மூன்றாம் உலகப் போர்

எதிர்க்காலம்


உலகப் போர் III (இதனை WWIII அல்லது மூன்றாம் உலகப்போர் என்பதாகவும் கூறுகின்றனர்) இரண்டாம் உலகப் போர் என்பதன் கருத்தாக்கத் தொடர்ச்சியாக, அணு ஆயுதம் கொண்டு, மிகுந்த அளவில் அழிவை உருவாக்கும் இயல்பு கொண்ட போரினைக் குறிப்பிடுகிறது.

மூன்றாவது உலகப் போருடன் அணு ஆயுதப் பேரழிவு அடிக்கடி தொடர்புறுகிறது.

இப்போரானது, பல நாடுகளிலும் ராணுவ மற்றும் பொது அதிகாரிகளால் திட்டமிடப்பட்டும் மற்றும் புனைவுகளில் ஆராயப்பட்டும் வருகிறது. குறைந்த அளவில் அணு ஆயுதங்களின் பயன்பாடுகள் என்னும் பாராம்பரியமான காட்சிகள் துவங்கி கோள் என்பதையே அழித்து விடக் கூடியதான வரையிலும் கருத்தாக்கங்களின் வீச்சு பரந்து பட்டதாக உள்ளது.

சோவியத் ஒன்றியம் சிதைவதற்கும் மற்றும் பனிப்போர் முடிவதற்கும் முன்னராக உருவான ஆயுதப் போட்டியின் விளைவாக, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் இடையில் போர் மூள்வது நடைபெறும் என்று கூற இயலாவிடினும், ஒரு சாத்தியம் என்பதான ஒரு முன்னறிவித்தல் இருந்தே வந்தது. இறுதிநாள் கடியாரம் என்பது, 1947ஆம் ஆண்டு துருமேன் கோட்பாடு உருவானது முதலாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது உலகப் போர் என்பதன் சின்னமாக வழங்கி வருகிறது.

மாபெரும் அச்சுறுத்தல்கள்

1956ஆம் ஆண்டு, சூயஸ் நெருக்கடி யின்போது, "இப்போரினை நிறுத்தாவிடில், இது மூன்றாம் உலகப் போராக மாறிவிடும் ஆபத்து உள்ளது" என சோவியத் பிரதமரான நிக்கோலாய் பல்கானின் (Nikolai Bulganin) பிரிட்டானிய பிரதமர் அந்தோணி ஈடனுக்கு (Anthony Eden) மடல் ஒன்றை அனுப்பினார்.[1]

1962ஆம் ஆண்டின் கியூபா ஏவுகணை நெருக்கடி மூன்றாம் உலகப்போர் என்னும் ஆபத்திற்கு மிக அருகில் சென்ற ஒரு நிகழ்வாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், மூன்றாம் உலகப்போருக்கு மிக அருகிலான நிகழ்வுகள் என வேறு பலவற்றையும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.[சான்று தேவை]

1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள், கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் 007 என்பதனை சோவியத்துக்கள் சுட்டு வீழ்த்தி 25 நாட்களே ஆகியிருந்த நிலையில், ஸ்டானிஸ்லே பெத்ரோவ் (Stanislav Petrov) என்பவரின் ஆணைக்குக் கீழுருந்த எச்சரிக்கை நிலையம் ஒன்று, ஐந்து கண்ட-இடை எறி ஏவுகணைகள் உள்நோக்கி வருவதாகத் தவறுதலான எச்சரிக்கையை விடுத்தது. இது தவறான எச்சரிக்கை என பெத்ரோவ் சரியாகப் புரிந்து கொண்டார். ஆகவே, தாம் கண்டறிந்ததை அவர் தமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை. பெத்ரோவின் நடவடிக்கையினால் மூன்றாம் உலகப் போர் மூளாதிருந்தது என்றே கூறலாம். காரணம், உள்வரும் எறி ஏவுகளைகளுக்கு எதிராக அணு ஆயுதங்களால் உடனடியாக பதிலிறுப்பு செய்வது என்பதே அப்போதைய சோவியத் கொள்கையாக இருந்தது.[2]

1983ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் துவங்கி ஓர் பத்து நாட்களுக்கான ஆணைத்தள நேட்டோ பயிற்சி முகாமாக நடைபெற்ற ஏபில் ஆர்ச்சர் 83 (Able Archer 83) என்பதில் சோவியத்துக்கள் தங்களது அணு ஆயுதங்களை ஆயத்த நிலையில் வைத்தது மட்டும் அன்றி, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனி யில் உள்ள தங்களது விமான அலகுகளையும் விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். மூன்றாம் உலகப் போருக்கான மிக நெருக்கமான அழைப்பு என்பதாகவே பல வரலாற்று ஆசிரியர்களும் இதனைக் கருதுகின்றனர்.[3]

1999ஆம் வருடம் ஜூன் மாதம் 12 துவங்கி 26ஆம் நாள் வரையிலும் ரஷ்யா மற்றும் நேட்டோ துருப்புக்கள் கொசாவோவில் உள்ள பிரிஸ்டினா விமான நிலையத்தின் மீதான ஒரு பரஸ்பர எதிர்ப்பு கொண்டிருந்தனர். ரஷ்ய மற்றும் நாட்டோ துருப்புக்கள் கொசாவோவில் உள்ள பிரிஸ்டினா விமான நிலையத்தின் மீதான ஒரு பரஸ்பர எதிர்ப்பு கொண்டிருந்தனர்.நாட்டோ தளபதி வெஸ்லி கிளார்க் (Wesley Clark), இதற்குப் பதிலிறுப்பாக பிரித்தானிய நாட்டு தலைமைத் தளபதியான சர் மைக் ஜாக்சன் (Sir Mike Jackson) வானிலிருந்து இறங்கும் வீரர்படை கொண்டு இந்த விமான நிலையத்தைத் தகர்க்க வேண்டும் எனக் கோரினார். "உங்களுக்காக நான் மூன்றாவது உலகப் போரைத் துவக்கப் போவதில்லை", என ஜாக்சன் இதற்குப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.[4]

சிஐஏ நிறுவனத்தின் மூல முகவரான மைல்ஸ் கோப்லேண்ட் (Miles Copeland), எதிர்காலத்தில் இஸ்லாமிய/ அராபிய உலகுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் ஈடுபடுமாறு சோவியத் அவர்களை ஏய்க்குங்காலை மூன்றாவது உலகப் போர் துவங்கி விடும் என்று கோரினார்.[5]

"உலகப் போர்" என்பதை நிர்ணயிப்பதிலான சிரமம்

"World War" என்னும் ஆங்கிலச் சொல்லானது இரண்டாம் மோதல் போரின்போதுதான் பரவலாகப் பயன்படலானது. ஜெர்மானிய உயிரியலாளரும், தத்துவவாதியுமான எர்னஸ்ட் ஹெக்கல் (Ernst Haeckel) முதலாம் உலகப் போருக்குப் பின்னர் மிக விரைவிலேயே இவ்வாறு எழுதினார்:

முதலாம் உலகப் போர் என்னும் சொற்றொடரின் முதன் முறையான பயன்பாடு இது. இதன் ஆரம்ப காலப் பயன்பாடு 1913ஆம் ஆண்டின்போதே அறியப்பட்டிருந்தது. போரின் இறுதிக் கட்டம் நெருங்குகையில் இந்தச் சொல் மீண்டும் பயன்படலானது. ஆங்கிலப் பத்திரிகையாளர் சார்லெஸ். ஏ. ரெபிங்டன் (1858–1925) இவ்வாறு எழுதினார்:

1920ஆம் ஆண்டுகளில் பெரும்போர் என்று அறியப்பட்டிருந்த இது, பெரும்போர் என்று அழைக்கத் தகுதியுற்றிருந்த நெப்போலியப் போர்களை கண்டு கொள்ளாமல் விட்டது. பனிப்போர் என்பதனைப் போல இதுவும், கூட்டணி மோதல்களே எனினும், இரண்டாம் உலகப் போரினைப் போல தொடர்ச்சியான ஒரே மோதல் அல்ல.

மூன்றாவது உலகப் போர் எனக் கருதும் அளவிலான பெரும் போர் ஒன்று உருவாவதற்குப் பல வருடங்கள் ஆகலாம். முதல் இரண்டு உலகப் போர்களுக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற தீவிரமான போர்கள் மற்றும் அவற்றுடன் நெருக்கமான முறையில் தொடர்புற்றிருந்தவை ஆகிய அனைத்தும் தற்போது பெரும் அளவிலான போர் என்பதன் பகுதியாக இல்லை. இவற்றில் 1912ஆம் ஆண்டு துவங்கி 1913ஆம் ஆண்டு வரையிலான பால்கன் போர்கள், 1919ஆம் ஆண்டு துவங்கி 1921ஆம் ஆண்டு வரையிலான போலந்து-சோவியத் போர், மச்சூரியாவிலும் பின்னர் சீனாவிலும் ஜப்பானின் படையெடுப்பு, ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர், எதியோப்பியா மற்றும் ஆல்பேனியா மீதான இத்தாலியப் படையெடுப்புகள், 1938ஆம் ஆண்டு ஜெர்மன் ஆஸ்திரியா நாட்டைக் கைப்பற்றிய நிகழ்வான அன்ஸ்க்லஸ் மற்றும் அதைத் தொடர்ந்து செக்கோஸ்லோவாக்கியா கையகப்பட்டது ஆகியவை அடங்கும். எனவே, மூன்றாம் உலகப் போரின் துவக்கம் எது என்பதை பின்னோக்கிக் கண்டு ஒரு குறிப்பிட்ட நிகழ்வினைக் குறிப்பிட இயலாது.

சில பகுப்பாய்வாளர்களும்[7] மற்றும் வரலாற்று ஆசிரியர்களும்[8] பனிப்போரை மூன்றாம் உலகப் போர் என அடையாளம் காணலாம் எனக் கருதுகின்றனர். காரணம், அமெரிக்கா மற்றும் பின்னர் நேட்டோ ஆகியவை ஒரு தரப்பிலும், சோவியத் ஒன்றியம் மற்றும் வார்சா ஒப்பந்தம் என்பதன் உறுப்பினர் நாடுகள் மறுபுறத்திலும் தங்களது பிரதிநிதிகளான போராளிகளைக் கொண்டு போரிட்டன.[9] 2006ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் (George W. Bush) தற்போதைய பயங்கரவாதத்தின் மீதான போர், "மூன்றாம் உலகப் போரி"னை ஒத்தது எனக் கூறினார்.[10]

பிரபலக் கலாசாரம்

பிரபலக் கலாசாரத்தில் மூன்றாம் உலகப் போர் என்பது பொதுவான ஒரு கருப்பொருளாக உள்ளது. மூன்றாம் உலகப் போர் என்பதன் ஒரு அடிப்படை நிலையாக நிறைவேற்றம் மற்றும் பின்விளைவினைச் சித்தரிப்பதான இலக்கியமாக, பின் வருவதை முன்னுரைப்பதான அறிவியல் புனைவுகள் இருந்து வருகின்றன. மூன்றாம் உலகப் போரினை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. பல சித்திரக் கதைகள், ஒளிக்காட்சி விளையாட்டுக்கள், பாடல்கள், பத்திரிகைகள், வானொலி நிரல்கள், செய்தித்தாள்கள், வலைத்தளங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஆகியவற்றில் இது குறிப்பிடத்தக்க கருப்பொருளாக உள்ளது.

மேற்கோள்கள்

குறிப்புகள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை