வியட்நாமிய உடை

வியட்நாமிய உடை (Vietnamese clothing) வியட்நாமில் அணியப்படும் மரபான உடையைச் சுட்டும்.

Ao dai 1950.
அரசவை உடை, இலே பேரரசு.
அரசவைச் சிறப்பு உடைகள், நிகுயேன் பேரரசு.
19 ஆம் நூற்றாண்டு போசு தாவு தொப்பி, கிம் வாசு சோன் பொன்னணியுடன்.
இம்பீரியல் கல்விக்கழக மாணவர் சீருடை.

வரலாறு

நிகுயேன் பேரரசில் சீனப் பாணி உடை வியட்நாம் மக்கள் மீது திணிக்கப்பட்டது.[1][2][3][4][5][6] வைட் குமோங் மக்கள் காற்சட்டைகளை ஏற்றனர்.[7] வைட் குமோங் பெண்கள் தங்களது பாவாடைகளுக்கு மாற்றாக காற்சட்டைகள் அணிய வற்புறுத்தப்பட்டனர்.[8] சீனாவின் மிங் மரபு சார்ந்த ஃஏன் பேரரசு மேற்கச்சையும் (கஞ்சுகத்தையும்) காற்சட்டையையும் வியட்நாமியர் அணிந்தனர். 1920 இல், சீனப் பாணி உடையோடு, இறுகப் பொருத்திய குறுகிய உடைகள் அறிமுகப்படுத்தியபோது ஆவொ தாய் ( Ao Dai) உடை உருவாகியது.[9]> வியட்நாமியர் அணியும் சாரோங் வகை உடைகளுக்கு மாற்றாக அணிய, சீனப் பாணிக் காற்சட்டைகளும் மேற்கஞ்சுகங்களும் 1774 இல் வூ வூவோங் பேரரசரால் ஆணையிட்டு கொள்முதல் செய்யப்பட்டன.[10] சீனவகை காற்சட்டைகளையும் மேற்கஞ்சுகங்களையும் கட்டாயமாக அணியவேண்டுமென விடநாமிய நிகுயேன் அரசு ஆணையிட்டது. 1920 வரை வடக்கு வியட்நாமில் சில பகுதிகளில் தனியாக பிரிந்திருந்த சிற்றூர்க்குடில்களில் மகளிர் பாவாடை அணிந்துவந்துள்ளனர்.[11]நிகுயேன் தோங் அரசர் சீன மிங், தாங், ஃஏன் பேரரசு பாணி உடைகளை படை வீரர்களும் அரசு அலுவலரும் அணியவேண்டுமெனக் கட்டளையிட்டார்.[12]

உடைவகைகள்

  • ஆவோ தாய் என்பது வியட்நாமியச் சிறுமியரின் இயல்பு உடை ஆகும்.
  • ஆவோ கியாவோ பின் என்பது நிகுயேன் பேரரசுக்கு முன்பு அணியப்பட்ட குறுக்குப் பட்டை மேலணியாகும்.
  • ஆவோ தூ தான் என்பது நான்கு பகுதி மகளிர் உடையாகும்; ஆவோங்கு தான் ஐந்து பகுதி மகளிர் உடையாகும்.
  • யேம் என்பது சீன யேம் உடை (தூ தோவு) போன்ற மகளிர் உள்ளாடையாகும்.
  • ஆவோ பா பா என்பது ஊரகத்தில் ஆடவரும் மகளிரும் அணியும் இருபகுதி உடையாகும்[13]
  • ஆவோ காம் அரச வழாக்களில் அணியும் அகல்கஞ்சுகம் ஆகும்; ஆவோ தே திருமண ஆடவர் உடையாகும்.
  • தலையணிகளில் தின் தூ, போசு தாவு, செந்தரக் கூம்பு வடிவ நான்லா, விளக்குக் கவிப்பு வடிவ நான்குவாய் தாவோ ஆகியன் அடங்கும்.
  • ஆவோ திராங் பாத் தூ என்பது குறுகிய ஆவோதிராங் உடையே ஆகும். இது வியட்நாம் புத்தமதக் கோயில்களில் உபாசகரும் உபாசிகரும் அணியும் மேலணியாகும். இது புத்தத் துறவிகள் அணியும் ஆவொ தாய் போன்ற குறுக்குப் பட்டை உள்ள வெளிர்நீல அல்லது பழுப்புநிற iஉடையாகும். ஆனால், இதில் கையுறைகள் இல்லாமல் உட்சட்டைப்பைகள் கொண்டிருக்கும்.இதற்கேற்ற காலுறைகள் இருந்தாலும் அவற்றைக் கட்டாயமாக அணிய வேண்டியதில்லை. இத்தகைய உடைகளை சாவோ தாய் கோயில்களில் காணலாம்.
  • வியட்நாமியப் போருடைகளில் ஆவோ பா பாஎனும் கருப்புத் தளர்காலுறைகள், தேப் உலோப் எனும் தொய்வச் செருப்புகள், ஊரகக் கான்ரான் எனும் கைக்குட்டை ஆகியன அடங்கும்.

20 ஆம் நூற்றாண்டு

இருபதாம் நூற்றாண்டில் வியட்நாமியர் பன்னாட்டளவில் பரவலாக அணியபட்ட உடைகளை அணியலாயினர். ஆவோ தாய் உடை சாய்கோன் வீழ்ச்சிக்குப் பின்னர் தடைசெய்யப்பட்டது. என்றாலும் ஆவோ தாய் உடை அணியும் வழக்கம் மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றுள்ளது.[14] இது இப்போது வெள்ளை நிறத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவியரால் அணியப்படுகிறது. பெண்வரவேற்பாளரு குழுமப் பெண்செயலர்களும் கூட ஆவோ தாய் உடையை அணிகின்றனர்.[சான்று தேவை] தென்வியட்நாமிலும் வடக்கு வியட்நாமிலும் அணியும் உடைப் பாணிகள் வேறுபட்டுள்ளன.[15] அண்மையில் ஆவோ தாய் உடையை மகளிரும், புத்தியற் கூட்டுடைகள் அல்லது ஆவோ காம்/ ஆவோ தே உடைகளை ஆடவரும் அணிகின்றனர்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வியட்நாமிய_உடை&oldid=3644029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை