லாரி சாங்கர்

விக்கிபீடியாவின் தந்தை

லாரன்சு மார்க் "லாரி" சாங்கர் (பிறப்பு சூலை 16, 1968[1] ) ஓர் அமெரிக்க மெய்யியலாளரும் விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனரும் ஆகும்.[2][3][4]

லாரி சாங்கர்
பிறப்புலாரன்சு மார்க் சாங்கர்
சூலை 16, 1968 (1968-07-16) (அகவை 55)
பெல்வியூ, வாசிங்டன், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ரீட் கல்லூரி
ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்
பணிமுதன்மை ஆசிரியர், சிடிசென்டியம்
வலைத்தளம்
http://larrysanger.org/

அவரது இளமைக்காலம் அங்காரேஜ்,அலாஸ்காவில் கழிந்தது.[2] சிறு வயது முதலே அவருக்கு மெய்யியலில் ஆர்வம் இருந்தது.[5] சாங்கர் மெய்யியலில் இளங்கலைப் பட்டத்தை 1991ஆம் ஆண்டு ரீட் கல்லூரியில் படித்தார். முதுகலைப் பட்டத்தை 1995ஆம் ஆண்டிலும் முகமைப் பட்டத்தை(Ph.D.) 2000ஆம் ஆண்டிலும் ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[6] அவரது மெய்யியல் ஆய்வுகள் அறிவு குறித்த கொள்கைகளை பற்றியதாக இருந்தது.[5]அவர் பல இணைய தகவல் களஞ்சியத் திட்டங்களில் பங்கெடுத்தார்.[7] நூபீடியாவின் முன்னாள் முதன்மை ஆசிரியர்;[8] (2001–2002)காலகட்டத்தில் நூபீடியாவின் சந்ததி விக்கிப்பீடியாவின் முதன்மை அமைப்பாளர்;[9] மற்றும் சிடிசென்டியத்தின் தற்போது செயலிலில்லாத முதன்மை ஆசிரியர்.[10] அவர் நூபீடியாவில் பணிபுரிந்தபோது கட்டுரை வடிவமைக்கும் செயல்பாட்டை உருவாக்கினார்.[11] விக்கிப்பீடியா உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார்.[12] விக்கி மென்பொருளைக் கொண்டு விக்கிப்பீடியா அமைக்கும் கருத்தை முன்மொழிந்தவர் அவரே.[12] துவக்கத்தில் விக்கிப்பீடியா நூபீடியாவின் கூடுதல் திட்டமாக இருந்தது.[12] விக்கிப்பீடியா சமூகத்தின் முதல் தலைவராக விளங்கி[13] பல ஆரம்ப கொள்கைகளை வடிவமைத்தார்.[14] விக்கியை அடிப்பையாகக் கொண்ட மாற்று விக்கித்திட்டமான சிடிசென்டியத்தை வழிநடத்தினார்.[15]

சாங்கர் 2002ஆம் ஆண்டு விக்கிப்பீடியாவை விட்டு வெளியேறிய பிறகு விக்கிப்பீடியா திட்டத்தின் குறைபாடுகளை கூறிவந்தார்.[16] விக்கிப்பீடியா பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும்,துறை வல்லுனர்கள் இல்லாதநிலையில், நம்பிக்கைத்தன்மையை இழந்துள்ளதாகக் குறை கூறினார்.[17] திட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஓகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விரிவுரையாளராக பணிபுரிந்தார்.[5] புவி பற்றிய துறை வல்லுனர்களால் எழுதப்பட்ட தகவல் களஞ்சியத்தை தொகுத்தார்.[18] செப்டம்பர் 15, 2006 அன்று விக்கிப்பூடியாவின் பிரிவாக (fork) சிடிசென்டியம் என்ற திட்டத்தை பொது ஊடகங்களுக்கு அறிவித்தார்.[19] முறையாக மார்ச் 25, 2007அன்று இது பயன்பாட்டிற்கு வந்தது.[20] இந்தத் திட்டம் ஓர் நம்பிக்கைக்கு உரிய தகவல்களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.[21] இணையத் தகவல் களஞ்சியத்தில் பொறுப்பு மிகுந்த தொகுப்பாளர் அமைப்பை உருவாக்க சாங்கர் விரும்பினார்.[10]

தற்போது வாட்ச்நோ என்ற திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.[22] மற்றும் பல இணைய சமூகங்களின் கூட்டு செயல்பாடுகளில் அறிவுரையாளராகவும், எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் பகுதிநேரப் பணியாற்றுகிறார்[23]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Larry Sanger
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


en Larry Sanger

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லாரி_சாங்கர்&oldid=3715161" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை