ஹொங்கொங் மாவட்டங்கள்

ஹொங்கொங் அரசியல் கட்டமைப்பும் அரசாங்கமும்

அடிப்படை சட்டம்
அரசாங்கம்
 முதன்மை நிறைவேற்றதிகாரி
    டொனால்ட் செங்
  நிர்வாகத்துறை முதன்மை செயலர்
      ஹென்றி டாங் யிங்-யென்
  நிதித்துறை செயலர்
      யோன் செங் சுன்-வா
  நீதித்துறை செயலர்
      வொங்க் யன்-லங்
  நிறைவேற்று செயல் மன்றம்
    நடத்துனர்: லியெங் சுன்-யிங்  அரசாங்கக் கட்டமைப்பு
  அரசியல் நியமனங்கள்
  பொறுப்புடைமை முறைமை
சட்டப் பேரவை
   சட்டப்பேரவைத் தலைவர்: யசுபர் செங்
   புவியியல் தொகுதி
   சார்புத் தொகுதி
  தேர்தல்
  தேர்தல் கட்சிகள்
   குடியரசு ஆதரவாளர்கள்
   பீஜிங் ஆதரவாளர்கள்
நீதித்துறை
  நீதிமன்ற மேல்முறையீடுl
    தலைமை நீதிபதி: ஜியோபிறே மா
மாவட்டப் பேரவை
மாவட்டங்கள்
மனிதவுரிமைகள்
வெளிவிவகார உறவு
பொது வாக்குரிமை

ஏனைய ஹொங்கொங் பகுப்புகள்
பண்பாடு - பொருளாதாரம்
கல்வி - புவியியல் - வரலாறு
ஹொங்கொங் விக்கிவாசல்

ஹொங்கொங் மாவட்டங்கள் (Districts of Hong Kong) என்பன ஹொங்கொங் ஆட்சிப்பரப்பில் அரசியல் நில எல்லைக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலவியல் பிரிவுகளாகும். இவ்வாறு ஹொங்கொங்கில் 18 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாவட்ட சபை உள்ளது. இந்த மாவட்ட அலகுகள் பிரித்தானிய குடியேற்ற நாடாக ஹொங்கொங் இருந்த காலங்களில் 1980 களில் உருவாக்கப்பட்டவைகளாகும். இருப்பினும் இந்த மாவட்ட சபையின் நிலவியல் எல்லைகளுக்கு அமைவாக ஹொங்கொங் காவல் துறை, தீயணைப்பு படை, உடல்நலம் பேனகம், பாடசாலை போன்றன இயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள 18 மாவட்டங்கள் (இலக்கங்களில் காட்டப்பட்டுள்ளன)

1860 களின் சீன மொழியின் உள்ள வெவ்வேறு உற்கூறு மொழிகளை அல்லது பேச்சு வழக்கை கொண்ட மக்கள் குழுமமாக வாழ்ந்த பகுதிகள் ஒவ்வொரு பிரிவுகளாக இனங்காணப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளாகவே இருந்தனர். இக்கூலிகளிடையேயான வணிக நடவடிக்கைகளுக்கு, வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த வணிகர்கள், தமது பொருற்களை விற்பனை செய்ய சட்டத்திற்கு புறம்பான வகையில் உற்புகுந்த வண்ணம் இருந்தனர். இது ஹொங்கொங் மற்றும் பிரித்தானியர் இடையே பல முரண்பாடுகளை தோற்றுவிக்கவும் தொடங்கின. இச்சூழ்நிலை பின்னனியில் 1870 ஆம் ஆண்டுகளில் தான் இந்த மாவட்டங்கள் வரையரை செய்தல் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.[1] இதன் காரணமாக ஐரோப்பியர்களுக்கான நில ஒதுக்கீடு செய்யும் முகமாக, முதல் சட்ட ரீதியான மாவட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கை "ஐரோப்பிய மாவட்ட ஒதுக்கிட்டுச் சட்டம்" 1888 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.[2][3]. இருப்பினும் 1982 ஆம் ஆண்டே ஹொங்கொங் மாவட்ட சபைக்கான நிர்வாக அலகுகள் உருவாக்கம் பெற்று ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நிர்வாகச் செயற்குழு திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த மாவட்டங்களை அல்லது மாவட்ட எல்லைகள் 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஏற்பட்ட ஆட்சியுரிமை மாற்றத்தின் பின்னர் தொடர்ந்தும் 1999 வரை தற்காலிகமாக நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2000, சனவரி 1 முதலாம் திகதி மீண்டும் அதே 18 மாவட்டங்களை அதே அலகுகளுடன் வைத்துக்கொள்ளவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாவட்டங்கள் தொடர்பில் 1982 ஆம் ஆண்டின் பின்னர் இரண்டு பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

  1. குவாய் சிங் மாவட்டத்தில் இருந்து சுன் வான் 1985 ஆம் பிரிக்கப்பட்டது.
  2. யவ் சிம் மாவட்டம் மற்றும் மொங் கொக் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக இருந்தவை, தற்போது ஒரே மாவட்டமாக யவ் சிங் மொங் மாவட்டம் என 1994 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மேலதிக தகவல்கள்

இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றினதும் மக்கள் தொகை, அவற்றின நிலப்பரப்பளவு, ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள் அடர்த்தி விகிதம், சராசரி மாத வருமானம், சாதாரண தொழிலாளியின் மாத சராசரி வருமானம் போன்ற புள்ளிவிபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் இடப்பட்டுள்ளன.

அட்டவணை

ஹொங்கொங்
மாவட்டங்கள்
மக்கள் தொகை
(2006 மதிப்பீடு)
பரப்பளவு
(/கி.மீ²)
அடர்த்தி
(/கி.மீ²)
சராசரி மாதாந்த
தனிநபர் வருமானம்
கட்டுப்பாட்டகம் முழுதும்6,864,346N/AN/A5,750 / 11,049
கடல்பரப்பு3,066N/AN/A3,125 / 5,006
முழு நிலப்பரப்பும்6,861,2801080.186,3525,753 / 11,055
ஹொங்கொங் தீவு1,268,11279.6815,9157,931 / 14,568
மையம் மற்றும் மேற்கு250,06412.4420,1029,722 / 17,178
வஞ்சாய்155,1969.8315,78810,185 / 17,788
கிழக்கு587,69018.5631,6647,235 / 13,558
தெற்கு275,16238.857,0836,563 / 12,335
கவுலூன்2,019,53346.9343,0335,184 / 10,311
யவ் சிங் மொங்280,5486.9940,1366,034 / 11,114
சம் சுயி போ365,5409.3539,0954,821 / 9,909
கவுலூன் நகரம்362,50110.0236,1786,897 / 13,122
வொங் டயி சின்423,5219.3045,5404,750 / 9,701
குவுன் டொங்587,42311.2752,1234,845 / 9,908
புதிய கட்டுப்பாட்டகம்3,573,635953.483,7485,667 / 10,860
குவாய் சிங்523,30023.3422,4214,833 / 9,718
சுன் மூன்288,72861.714,6796,897 / 12,860
சுன் வான்502,03582.896,0575,172 / 9,843
யுன் லோங்534,192138.463,8584,777 / 9,606
வடக்கு280,730136.612,0555,161 / 10,120
டய் போ293,542136.152,1565,806 / 10,824
சா டின்607,54468.718,8426,232 / 11,592
சயி குங்406,442129.653,1356,774 / 12,183
தீவுகள்137,122175.127835,659 / 11,595

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

ஒங்கொங்:விக்கிவாசல்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை