வோலின் மாகாணம்
வோலின் மாகாணம் (Volyn Oblast) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் பெலருஸ், பல்கேரியா மற்றும் போலந்து நாடுகளின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லுட்ஸ்க் நகரம் நகரம் ஆகும். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திலிருந்து போலந்து நாட்டின் வார்சா நகரத்திற்கு செல்லும் இருப்புப்பாதை, வோலின் மாகாணத்தின் வழியாக செல்கிறது. 20,144 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வோலின் மாகாணத்தின் 2021ம் ஆண்டின் சராசரி மக்கள் தொகை 10,27,397 ஆகும்.
வோலின் மாகாணம் Волинська область | |
---|---|
வோலின்ஸ்கா மாகாணம்[1] | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | லுட்ஸ்க் நகரம் |
அரசு | |
• ஆளுநர் | யூரி பொகுலியாய்கோ[2][3] |
• வோலின் மாகாணச் சட்டமன்றம் | 64 உறுப்பினர்கள் |
• தலைவர் | இகோர் பாலிடிசியா[4] [4]) |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,144 km2 (7,778 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 20ம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 10,27,397 |
• தரவரிசை | 24ம் இடம் |
நேர வலயம் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3) |
அஞ்சல் குறியீடு | 43xxx-45xxx |
வட்டார குறியீடு | +380-33]] |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | UA-07 |
மாவட்டங்கள் | 4 |
நகரங்கள் (மொத்தம்) | 11 |
• வட்டார முக்கிய நகரங்கள் | 4 |
நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 22 |
கிராமங்கள் | 1053 |
FIPS 10-4 | UP24 |
இணையதளம் | www |
அமைவிடம்
உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த வோலின் மாகாணத்தின் வடக்கில் பெலருஸ், வடமேற்கிலும், மேற்கிலும் போலந்து, கிழக்கில் ரைவன் மாகாணம், தெற்கில் லிவீவ் மாகாணம், தென்மேற்கில் ரைவன் மாகாணம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
வோலின் மாகாணம் 4 மாவட்டங்களையும், 11 நகரங்களையும், 22 நகரபுற குடியிருப்புப் பகுதிகளையும், 1053 கிராமங்களையும் கொண்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Volyn Oblast State Administration (in உக்குரேனிய மொழி)
- Volyn Region (Newspaper) (in உக்குரேனிய மொழி)
- Picture album (in உக்குரேனிய மொழி)