மின்னல் கடத்தி

இடி தாங்கி அல்லது மின்னல் கடத்தி (Lightning rod or Lightning conductor) என்பது ஓர் உலோகக் கம்பி கட்டமைப்பில் பொருத்தப்பட்டு மின்னல் தாக்குதலில் இருந்து கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட அமைப்பாகும். மின்னல் ஒரு கட்டமைப்பைத் தாக்கினால் நெருப்பு அல்லது அதிக மின்சாரம் தோன்றி அக்கட்டமைப்பு பாதிக்கப்படும். மாறாக இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்தால் மின்னல் முதலில் இடிதாங்கியை தாக்கும். இடிதாங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பி வழியாக மின்னல் தரைக்கு கடத்தப்பட்டு மின்சாரம் பாய்ந்து இறக்கும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

மின்னல் பாதுகாப்புத் திட்டத்தின் ஓர் எளிய வரைபடம்
கூர்மையான ஓர் இடிதாங்கி

மின்னல் பாதுகாப்பு அமைப்பில் மின்னல் கடத்தி என்பது அவ்வமைப்பின் ஒற்றை அங்கமாகும். மின்னல் கடத்தி அதன் பாதுகாப்பு செயல்பாட்டை மேற்கொள்ள பூமியுடன் ஓர் இணைப்பு தேவைப்படுகிறது. உள்ளீடற்ற கம்பிகள், திடமான கம்பிகள், கூர்மையான கம்பிகள், வட்டமான கம்பிகள், தட்டையான கீற்றுகள் அல்லது தடிப்பான முடித்தூரிகை போன்ற பல வடிவங்களில் மின்னல் கடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

மிக உயரமான கட்டிடங்களை மின்னலிலிருந்து பாதுகாக்க மின்னல் கடத்தி உதவுகிறது. இதனை பேச்சு வழக்கில் இடிதாங்கி என்று கூறுவதும் உண்டு. இது கட்டிடத்தின் வழியே தரைக்குச் செல்லும் ஒரு நீண்ட, தடித்த தாமிரத் தண்டினைக் கொண்டிருக்கும். தண்டின் கீழ் முனையானது, தரையின் அதிக ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள தாமிரத் தட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் முனையில் பல்வேறு வடிவ கூர்முனைகள் உடைய தாமிர ஊசிகள் இணைக்கப்பட்டு, கட்டிடத்தின் உயரமான பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

எதிர்மின்னூட்டம் பெற்ற மேகம் கட்டிடதின் மேல் செல்லும்பொது, கடத்தியின் கூர் முனைகளில் நேர்மின்னூட்டம் தூண்டப்படுகிறது. நேர்மின்னுட்டம் பெற்றுள்ள கூர்முனைகள் அருகில் உள்ள காற்று மூலக்கூறுகளை அயனியாக்கம் செய்கின்றன. இதனால் மேகத்தில் உள்ள எதிர் மின்னோட்டம் சமன் செய்யப்பட்டு மேகத்தின் மின்னழுத்தம் குறைகிறது. கடத்தியால் கவரப்பட்ட எதிர்மின்னுட்டம் தரையை நோக்கிப் பயணிக்கிறது. இதன் மூலம் கட்டிடம் மின்னலின் தக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.

அனைத்து வகையான மின்னல் கட்த்திகளுக்கும் உள்ள பொதுவான முக்கிய பண்பு என்னவென்றால், அவை அனைத்தும் தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற கடத்தும் பொருட்களால் ஆனவை என்பதாகும். தாமிரமும் அதன் கலப்பு உலோகங்கங்களும் இப்பயன்பாட்டிற்கான மிகவும் பொதுவான பொருட்களாகும் [1].

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இடிதாங்கி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மின்னல்_கடத்தி&oldid=3680667" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை