தமிழக வெற்றிக் கழகம்

இந்திய அரசியல் கட்சி

தமிழக வெற்றிக் கழகம்[1] (Tamilaga Vettri Kazhagam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[2][3] 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் இக்கட்சியைத் தொடங்கினார்.[4][5]

தமிழக வெற்றிக் கழகம்
சுருக்கக்குறிதவெக
தலைவர்விஜய்
நிறுவனர்விஜய்
குறிக்கோளுரைபிறப்புக்கும் எல்லா உயிருக்கும்
தொடக்கம்2 பிப்ரவரி 2024
தலைமையகம்சென்னை –(பனையூர்) 600019, தமிழ்நாடு, இந்தியா.
இ.தே.ஆ நிலைவிண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
0 / 234
இந்தியா அரசியல்

வரலாறு

  • விஜய் தனது இரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று தனது ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அவர்களது நற்பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தொடங்கினார்.[6][7]
  • 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஆதரித்து விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். விஜய் ரசிகர் நற்பணி மன்ற ரசிகர்களும் தேர்தல் களத்தில் வேலை செய்தனர். இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, விஜய் மற்றும் அவரது ரசிகர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.[சான்று தேவை]
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த வேட்பாளர்கள் 170 தொகுதிகளில் போட்டியிட்டு 115 தொகுதிகளில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர்களாக தேர்வாகினர்.[8] [9]
  • 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி துவங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது.

தேர்தல்

  • தமிழக வெற்றிக் கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் தற்போது ஆதரவு அளிக்காது என்றும் விஜய் தெரிவித்தார்.[10]
  • வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தலைவர் விஜய் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தனது கட்சியின் இலட்சியம், நோக்கம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற உயர்ந்த திருக்குறள் வரிகளுக்கு ஏற்றார் போல் தன் கட்சியின் முழக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.[11]

கட்சியின் பெயர்

தமிழக வெற்றி கழகம் என முதலில் பெயரிடப்பட்ட இக்கட்சியின் பெயரானது இலக்கணப் பிழையுடன் உள்ளது என சமூக ஊடகங்கள் கருத்து தெரிவித்தன் அடிப்படையில் கட்சியின் தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.[12]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை