வியட்நாமில் சமயம்

நெடுங்காலமாக நிறுவப்பட்ட வியட்நாமின் சமயங்கள் (religions in Vietnam) எனப்படுபவற்றில் [[வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம் அடங்கும். இது வரலாற்றியலாக சீனாவின் கன்பூசியனியம், தாவோயியம் சார்ந்த,நெறிமுறைகளையும் திறன்மிக்க பவுத்த தாம் கியாவோ எனும் மும்மை போதனைகளையும் உள்ளடக்கியதாகும். வியட்நாம் உலகின் மிகக் குறைவாக சமய மயமாகிய நாடுகளில் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டின் அரச அலுவற் புள்ளிவிவரப்படி, மொத்த மக்கள்தொகையான 90 மில்லியன் மக்களில் 24 மில்லியன் மக்களே நிறுவனச் சமயங்களைச் சார்ந்துள்ளனர். இவரில், 11 மில்லியன் பேர் பவுத்தர் (12.2%), 6.2 மில்லியன் பேர் கத்தோலிக்கர் (6.8%), 4.4 மில்லியன் பேர் சாவோதையர் (4.8%), 1.4 மில்லியன் பேர் சீர்டிருத்தக் கிறித்தவர்(1.6%), 1.3 மில்லியன் பேர் கோவாகோவாவினர் (1.4%), 75,000 பேர் முசுலிம்கள், 7,000 பேர் பாகாலியர், 1,500 பேர் இந்து சமயத்தவர், மேலும் பிற சிறுகுழுக்கள் (<1%) பிற சமயத்தவர் ஆவர்.[1] மரபான தேவர், தேவதை, மூத்தோர் ஆகியவரை வழிபடும் நாட்டுப்புற வடிவம் 1980 களுக்குப் பின்னர் புத்துயிர்ப்பு பெற்றுள்ளது.[2]


வியட்நாமில் சமயம் (2014)[1]

  வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம் அல்லது சமயம் சாராத மக்கள் (73.2%)
  பவுத்தம் (12.2%)
  கத்தோலிக்கக் கிறித்தவம் (6.8%)
  சாவோதையியம் (4.8%)
  சீர்திருத்தக் கிறித்தவம் (Protestantism) (1.5%)
  [கோவாக்வோயியம் (Hoahaoism) (1.4%)
  பிற சமயங்கள் (0.1%)

பியூ ஆராய்ச்சி மைய 2010 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, மொத்த மக்கள்தொகையில், (45.3%) அளவு வியட்நாமியர் நாட்டுப்புறச் சமயம் சார்ந்துள்ளனர். பவுத்தர்கள் 16.4% அளவினர் ஆவர்; 8.2% அளவினர் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் ஆவர்; எஞ்சிய 30% அளவினர் சமயம் சாராதவர் ஆவர்.[3][4] அலுவல்முறைப்படி, வியட்நாமியப் பொதுவுடைமைக் கட்சியும் அரசும் வியட்நாமை வியட்நாமியச் சமவுடைமைக் குடியரசு எனவும் இதுவொரு நாத்திக ந்நடு என்வும் அறிவித்துள்ளன.[5]

பருந்துப் பார்வை

1999 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெர்ம்பாலான வியட்நாமியர் சமயம் சாராதவராக்ப் பதிவு செய்திருந்தாலும்,[6] சமயம் என்பது அனைவரும் ஏற்கின்ற ஒத்த நம்பிக்கை, நடைமுறைகள் எனும் வரையறையின்படி, வியட்நாமிய வாழ்க்கையில் சமயம் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது,[7] இது உள்நாட்டு, வெளிநாட்டு வியட்நாமியரின் சமூக நடத்தையையும் ஆன்மீக நடைமுறைகளையும் வழிபடுத்துகிறது. தாம் கியாவோ எனும் முச்சமயம், அதாவது, மகாயாணப் பவுத்தம், தாவோயியம், கன்பூசியனியம், நாட்டுப்புறச் சமயம் ஆகியவை இணைந்த கூட்டுச் சிந்தனை மரபு, வியட்நாமியரின் நம்பிக்கைகளிலும் நடைமுறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. இது கணக்கெடுப்பில் பதிவாவதில்லை.வியட்நாமியர் பின்பற்றும் மிகக் குறிப்பிடத்தக்க ஆன்மீக நடைமுறைகளில் ஒன்று மூதாதையர் வழிபாடாகும். இவ்வழிபாட்டைச் சீனரும் பெரும்பாலான ஆசியப் பண்பாடுகளும் மேற்கொள்கின்றன. சமயம் சார்ந்த அல்லது சாராத வியட்நாமியரின் வீடுகளிலும் வணிக இல்லங்களிலும் பலிபீடங்கள் உள்ளன. அங்கு மூதாதையருக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை முதன்மையான மரபு அல்லது சமய விழாக்களில் அதாவது இறப்பு நினைவு விழா, வணிகத் தொடக்கம், குடும்ப உறுப்பினருக்கான வழிப்படுத்தல் போன்ர நிகழ்ச்சிகாளில் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான வியட்நாமியருக்கு பேய்களிலும் ஆவிகளிலும் நம்பிக்கை உண்டு; தம் மூத்தோருக்கு முறையாக வழிபாடு செய்யாவிட்டால் அவர்கள் பசிமிக்க பேய்களாக 9வியட்நாமில் மாதோய்களாக) அலைவர் என்ற நம்பிக்கை வியட்நாமியரிடம் உண்டு .[nb 1]

2002 ஆம் ஆண்டின் பியூ ஆராய்ச்சி மைய அறிக்கை வியட்நாமின் 24% அளவு மக்கள்தொகையைச் சார்ந்தவரே சமயத்தை மிகவும் முதன்மையானதாகக் கருதுகின்றனர்.[8]

புள்ளியியல்

அரசு பதிவு செய்த சமயக் குழுக்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது
சமயக்
குழு
மக்கள்தொகை
% 2009[9]
மக்கள்தொகை
% 2014[1]
வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம்,
சமயஞ்சாராதவர்களும் நாத்திகர்களும்
81.6%73.2%
பவுத்தம்7.9%12.2%
கிறித்தவம்7.4%8.3%
கத்தோலிக்கம்6.6%6.8%
சீர்திருத்தக் கிறித்தவம்0.8%1.5%
சாவோதையியம்1.0%4.8%
கோவாகோவாயியம்1.6%1.4%
பிற சமயங்கள்0.2%0.1%

வரலாறு

வியட்நாம் நாட்டில் நிகா திராங்கில் உள்ள மாபெரும் புத்தர் சிலை.

வியட்நாமியரின் மிகப் பழைய சமய நடைமுறைகளாக ஆவி வழிபாடும் குலக்குறி வழிபாடும் நிலவின.[10]தோன் சோன் முரசு அழகுபாடுகள் விழா, சமயப் பொருள்களும் நம்பிக்கைகளும் அமைந்தவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.[nb 2]அவற்றில் பறவை உருவங்கள் உள்ளன; எனவே தொடக்க கால வியட்நாமிய்ர் பறவைகலை வழிபட்டிஉக்கலாம். வியட்நாமியக் கலையில் அடிக்கடி நீர்த்தும்பிகள் அமைகின்றன.இது அவர்களது தந்தையாக்க் கருதப்படும் இலாசுலோங் குவான் எனும் தொன்மக் கடவுளாகிய தும்பிக்கடவுளின் வழிபாடாகலாம்.

அகச் சமயங்கள்

அடுக்குத் தூபியில் வழிபடும் இலேந்தோங் வழியினர்.

முதன்மைக்கட்டுரை:வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம்

தாவோ துவா

தாவோ மாவு

பவுத்தம்

கனாயில் உள்ள ஒற்றை அடுக்குத் தூபி, வரலாற்றுப் பவுத்தக்கோயில்.
தூயநில ஆசான் அமிதாப புத்தர், பெண்துறவிக்கு அருள்தருதல், குவானாம் அடுக்குத் தூபி, சோலான்.

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் பவுத்தம்

தூய நிலப் பவுத்தம்

கோவாகோவா

தூ ஆன் கியேயு நிகீயா

கிறித்தவம்

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் கிறித்தவம்

கத்தோலிக்கம்

நோத்ரே தாம் தேவாலயம், ஓ சி மின் நகர், வியட்நாம்.

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் உரோமக் கத்தோலிக்கம்

சீர்திருத்தக் கிறித்தவம்

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் சீர்திருத்தக் கிறித்தவம்

கீழை மரபியம்

பிந்தைய புனிதரின் இயேசு கிறித்து பேராயம்

சாவோ தையியம்

வியட்நாம், தாய்மின் நகரில் சாவோதையில் துறவிகள் வழிபடல்.

இந்து சமயம்

முதன்மைக்கட்டுரை:தென்கிழக்காசியாவில் இந்து சமயம், வியட்நாம்

வியட்நாம் நாட்டில் நிகா திராங்கில் உள்ள இந்துக் கோயில்

இசுலாமியம்

ஆன் கியாங்கில் உள்ள மசூதி

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் இசுலாமியம்

யூதவியம்

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் யூதர் வரலாறு

பாகாலியம்

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் பாகாலியம்

சமய விடுதலை

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் சமய விடுதலை

மேலும் காண்க

  • வியட்நாமில் சமய விடுதலை
  • வியட்நாமிய மெய்யியல்
நிறுவன சமயங்கள்
  • வியட்நாமில் பாகால் நம்பிக்கை
  • வியட்நாமில் பவுத்தம்
  • வியட்நாமில் கிறித்தவம்
    • [வியட்நாமில் மரபியம்
    • வியட்நாமில் சீர்திருத்தக் கிறித்துவம்
      • வியட்நாமில் மென்னோனைட் பேராயம்
      • வியட்நாமில் கடவுட்குழுக்கள்
    • வியட்நாமில் உரோமக் கத்தோலிக்கம்
  • வியட்நாமில் யூதவியம்
  • வியட்நாமில் இசுலாமியம்
  • வியட்நாமில் தாவோயியம்

குறிப்புகள்

அடிக்குறிப்புகள்

சான்றுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Religion in Vietnam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வியட்நாமில்_சமயம்&oldid=3571703" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை