லம்ஜுங் மாவட்டம்

லம்ஜுங் மாவட்டம் (Lamjung District) (நேபாளி: लमजुङ जिल्ला ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது.இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிட நகரமான பேசிசஹர் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.

நேபாளத்தில் லம்ஜுங் மாவட்டத்தின் அமைவிடம்
லம்ஜுங் மாவட்டத்தின் அன்னபூர்ணா கொடுமுடி

கண்டகி மண்டலத்தில் அமைந்த லம்ஜுங் மாவட்டம் 1,692 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,67,724 ஆகும். [1]நிலவியலின் படி, இம்மாவட்டம் நேபாளத்தின் நடுவில் அமைந்துள்ளது. குரூங் இன மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். நேபாள மொழி, குரூங் மொழி மற்றும் மகர் மொழிகள் இங்கு பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் அன்னபூர்னா கொடுமுடி அமைந்துள்ளது.

படக்காட்சிகள்

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

லம்ஜுங் மாவட்டம் இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி பகுதிகள், டிரான்ஸ்-இமயமலை என ஏழு காலநிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி நிர்வாகம்

லம்ஜுங் மாவட்ட உள்ளாட்சிப் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

லம்ஜுங் மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களும், பேசிசஹர் மற்றும் சுந்தர் பஜார் என இராண்டு நகராட்சிகளும் மேற்கொள்கிறது.

2015 நிலநடுக்கம்

25 ஏப்ரல் 2015 அன்று ஏற்பட்ட நேபாள நிலநடுக்கம் இம்மாவட்டத்தின் அருகில் மையம் கொண்டிருந்தது.[3] இதனால் காட்மாண்டு நகரம் பெரும் பொருட் சேதமும், உயிர்ச் சேதம் கண்டது.[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lamjung District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லம்ஜுங்_மாவட்டம்&oldid=3285485" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை