மிக்-29

மிகோயன் மிக்-29 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது சோவியத் ஒன்றியத்தில் மிகோயன் நிறுவனத்தால் 1970 களின் பிற்பாதியில் வடிவமைக்கப்பட்ட வான் மேன்மை வானூர்தியாகும்.[3]

மிக்-29
MiG-29
வகைவான் மேன்மை
பன்முகச் சண்டை
உருவாக்கிய நாடுசோவியத் ஒன்றியம்
வடிவமைப்பாளர்மிகோயன்
முதல் பயணம்6 அக்டோபர் 1977[1]
அறிமுகம்ஆகத்து 1983
தற்போதைய நிலைபயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள்உருசிய வான்படை
இந்திய வான்படை
உசுபெக் வான்படை
உக்ரைனிய வான்படை
உற்பத்தி1981–
தயாரிப்பு எண்ணிக்கை>1,600[2]
மாறுபாடுகள்மிக்-35

முதலில் எதிரி விமானங்களுக்கு எதிராகப் போரிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மிக்-29 வானூர்திகள் பலவிதமான செயல்பாடுகளைச் செய்யும் திறன் கொண்டவை. இவை பல ஏவுகணைகள் மற்றும் துள்ளியமாக தாக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றை தாங்கிச் செல்ல வல்லவை. வான்படை தவிர கடற்படையால் பயன்படுத்த எதுவாக வானூர்தி தாங்கிக் கப்பல்களிலிருந்து ஏவ ஏதுவாக இது மாற்றியமைக்கப்பட வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டது.

வடிவமைப்பு

மிக்-29 சுகோய் எஸ்.யு-27 உடன் பரந்த காற்றியக்கவியல் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. ஆனால் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இந்த வானூர்தி தலா இரண்டு நடு இறக்கைகள், வால் இறக்கைகள் மற்றும் செங்குத்து துடுப்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. தானியங்கி பட்டிகைகள் இறக்கைகளின் முன் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது; அவை ஆரம்பத்தில் நான்கு பிரிவுகளாகவும், பிந்தைய வகைகளில் ஐந்து பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பின் இறக்கைகளின் விளிம்புகளில் கட்டுப்பாடு இதழ்கள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் உள்ளன.[4]

இது பரந்த இடைவெளி கொண்ட இரண்டு தாரைப் பொறிகளைக் கொண்டுள்ளது. பொறிகளுக்கு இடையே உள்ள இடைவெளி அதிக ஏற்றத்தை உருவாக்குகிறது, இது வானூர்தியின் பறக்கும் திறனை மேம்படுத்துகிறது. பொறிகள் முன் இறக்கைகளுக்கிடையே பொருத்தப்பட்டிருக்கும் உள்ளீட்டு துளைகள் மூலம் காற்றை உள்ளே இழுக்கின்றன. இவை அதிக மாக் எண் வேகத்தில் பறக்க உள்ளிழுக்கும் காற்றின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய சரிவுகளைக் கொண்டுள்ளன.[5] இது வெளிப்புற எரிபொருள் தொட்டிகள் இல்லாமல் 1500 கி.மீ. தூரமும், வெளிப்புற தொட்டிகளையும் கொண்டு 2100 கி.மீ. தூரமும் பறக்க வல்லது.[6]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிக்-29&oldid=3923843" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை