வளைதடிப் பந்தாட்டம்

வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி, ஹொக்கி, Hockey) என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டாக பலரால் கருதப்படுகிறது.

ஹாக்கி விளையாடும் காட்சி

ஆடுகளம்

வளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.

பந்து

பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.

ஆட்டக்காலம்

இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.

ஆட்டக்காரர்கள்

விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.



🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை