆதரவுவுடன் தங்கியிருக்க முடிந்தது ஆனால் பெரஸ்ட்ரோயிகா என்ற மறுவடிவமைப்பு கொள்கையால் பழைய கட்டமைப்புகளை மூடும் ஏற்பாடு தொடங்கியது. இதன் விளைவாக, இந்த மக்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இவர்களின் பாரம்பரிய தொழிலும் நசிந்ததால் வேலையின்மையால் வதியுற்றனர்.[14]

சுகோடா தன்னாட்சி பிராந்தியத்தியத்தின் நிவாகம் மகதன் ஒப்லாஸ்தின் கீழ்நடந்துவந்த நிலையில் 1991 இல் அதன் பிரிப்பு அறிவிக்கப்பட்டது.

வனவளம்

மகதன் ஒப்லாஸ்து முக்கியமாக மலைப்பாங்கான பனிப்பாலைவனப் பிரதேசம், மற்றும் தைகா பகுதிகளில் கொண்டுள்ளது. தெற்கில் ஓரளவு பிர்ச், வில்லோ, மலை சாம்பல், இலைகள் கொண்ட மர வகை, ஆல்டர் ஆகிய மரங்கள் கொண்ட காடுகள் கொண்டுள்ளது.தெற்கில் பனி ஆடுகள் , மான் , கடமான் மற்றும் பழுப்புநிறக் கரடிகள் போன்ற விலங்குகளும், வாத்து, கடற்பறவைகள் போன்ற பல பறவைகளும் காணப்படுகின்றன. ஓக்கோட்ஸ்க் கடல் பகுதியில் விலை மதிப்பு மிக்க போலாக், நெத்தலி, ஃலௌவ்ண்ட்டர் மீன், சால்மன், நண்டுகள் போன்றவை கிடைக்கின்றன.

பொருளாதாரம்

இது பொருளாதாரத்துக்கு முதன்மையாக தங்கம், வெள்ளி போன்ற உலோக சுரங்க நலன்களை மையமாகக் கொண்டுள்ளது. இங்கு மகதன் நகரம் மட்டுமே பெரிய தொழில்துறை மையமாக உள்ளது. வேளாண்மை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏப்ரல் 2014 அன்று உருசிய அரசாங்கம் டிசம்பர் 31, 2025 வரை மகதன் ஒப்லாஸ்து இல் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (SEZ) செயல்பாடுகளை விரிவாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[15]

சுரங்ககள்

மகதன் ஒப்லாஸ்து உலகின் மதிப்புமிக்க சுரங்க பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தங்கச் சுரங்கங்கள் இப்பராந்தியத்தின் முதன்மையானவையாக விளங்குகின்றன, அதுமட்டுமல்லாது வெள்ளி மற்றும் தகரம் போன்றவையும் வெட்டி எடு்க்கும் தொழிலும் வளர்ந்துவருகிறது. அண்மையில் இப்பிராந்தியத்தில் நிலக்கரி வளங்களை தோண்டி எடுப்பதில் ஆர்வம் காட்டப்பட்டுகிறது.

மீன்பிடிப்பு

மீன்பிடி தொழில்தான் இப்பகுதியின் ஒரே உணவு உற்பத்தித் துறை ஆகும். சுரங்கத் தொழிலை அடுத்து இது முக்கியத்துவம் வாய்ததாக உள்ளது. 600,000 சதுர கிலோமீட்டர்,(230,000 சதுர மைல்) மகதன் ஒப்லாஸ்து கடல் புதியைக் கொண்டுள்ளது. மேலும் 15.900 கிலோமீட்டர் (9,900 மைல்) நீளமுள்ள வணிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பகுதியும், 29.016 கிலோமீட்டர் (18,030 மைல்) நீளமுள்ள ஆற்றங்கரைகளையும் கொண்டுள்ளது. மீன்பிடி நிறுவனங்களைக். கவருவதாய் உள்ளது.

வேளாண்மை

இங்கு நிலவும் மோசமான காலநிலையின் காரணமாக, இப்பகுதியில் வேளாண்மை என்பது குறைவாக வளர்ந்த பொருளாதார துறையாக உள்ளது; இதன் விளைவாக, உணவு பொருட்கள் 50% வெளியில் இருந்தே வருவிக்கப்பட வேண்டியுள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மகதான்_மாகாணம்&oldid=3610473" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை