மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

  • மக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது.
  • தற்போது இதன் தலைவராக பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளராக ப. அப்துல் சமது, பொருளாளராக கோவை உமர் ஆகியோர் உள்ளனர்.[2]
மனிதநேய மக்கள் கட்சி
தலைவர்ஜவாஹிருல்லா
தொடக்கம்7 பெப்ரவரி 2009
தலைமையகம்7, வட மரைக்காயர் தெரு,மண்ணடி,சென்னை
நிறங்கள்கருப்பு மற்றும் வெள்ளை   
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
2 / 234
இணையதளம்
mmkinfo.com
இந்தியா அரசியல்

மக்களவைத் தேர்தல் 2009

கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில், 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மமக 4 தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்று கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது.

வேட்பாளர்கள் விபரம்:-

  1. மயிலாடுதுறை மக்களவை தொகுதி-ஜவாஹிருல்லாஹ்
  2. மத்திய சென்னை மக்களவை தொகுதி - செ.ஹைதர் அலி
  3. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி-சலிமுல்லாகான்
  4. பொள்ளாச்சி மக்களவை தொகுதி-உமர்.[3]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
வைப்புத் தொகை
இழப்பு
வைப்புத் தொகை
இழக்காத,
வெற்றி பெற்ற
தொகுதிகளில்

வாக்கு சதவீதம்
போட்டியிட்ட அனைத்து
தொகுதிகளின் மொத்த

வாக்கு சதவீதம்
3200.4942.43 [4]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 2016 மார்ச் 19 அன்று அறிவித்தார்.[5].
  • திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[6].
  • இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவுக்கே கொடுத்துள்ளது. நாகை, இராமநாதபுரம், ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது.[7].

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்வாக்குகள்வாக்கு சதவீதம்
401971500.5 % .[8]


தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்

2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம்வெற்றி பெற்றவர்வெற்றி பெற்ற தொகுதிசின்னம்/ஆதரவு
2011ஜவாஹிருல்லாஇராமநாதபுரம்இரட்டை மெழுகுவர்த்தி
2011அஸ்லம் பாஷாஆம்பூர்இரட்டை மெழுகுவர்த்தி
2021ஜவாஹிருல்லாபாபநாசம்உதயசூரியன்
2021ப. அப்துல் சமதுமணப்பாறைஉதயசூரியன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[9][10]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை