மருந்தியல்

மருந்தியல் (φάρμακον, ஃபார்மகோன் , "மருந்து"; மற்றும் -λογία, -லாஜியா என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது) என்பது மருந்து செயல்பாட்டினைப் பற்றிய துறையாகும்.[1] குறிப்பாக இது, வாழும் உயிர்கள் மற்றும் இயல்பான உயிர்வேதியியல் செயல்பாட்டை மாற்றியமைக்கும் புற உருவாக்கத்தின் மூலம் உருவான வேதிப்பொருள்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள இடைசெயல்களைப் பற்றிய கல்வியாகும். பொருள்களுக்கு மருந்தியல் பண்புகள் இருந்தால், அவை மருந்தியல் பொருள்களாகக் கருதப்படுகின்றன. மருந்து இயைபு மற்றும் பண்புகள், இடைசெயல்கள், நச்சுத்தன்மை, சிகிச்சை மற்றும் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோய்த்தாக்க எதிர்ப்பு ஆகிய அனைத்தையும் இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது. மருந்தியல் என்பதும் மருந்தாள்மை என்பதும் ஒன்றல்ல, மருந்தாள்மை என்பது ஒரு தொழிலைக் குறிக்கும், இருப்பினும் பொதுப் பயன்பாட்டில் இவை இரண்டும் பெரும்பாலும் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. மருந்தியலானது ஒரு செயல்பாட்டைப் பாதிப்பதற்காக மருந்துகள் எவ்வாறு உயிரியல் அமைப்புகளுடன் இடைசெயல் புரிகிறது என்பதைப் பற்றியதாகும். இது மருந்துகள், மருந்துகளுக்கு உடலின் எதிர்வினைகள், மருந்தின் மூலங்கள், அவற்றின் இயல்புகள் மற்றும் அவற்றின் பண்புகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவாகும். மாறாக, மருந்தாள்மை என்பது மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க பயன்பாட்டைப் பற்றிய மருத்துவ அறிவியலாகும்.

நரம்பியல் மருந்தியல், சிறுநீரக மருந்தியல், மனித வளர்சிதை மாற்றம் மற்றும் செல்லிடை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட, மருந்தியலுடன் தொடர்புடைய பல்வேறு வகையிலான தலைப்புகள்.

மருத்துவ மருந்தியலின் தோற்றமானது, ஏவிசென்னாவின் த கேனன் ஆஃப் த மெடிசின் , பீட்டர் ஆஃப் ஸ்பெயினின் கம்மெண்ட்டரி ஆன் இசாக் மற்றும் ஜான் ஆஃப் செயிண்ட் அமாண்டின் கம்மெண்ட்டரி ஆன் அண்டிடோட்டரி ஆஃப் நிக்கோலஸ் ஆகியவற்றிலிருந்து இடைக்காலத்திலிருக்கலாம் என்று அறியப்படுகிறது.[2] மருந்தியல் என்பது 19ஆம் நுற்றாண்டின் இடைப்பகுதி வரையில் அக்காலத்தின் பெரும் உயிர்வேதியியல் மறுஆய்வாளர்களிடையே ஒரு அறிவியல் பூர்வமான கல்வித் துறையாக வளர்ச்சி பெறவில்லை.[3] பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பாதிக்கு முன்பு, மார்ஃபின், குவினைன் மற்றும் டிஜிட்டாலிஸ் போன்ற மருந்துகளின் குறிப்பிடத்தக்க திறன் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் போன்றவை தெளிவாக விளக்கப்படவில்லை, மேலும் அவை சில குறிப்பிட்ட சில உறுப்புகள் அல்லது திசுக்களுடனான அற்புதமான வேதியியல் ஆற்றல்கள் மற்றும் ஈர்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தே விளக்கப்பட்டன.[4] சிகிச்சை மருந்துகள் மற்றும் நச்சுகள் எவ்வாறு தங்கள் விளைவுகளை உருவாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையினை அங்கீகரிக்கும் வகையில் 1847 இல் ருடோல்ப் புச்செயிமால் முதல் மருந்தியல் துறை உருவாக்கப்பட்டது.[3]

பழங்கால மருந்தியலாளர்கள், இயற்கைப் பொருள்களிலேயே, குறிப்பாக தாவர சாரங்களிலேயே கவனம் செலுத்தினர். மருந்தியலானது 19ஆம் நூற்றாண்டில் சிகிச்சைச் சூழல்களுக்கு அறிவியல் பூர்வமான சோதனைகளைப் பயன்படுத்தும் உயிர்மருத்துவ அறிவியலாக வளர்ந்தது.[5]

பிரிவுகள்

மருந்தியலானது மருந்தியலாளர்களால் வேதி அறிவியலாகப் பயிற்சி செய்யப்படுகிறது. அதன் துணைப் பிரிவுகளில் பின்வருவன அடங்கும்

  • மருத்துவ மருந்தியல் - மனிதர்களில் மருந்துகளின் விளைவுகளைப் பற்றிய மருத்துவத் துறை
  • நரம்பியல் - மற்றும் உளமருந்தியல் (நடத்தை மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் மீதான மருந்துகளின் விளைவுகள்),
  • மருந்து-மரபியல் (மருந்துகளுக்கு வெவ்வேறு பதில்வினைகளை வழங்கக் காரணமாக உள்ள மரபியல் மாற்றங்களின் மருத்துவ சோதனை)
  • மருந்து-ஜீனோமியல் (புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் பழைய மருந்துகளின் கூடுதல் சிறப்பியல்புகளைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்கு ஜீனோமியல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு)
  • மருந்து-நோய்ப்பரவியல் (பெரும் எண்ணிக்கையிலான மக்களில் மருந்துகளின் விளைவைப் பற்றிய துறை)
  • நச்சியல் - மருந்துகளின் தீங்கு தரும் விளைவுகள் பற்றிய ஆய்வு
  • கோட்பாட்டு மருந்தியல்
  • மருந்தளவியல் - மருந்துகள் எவ்வாறு அளவிடப்படுகின்றன
  • தாவரமருந்தியல் என்பது குறிப்பாக உயிருள்ள பொருள்களிலிருந்து குறிப்பாக தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகளின் இயைபு, பயன்பாடு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றைப் பற்றிய மருந்தியலின் ஒரு பிரிவாகும், இது தாவரங்களிலிருந்து தருவிக்கப்படும் மருந்துகள் என்றும் அழைக்கப்படும்
  • நடத்தையியல் மருந்தியல் என்பது மருந்துகளின் நடத்தையின் மீதான விளைவுகளைப் பற்றிய ஆய்வாகும். இது, சிறு விலங்கு மற்றும் கொறிணிச் சோதனை போன்றவை புதிய மருந்து சிகிச்சைகளின் நடத்தைச் சார்ந்த பதில்வினைகளை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படுதல் போன்ற மருத்துவத்திற்கு முந்தைய மற்றும் உயிர்ப்பொருள் ஆராய்ச்சியையும் உள்ளடக்கியதாகும்.

அறிவியல் பின்புலம்

வேதிப்பொருள்களைப் பற்றிய ஆய்வுக்கு பாதிக்கப்படும் உயிரியல் அமைப்பு பற்றிய நெருங்கிய அறிவு அவசியமாகும். செல் உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய துறைகளிலான அறிவு வளர்ந்துகொண்டே வரும் நிலையில், அதன் விளைவாக மருந்தியல் துறையும் மாறியுள்ளது. ஏற்பிகளின் மூலக்கூறியல் பகுப்பாய்வின் மூலம் குறிப்பிட்ட செல்லியல் சமிக்ஞைகள் அல்லது (செல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் செல்லியல் சமிக்ஞை அனுப்பும் பாதைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் மட்டுப்படுத்தும்) செல் ஏற்பிகளின் மேலுள்ள இடங்களை நேரடியாக பாதிப்பதன் மூலம் வளர்சிதைமாற்றப் பாதைகளைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொருள்களை வடிவமைப்பது சாத்தியமாகியுள்ளது.

மருந்தியலின் கருத்துக் கோணத்தின்படி ஒரு வேதிப்பொருளுக்கு பல்வேறு பண்புகள் உள்ளன. மருந்தியக்கத்தாக்கியல் வேதிப்பொருளின் மீதான உடலின் விளைவுகளையும் (எ.கா. அரை ஆயுள் காலம் மற்றும் பரவல் கன அளவு), மருந்தியக்கச் செயலியல் உடலின் மீதான மருந்தின் (விரும்பப்படும் அல்லது நச்சுத் தன்மை கொண்ட) விளைவுகளையும் விவரிக்கிறது.

ஒரு வேதிப்பொருளின் மருந்தியக்கசெயலியல் பண்புகளை விவரிக்கும் போது, மருந்தியலாளர்கள் பெரும்பாலும் LADME ஐக் கருத்தில் கொள்கின்றனர்:

  • விடுவித்தல் - கட்டுச்சிதைவு (வாய்வழி எடுத்துக்கொள்ளப்படும் திட வடிவ மருந்துகளுக்கு {சிறு துகள்களாக உடைத்தல்}), பரவல் மற்றும் பகுதிப்பிரித்தல்
  • உறிஞ்சுதல் - (தோல், குடல், வாயிலுள்ள சீதச் சவ்வு ஆகியவற்றின் வழியாக) ஒரு மருந்து எவ்வாறு உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது?
  • விநியோகம் - அது உயிரில் எவ்வாறு பரவுகிறது?
  • வளர்சிதைமாற்றம் - மருந்து உடலில் வேதியியல் முறையில் மாற்றம் பெறுகிறதா, மேலும் அது என்னென்ன பொருளாக மாறுகிறது. அவை செயலுள்ளவையா? அவை நச்சுத் தன்மை கொண்டவையாக இருக்க வாய்ப்புள்ளதா?
  • வெளியேற்றம் - மருந்துகள் (பித்த நீர், சிறுநீர், சுவாசம், தோல் ஆகியவற்றின் மூலம்) எவ்வாறு வெளியேற்றப்படுகின்றன?

மருந்துகளுக்கு ஒரு குறுகிய அல்லது பரந்த சிகிச்சையியல் குறியீடு அல்லது சிகிச்சையியல் சாளரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நச்சுத் தன்மைகொண்ட விளைவுக்கான விரும்பப்படும் விளைவேற்படுத்தல் விகிதத்தை விவரிக்கிறது. குறுகிய சிகிச்சை குறியீடு (ஒன்றுக்கு நெருங்கிய மதிப்பு) கொண்ட ஒரு சேர்மம் அதன் நச்சுத் தன்மை அளவுக்கு அருகாமை மதிப்பிலான விரும்பத்தக்க விளைவை வழங்குகிறது. பரந்த சிகிச்சைக் குறியீடு (ஐந்துக்கும் அதிகம்) கொண்ட ஒரு சேர்மாமானது அதன் நச்சுத் தன்மை அளவுக்கும் மிகவும் குறைவான விரும்பத்தக்க விளைவைக் கொடுக்கிறது. குறைந்த மதிப்பு கொண்டவற்றை அளவறிதலும் நிர்வகிப்பதும் கடினமாகும், மேலும் அவற்றுக்கு சிகிச்சையியல் மருந்து கண்காணிப்பு தேவையாகலாம் (வேஃபரின், சில வலிப்புத் தாக்க எதிர்ப்பான்கள், அமினோகிளைக்கோசைடு நோய்க்கிருமி கட்டுப்படுத்தி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்). பெரும்பாலான புற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் குறுகிய சிகிச்சைக் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளன: கட்டிகளை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் அளவுகளின் போது எப்போதும் நச்சுத் தன்மை கொண்ட பக்க விளைவுகள் எதிர்கொள்ளப்படுகின்றன.

மருந்து உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனை

மருந்துகளின் உருவாக்கம் என்பது மருத்துவத்தின் மிகவும் முக்கியமான விவகாரமாகும், ஆனால் அதற்கு வலுவான பொருளாதாரவியல் மற்றும் அரசியல் தாக்கங்களும் உள்ளன. நுகர்வோர் மீதான முறைகேட்டுப் பயன்பாட்டைத் தடுக்க, பல அரசாங்கங்கள் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் நிர்வகித்தலை ஒழுங்குபடுத்துகின்றன. அமெரிக்காவில், மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகமாகும், மேலும் அது அமெரிக்க மருந்திருப்பு அமைப்பினால் விதிக்கப்பட்ட தரநிலைகளைச் செயல்படுத்துகிறது. ஐரோப்பிய யூனியனில் மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பு EMEA ஆகும், அது ஐரோப்பிய மருந்திருப்பு அமைப்பினால் விதிக்கப்பட்ட தரநிலைகளைச் செயல்படுத்துகிறது.

பல உறுப்பு மருந்துகளைக் கொண்ட மொத்த மருந்துக்கூட்டமைப்பின் வளர்சிதைமாற்ற நிலைத்தன்மை மற்றும் வினைபுரிதல் தன்மை ஆகியவற்றின் மருந்தியல் வளர்சிதைமாற்றத் தன்மை மற்றும் நச்சியல் ஆய்வுகள் ஆகியவை பற்றி மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மருந்தியல் வளர்சிதைமாற்றத்திற்கான அளவறி முன்கணிப்புக்கான பல முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன; SPORCalc பரணிடப்பட்டது 2009-03-18 at the வந்தவழி இயந்திரம் என்பது சமீபத்திய கணிப்பு முறைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்[6]. ஒரு மருந்து சேர்மத்தின் வேதிக்கட்டமைப்பு சிறிதளவு மாற்றப்பட்டால், அது சிறிதளவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ சேர்மத்தின் மருத்துவ குணங்களை மாற்றக்கூடும், அது தனது மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அடிமூலக்கூறு அல்லது ஏற்பியின் இடம் ஆகியவற்றின் கட்டமைப்பு இயைபுடன் தொடர்புடையதாக இருப்பதால் இந்த விளைவு மாற்றமானது அதில் செய்யப்படும் மாற்றத்தின் அளவைப் பொறுத்து இருக்கும், இந்தக் கருத்தே கட்டமைப்பியல் செயல்பாட்டு தொடர்பு (ஸ்ட்ரக்ச்சுரல் ஆக்டிவிட்டி ரிலேஷன்ஷிப்) (SAR) எனப்படுகிறது. இதில் அதாவது பயன்மிக்க செயல்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால், சேர்மத்தின் விரும்பத்தக்க மருத்துவ விளைவுகளை அதிகரிக்கும் முயற்சியாக, வேதியியலாளர் பிரிதொற்றுகள் எனப்படும் அவற்றை ஒத்த சேர்மங்களை உருவாக்குவர் என்பது இதன் பொருளாகும். இந்த உருவாக்க கட்டமானது முழுவதும் முடிய சில ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம், மேலும் இது மிகவும் செலவு நிறைந்ததும் ஆகும்.[7]

இந்தப் புதிய பிரிதொற்றுகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை மனிதர்கள் உள்ளெடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, மனித உடலில் அதன் நிலைத் தன்மை மற்றும் மாத்திரை அல்லது கூழ்மம் போன்ற, விரும்பிய உறுப்பு அமைப்புக்கு அதை வழங்குவதற்கானச் சிறப்பான வடிவம் ஆகியவை தீர்மானிக்கப்பட வேண்டும். முடிவதற்கு 6 ஆண்டுகள் வரையிலான காலத்தை எடுத்துக்கொள்ளும் விரிவானச் சோதனைக்குப் பிறகு, புதிய மருந்தானது சந்தைப்படுத்தலுக்கும் விற்பனைக்கும் தயாராகிறது.[7]

பிரிதொற்றுகளை உருவாக்குவதற்கும் சோதிப்பதற்கும் நீண்ட காலம் தேவைப்படுவது மற்றும் வழக்கமாக சாத்தியக்கூறுள்ள 5000 மருந்துகளில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாகச் சந்தைக்கு வருகிறது என்ற உண்மை ஆகியவற்றின் காரணமாக, இது மிகவும் செலவு மிகுந்த வழியாக உள்ளது, இதற்கு மில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவாகிறது. இந்தச் செலவை ஈடுசெய்வதற்காக மருந்தியல் நிறுவனங்கள் பலவற்றைச் செய்யக்கூடும்:[7]

  • நிறுவனத்தின் நிதியைச் செலவு செய்வதற்கு முன்பாக, ஒரு புதிய தயாரிப்புக்கான சாத்தியக்கூறுள்ள தேவையைப் பற்றி கவனமாக ஆராய்ச்சி செய்தல்.[7]
  • ஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்தை ஒதுக்கியளிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு பிற எந்த நிறுவனங்களும் உருவாக்குவதைத் தடுக்க, காப்புரிமை பெறுதல்.[7]

மருந்து சட்டப் பாதுகாப்பு

அமெரிக்காவில், மருந்துகளின் பயன்பாட்டுக்கான ஒப்புதலளிப்பதற்கான வழிகாட்டல்களை உருவாக்குவது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) பொறுப்பாகும். FDA ஐப் பொறுத்தவரை ஒப்புதலளிக்கப்பட வேண்டிய மருந்துகள் பின்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  1. மருந்தானது, ஒப்புதலளிக்க விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நோய்க்கு எதிரான விளைவுத்திறனுள்ளது என அறியப்பட வேண்டும்.
  2. மருந்தானது பரவலான விலங்குகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள் ஆகியச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட பாதுகாப்பு தேர்வளவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.

வழக்கமாக FDA ஒப்புதல் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். விலங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட சோதனைகள் விரிவானதாகவும் மருந்தின் விளைவுத்திறன் மற்றும் நச்சுத் தன்மை ஆகியவற்றை மதிப்பிட உதவியாக இருக்கும் வகையில் பல உயிரினங்களைக் கொண்டு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒப்புதலளிக்கப்பட்ட மருந்தின் பயன்பாட்டுக்கான அளவானது ஒரு சிகிச்சைக்குரிய விளைவு அல்லது விரும்பிய விளைவை ஏற்படுத்தும் வகையிலான பொருத்தமான வரம்புக்குள் இருக்குமாறு அமைக்கப்படுகிறது.[8]

அமெரிக்காவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் விளைவுத்திறன் ஆகியவை, 1987 ஆம் ஆண்டின் கூட்டிணைய பரிந்துரைக்கப்படும் மருந்து சந்தைப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

மருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தல் முகமையும் (MHRA) UK வில் இதே போன்ற பங்கு உள்ளது.

கல்வி

மருந்தியல் துறையிலான கல்வி உலகளவில் பல பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகிறது.
மருந்தியல் கல்வித் திட்டங்கள் மருந்தாள்மை கல்வித் திட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மருந்தியலின் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அதில் அவர்கள் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புக்கு வழிகோலும் வகையிலான இயங்கியலைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காக பொருள்களின் விளைவுகளைப் பற்றிப் படிக்கின்றனர். மருந்தாள்மை மாணவர்கள் மருந்து விநியோகிக்கும் நிறுவனங்கள் அல்லது நோயாளியின் மீது கவனம் செலுத்தும் பிற பொறுப்புகளில் இருப்பார்கள், ஆனால் மருந்தியலாளர்கள் பெரும்பாலும் ஆய்வகச் சூழலிலேயே இருப்பார்கள்.

சில உயர் கல்வி நிறுவனங்கள் மருந்தியல் மற்றும் நச்சியல் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரே கல்வித் திட்டமாக வழங்குகின்றன. மிச்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டியும் இதைப் போன்றதே ஆகும். மிச்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டி மருந்தியல் & நச்சியல் ஆகிய துறைகளிலான PhD பயிற்சியை வழங்குகிறது, இதனுடன் சுற்றுச்சூழல் நச்சியல் சிறப்புக் கல்வி விருப்பப்பாடமாக உள்ளது. அதில் ஒருங்கிணைக்கப்பட்ட மருந்தியலில் தொழில்முறை அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மருந்தியல்&oldid=3521970" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை