வின்டோஸ் என்டி

வின்டோஸ் புதிய தொழில் நுட்பம் (Windows New Technology) எனப்பொருள்படும் வின்டோஸ் என்டி மைக்ரோசாப்டினால் 1993 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்க விண்டோஸ் எண்டி ஓர் விண்டோஸ் இயங்குதளக் குடும்பமாகும். விண்டோஸ் எண்டியே மைக்ரோசாப்டின் முதலாவதும் முழுமையானதும் ஆன 32 பிட் இயங்குதளமாகும். விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் சேவர் 2008 மற்றும் விண்டோஸ் ஹோம் சேவர் ஆகியவை விண்டோஸ் எண்டி குடும்பத்தைச் சார்ந்ததெனினும் அவை விண்டோஸ் எண்டி என சந்தைப்படுத்தப்படுவதில்லை.

வின்டோஸ் என்டி


நிறுவனம்/விருத்தியாளர்:மைக்ரோசாப்ட்
Source model:மூடிய மூலம் / பகிரப்பட்ட மூலம்
Kernel type:Hybrid kernel
Default user interface:வரைகலைப் பயனர் இடைமுகம்
License:மைக்ரோசாப்ட் EULA
Working state:தற்போதைய

முக்கிய வசதிகள்

இவ்வியங்குதள உருவாக்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பல்வேறுபட்ட வன்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்களை ஆதரிப்பதாகும். விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் இன்டெல், i386, ஆல்பா, பவர்பீசி போன்ற புரோசர்களை ஆதரிக்கின்றது.

விண்டோஸ் எண்டி 3.1 ஏ முதலாவது 32பிட் புரோசர்களை ஆதரிக்கும் ஓர் இயங்குதளமாகும். இதனுடன் இயங்கிய விண்டோஸ் 3.1 துண்டாமாக்கப்பட்ட முறையில் நினைவகங்கள் அணுகியது.

என்டிஎப்எஸ் (NTFS) என்றழைக்கப்படும் பாதுகாப்பான கோப்புமுறையானது விண்டோஸ் எண்டிக்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ் எண்டியானது டாஸ் இயங்குதளத்திலான 16 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் விண்டோஸ் 2000 இலிருந்தான பதிப்புக்கள் 32 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் சேமித்துக் கொள்ளும். குறிப்பு விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் FAT 16 இல் 4ஜிகாபைட் வரையிலான அளவை ஆதரிக்கும் எனினும் விண்டோஸ் 98 இதனை ஆதரிக்காது இவ்வாறான கட்டத்தில் விண்டோஸ் எண்டி ஐ எடுத்துவிட்டு விண்டோஸ் 98 போடுவதானாலால் முதலில் ஏதாவது ஒரு விண்டோஸ் எண்டி இயங்குதளமூடாக நிறுவலை ஆரம்பிப்பது போல் வந்துவிட்டு ஹாட்டிஸ்கில் உள்ள பாட்டிசனை அழித்தல் வேண்டும் இல்லாவிடின் விண்டோஸ் 98 நிறுவவியலாது. விண்டோஸ் எண்டி, 2000, எக்ஸ்பி ஆகியன பாட் கோப்புமுறையை ஆதரித்து முற்காப்பின்றி வேகமாக இயங்கினாலும் இவ்வசதியானது விண்டோஸ் விஸ்டாவில் இல்லை.

வெளியீடுகள்

விண்டோஸ் எண்டி வெளியீடுகள்
பதிப்புவர்தகப் பெயர்பதிப்புவெளியீட்டுத் திகதிRTM Build
எண்டி 3.1வின்டோஸ் என்டி 3.1வேர்க்ஸ் ஸ்டேசன் (விண்டோஸ் என்டி என்று பொதுவாக அறியப்படுவது), அட்வான்ஸ் சேவர்27 ஜூலை 1993528
என்டி 3.5விண்டோஸ் என்டி 3.5Wவேர்க்ஸ் ஸ்டேசன், சேவர்21 செப்டம்பர் 1994807
என்டி 3.51விண்டோஸ் என்டி 3.51வேர்க்ஸ் ஸ்டேசன், சேவர்30 மே 19951057
எண்டி 4.0விண்டோஸ் என்டி 4.0வேர்க்ஸ் ஸ்டேசன், சேவர், சேவர் எண்டபிறைஸ் எடிசன், சேவர் எண்டபிறைஸ் எடிசன், டேமினல் சேவர், எம்பெடட்29 ஜூலை 19961381
என்டி 5.0வின்டோஸ் 2000புறொபஷனல், சேவர், அட்வான்ஸ் சேவர், டேட்டா செண்டர் சேவர்17 பெப்ரவரி 20002195
என்டி 5.1வின்டோஸ் எக்ஸ்பிHome, Professional, 64-bit (original), Media Center (original, 2003, 2004 & 2005), Tablet PC (original and 2005), Starter, Embedded, Home N, Professional N25 அக்டோபர் 20012600
என்டி 5.1விண்டோஸ் பண்டமெண்டல்ஸ் பொ லெகஸி பிஸிஸ்N/A8 ஜூலை 20062600
என்டி 5.2வின்டோஸ் சேவர் 2003ஸ்டாண்டட் எண்டபிறைஸ், டேட்டா செண்டர், வெப், ஸ்ரோறேஜ், சிமோல் பிஸ்னஸ் சேவர், கம்பியூட்டர் கிளஸ்டர்24 ஏப்ரல் 20033790
என்டி 5.2விண்டோஸ் எக்ஸ்பி (5.2)64-பிட் 2003, பிறொபஷனல் x6425 ஏப்ரல் 20053790
என்டி 5.2வின்டோஸ் ஹோம் சேவர்N/A16 ஜூலை, 20073790
என்டி 6.0வின்டோஸ் விஸ்டாஸ்டாட்டர், ஹோம், பேஸிக், ஹோம் பிரிமியம், பிஸ்னஸ், எண்டபிறைஸ், அல்டிமேட், ஹோம் பேஸிக் என், பிஸ்னஸ் என்வணிகரீதியானது: 30 நவம்பர், 2006
நுகர்வோருக்கானது: 30 ஜனவரி, 2007
6000, 6001(SP1)
என்டி 6.0வின்டோஸ் சேவர் 2008ஸ்டாண்டட், எண்டபிறைஸ், டேட்டாசெண்டர், வெப், ஸ்டோரேஞ், ஸ்மோல் பிஸ்னஸ் செர்வர்27 பெப்ரவரி, 20086001
என்டி 7.0வின்டோஸ் 7 (ஆரம்பத்தில் பிளாக்கொம்ப் என்றும் பின்னர் வியன்னா என்றும் அழைக்கப்படுவது)அறியப்படவில்லை2010அறியப்படவில்லை
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வின்டோஸ்_என்டி&oldid=2756891" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை