வெசூவியஸ் மலை

வெசூவியஸ் மலை
Monte Vesuvio (இத்தாலிய மொழி)
கி. மு.79ல் அழிவுற்ற பாம்ப்பியை நகரத்திலிருந்து வெசூவியஸ் மலையின் தோற்றம்.
நிலவியல்
பாறையின் வயது1944க்கு முன் 25,000 ஆண்டுகள்
மலையின் வகைSomma-stratovolcano
Volcanic arc/beltCampanian volcanic arc
கடைசி வெடிப்புமார்ச் 17–23, 1944
ஏறுதல்
எளிய அணுகு வழிநடந்து செல்லல்
நேப்பிள்ஸ் நகரமும் வெசூவியஸ் மலையும்

வெசூவியஸ் மலை

உலகிலுள்ள ‘எரிமலை’களுள் குறிப்பிடத்தக்கது வெசூவியஸ் மலை (Mount Vesuvius).

அமைவிடம்

இந்த எரிமலை இத்தாலியில் நேப்பிள்ஸ் விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது.

அமைப்பு

வெசூவியஸ் எரிமலையின் கூம்பிலிருந்து கரும்புகை வெளிப்பட்டுப் பரவிச் செல்வதைச் சாதாரணமாக எப்போதும் பார்க்கலாம். வெசூவியஸ் எரிமலையின் உயரம் சுமார் 1.170 மீட்டர். ஆனால், ஒவ்வொரு முறையும் எரிமலை வெடிக்கும்போதும் எரிமலைக் குழம்பு, சாம்பல் முதலியன மேலும் மேலும் படிந்து இறுகுவதால் இதன் உயரம் வேறுபடும். இந்த எரிமலை முற்காலத்தில் நேப்பிள்ஸ் விரிகுடாவில் ஒரு தீவு போல அமைந்திருந்தது. எரிமலையிலிருந்து வெளிப்ட்ட குழம்பும் சாம்பலும் இதனை விரிகுடாவின் கரையுடன் இணைத்துவிட்டன.

ஆபத்து

எரிமலை வெடிக்கும்போது இதன் அருகிலுள்ள பகுதிகளுக்கு அழிவு ஏற்படுவதுண்டு. சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்பு இம்மலை வெடித்தபோது புகழ் பெற்ற நகரங்களான பாம்ப்பியை (Pompeii), ஹெர்க்குலேனியம் (Herculaneum), ஸ்ட்டேபியீ (Stabiae) முதலியன புதையுண்டு அழிந்தன. அதன் பிறகு இம்மலை அடிக்கடி வெடித்திருக்கிறது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். பல ஊர்கள் அழிந்து விட்டன. இந்த எரிமலை இறுதியாக 1944-ம் ஆண்டில் பொங்கியபோது சான் செபாஸ்ட்டியானோ (San Sebastiano) என்ற ஊர் அழிந்தது.[1] இவ்வித ஆபத்து இருந்தாலுங்கூட, இம்மலையின் அடிவாரத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பயன்

எரிமலையின் குழம்பு படிந்த மண் மிகச் செழிப்பாக மாறுகிறது. எனவே இப்பகுதியில் மது தயாரிக்கப் பயன்படும் திராட்சையைப் பெருமளவில் பயிரிடுகின்றனர்.

பார்வையிடுதல்

எரிமலையின் சிகரத்திற்கு அருகே மக்கள் சென்று பார்ப்பதற்காக மலையின் மீது ரெயில்பாதை அமைந்துள்ளனர்.

வெளி இணைப்புகள்

  1. http://pleiades.stoa.org/places/433189/Vesuvius-M
  2. http://news.bbc.co.uk/2/hi/europe/6247573.stm
  3. http://www.geotimes.org/apr05/NN_Vesuvius.html
  4. http://www.westnet.com/~dobran/index.html

மேற்கோள்கள்

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெசூவியஸ்_மலை&oldid=3724826" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை