மைக்கேல் ஆட்டன்

மைக்கேல் ஆட்டன் (Michael Houghton (* 1949) ஒரு பிரித்தானிய அறிவியலாளர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை ஆர்வி ஆலதர், சாலசு இரைசு ஆகியோருடன் சேர்ந்து கல்லீரல் அழற்சி தீநுண்மி சி-யைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார்[1]. இவர் தன்னுடைய முனைவர்ப் பட்டத்தை 1977 இல் இலண்டன் அரசரின் கல்லூரியில் பெற்றார். சீ-லிம் சூ, சியார்ச்சு குவோ, தானியல் பிராடிலி ஆகியோருடன் சேர்ந்து 1989 இல் கல்லீரல் அழற்சி தீநுண்மி சி-யைக் கண்டுபிடித்தார்.[2] இவர் 1986 இல் கல்லீரல் அழற்சி தீநுண்மி டி-யையும் மற்றவர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்தார்.[3] கல்லீரல் அழற்சி தீநுண்மி சி கண்டுபிடிப்பால் இரத்தத்தில் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்கும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. குறிப்பாக இரத்தஞ்செலுத்தும் பொழுது இந்தத் தீநுண்மி உள்ளதா என்று கண்டறிதல் மிகவும் தேவையானது. இரத்தஞ்செலுத்தும் பொழுது முன்பு இந்நோய் பற்றிக்கொள்ள இருந்த தீவாய்ப்பு மூன்றில் ஒரு பகுதியாக இருந்ததில் இருந்து இரண்டு மில்லியனில் ஒருபகுதியாகக் குறைந்தது.[4][5] உடல் உருவாக்கும் நோய் எதிர்ப்புப் பொருள் (முறி) இருப்பதைக் கண்டுபிடிக்கும் முறையால் ஆண்டுதோறும் அமெரிக்காவில் மட்டும் 40,000 நோய்ப்பற்றுதல்களைத் தவிர்த்திருப்பதாக ஒரு மதிப்பீடு காட்டுகின்றது.[6] ஆட்டன் (Houghton) தற்பொழுது கனடாவில் உள்ள ஆல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தில் தீநுண்மி நோயியல் துறையில் இலீ சிங்குப் பேராசிரியராக உள்ளார். அங்கு இவர் இலீ சிங்கு தீநுண்மி நோயியல் கழகத்தின் இயக்குனராகவும் உள்ளார்.[7]

மைக்கேல் ஆட்டன்
Michael Houghton
துறைநுண்ணுயிரியியல்
தீநுண்மியியல்
பணியிடங்கள்ஆல்பேர்ட்டா பல்கலைக்கழகம்
சிரோன் கார்ப்பொரேசன்
கல்விகிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (இ.அறி (BSc))
இலண்டன் அரசரின் கல்லூரி (King's College London) (மு.அறி (MSc), முனைவர் (DPhil))
ஆய்வேடுRNA Polymerases and Transcription in the Chicken Oviduct (1977)
ஆய்வு நெறியாளர்James Chesterton
அறியப்படுவதுகல்லீரல் அழற்சி தீநுண்மி சி
கல்லீரல் அழற்சி தீநுண்மி டி
விருதுகள்காரல் இலாண்டுதைனர் நினைவுப் பரிசு (1992)
இராபேர்த்து கோக்கு பரிசு (1993)
வில்லியம் பூமோன் பரிசு (1994)
இலசுக்கர் விருது (2000)
கைர்டினர் நிறுவன அனைத்துலக விருது (2013 - மறுத்துவிட்டார்)
நோபல் பரிசு மருத்துவம் (2020)
இணையதளம்
Official website

இளமைக்காலமும் கல்வியும்

மைக்கேல் ஆட்டன் 1949 இல் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்தார்.[8] அவர் தன்னுடைய 17 ஆவது அகவையில் நுண்ணுயிரியியல் அறிஞர் இலூயி பாசுச்சர் (Louis Pasteur) அவருடைய வாழ்க்கையைப் படித்து உள்ளெழுச்சி பெற்றார்.[9][10] மைக்கேல் ஆட்டன் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்து 1972 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் உயிர்வேதியியல் துறையில் 1977 ஆம் ஆண்டு இலண்டன் அரசரின் கல்லூரியில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.[11]

பரிசுகளும் பெருமைகளும்

  • 1992 - காரல் இலாண்டுதைனர் நினைவுப் பரிசு (Karl Landsteiner Memorial Award) [12]
  • 1993 - இராபேர்த்து கோக்கு பரிசு (Robert Koch Prize) [13]
  • 1994 - வில்லியம் பூமோன் பரிசு (William Beaumont Prize) [14]
  • 1994 - பேயாட்டிரிசு விட்டீயலோ பரிசுய் (Beatrice Vitiello Award) [சான்று தேவை]
  • 1998 - கல்லீரல் அழற்சி நிறுவன அனைத்துலகப் பரிசு [சான்று தேவை]
  • 1999 - ஆன்சு பாப்பர் விருதுஇ (Hans Popper Award) [சான்று தேவை]
  • 2000 - இலாசுக்கர் விருது (Lasker Award) [15]
  • 2005 - தேல் ஏ. சுமித்து நினைவுப்பரிசு (Dale A. Smith Memorial Award) [சான்று தேவை]
  • 2009 - ஏப்புதார்த்து வாணாள் உயரெட்டல் பரிசு (Hepdart Lifetime Achievement Award) [சான்று தேவை]
  • 2013 - 2013 இல் 100,000 கனடிய வெள்ளி மதிப்புள்ள கைரிடினர் நிறுவன அனைத்துலகப் பரிசை (Gairdner Foundation International Award) மறுத்தார். தன்னுடன் ஆய்வு செய்த முனைவர் சி-லிம் சூ (Qui-Lim Choo) அவர்களையும் முனைவர் சியார்ச்சு கூவோ (George Kuo) அவர்களையும் சேர்த்து பரிசளிக்காததால் மறுத்தார்.[16][17]
  • 2020 - நோபல் பரிசு மருத்துவம்[1]

இவருடைய தாய்ப்பல்கலைக்கழகமாகிய கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் இவருக்கு 2019 இல் பெருமைய முனைவர்ப் பதக்கம் அளித்துள்ளது.[18]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மைக்கேல்_ஆட்டன்&oldid=3606574" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை