அன்ரியல் எஞ்சின்

அன்ரியல் என்ஜின்(Unreal Engine) எபிக் விளையாட்டுக்கள் நிறுவனத்தால் 1998 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. முதலில் இது "முதல் நபர் சுடுபவர் (First Person Shooter)" விளையாட்டுக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது பல விதமான கணினி விளையாட்டுக்களை உருவாக்கப் பயன்படுகின்றது. தற்போது பயன்படுத்தப்படும் பொறிகளில் மிகவும் சிறந்தது எனப் பல வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன.[1] பிரபல்யமான விளையாட்டு பொறிகளின் வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் மிகச்சிறந்த காட்சி விளைவுகளை உருவாக்க முடிவதால், கட்டிடக்கலை காட்சிப்படுத்தல்களின்போது பயன்படுத்தப்படுகின்றது.

எபிக் கேம்ஸ்
உருவாக்குனர்எபிக் விளையாட்டு
தொடக்க வெளியீடு1998, பதினேழு வருடங்களுக்கு முன்
அண்மை வெளியீடு4.10 / 2015 நவம்பர் 11
Preview வெளியீடு4.11
இயக்கு முறைமைவிண்டோஸ்
கிடைக்கும் மொழிஆங்கிலம்,கொரிய மொழி, சீன மொழி(எளிய), ஜப்பானிய மொழி
மென்பொருள் வகைமைவிளையாட்டுப்பொறி
இணையத்தளம்unrealengine.com

பயன்பாடுகள்

இதைப் பயன்படுத்தி உருவாக்கிய விளையாட்டுக்கள் பல உள்ளன. அவற்றுள் மிகவும் அறியப்பட்டவை:

  • எபிக் கேம்ஸ் இன் அன்ரியல் டூர்ணமன்ட்.
  • ரோக்கிஸ்டடி கலையகத்தால் உருவாக்கப்பட்டு வார்னர் புரோஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பேட் மேன் : அர்கம் நைட்
  • நெதர் ரியலிம் கலையகத்தால் உருவாக்கப்பட்ட மோர்டல் கொம்பட் எக்ஸ்.
  • பாண்டி நாம்கோ நிறுவனத்தின் டெக்கன் செவென் (7).

உருவாக்கம்

ஒரு கணிவிளையாட்டை உருவாக்க நிரல்களை எழுத வேண்டியிருக்கும், ஆனால் அன்ரியலில் காட்சி நிரலாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூடிகேயில்(அன்ரியல் டிவலப்மன்ட் கிட்) இதற்கு உருவாக்குனர்கள் "கிஸ்மட்" எனப் பெயரிட்டனர்.அன்ரியல் என்ஜின் 4 இல் "ப்லூபிரின்ட்" என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நிரலாக்கம் பற்றி அறியாமல் கணினி விளையாட்டுக்களை உருவாக்க முடியும்.ஆனால் சிக்கலான விளையாட்டுக்களை உருவாக்கும்போது "சி பிளஸ் பிளஸ்"'(C++)' மொழியை பயன்படுத்த முடியும். முன்னைய வெளியீடுளில் (UDK, UE3 மற்றும் பழையவை) "அன்ரியல் ஸ்க்ரிப்ட்" எனும் மொழி இருந்தது. அன்ரியல் என்ஜின் 4 வெளியீட்டில் இது இல்லாது செய்யப்பட்டுள்ளது.

இதன் பயனர் இடைமுகம் மற்ற பொறிகளை போல் அல்லாது மிகவும் இலகுவாக காணப்படுகின்றது. மேலும், இதில் மிகவும் செயல்திறன் வாய்ந்த இயற்பியல் முறை காணப்படுகின்றது. அதனால் இதில் துணி, வெடிப்பு, ரிஜிட்பொடி போன்றவற்றை உருவகப்படுத்த முடியம். அத்தோடு இயற்பியல் உருவகப்படுத்தல்களை செய்ய முடியும்.

விலை

இந்த கணினி விளையாட்டு பொறியை இலவசமாக எவரும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உருவாக்குனர் வெளியிட்ட மென்பொருளினால் அவர்கள் $3000 (அமெரிக்க டொலர்) இலாபம் பெறும் வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் இலாபம் பெறும் நிறுவனம், இலாபத்தில் ஐந்து வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.[2]

வெளியீடு[3]

அன்ரியல் என்ஜினில் உருவாக்கப்படும் விளையாட்டுக்களை பல இயங்குதளங்களுக்கு இலகுவாக வெளியிடக்கூடியாதாக உள்ளது.

வகைதளம்
கணினிகள்
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
அப்பில் மெக்.ஓ.எஸ் எக்ஸ்
லினக்ஸ் வெளியீடுகள்
ஸ்டீம் இயங்குதளம்
கையடக்க
அன்றாய்டு
அப்பில் ஐ ஓ எஸ்
விண்டோஸ்
விளையாட்டு இயந்திரங்கள்(Consoles)
பிளேஸ்டேசன் 4
எக்ஸ் பாக்ஸ்
உலாவிகள்
எச்.டி.எம்.எல்
விர்ச்சுவல் ரியலிட்டி
எச்.டி.சி.வைவ்
மோர்பஸ்
கியர் வி.ஆர்
ஒகுலஸ் ரிப்ட்

கணினி தேவைகள் (பரிந்துரைக்கப்படுவது)[4]

விண்டோஸ்மெக் ஓ.எஸ்.லினக்ஸ்
இயங்குதளம்(OS)விண்டோஸ் 7/8 64பிட்ஓ எஸ் எக்ஸ் 10.9.2உபுண்டு
செயலி(CPU)நான்கு கோர், 2.4 ஜிகா ஹெர்ட்ஸ்நான்கு கோர், 2.4 ஜிகா ஹெர்ட்ஸ்நான்கு கோர், 2.4 ஜிகா ஹெர்ட்ஸ்
நினைவகம்(RAM)8 ஜி.பி8 ஜி.பி16 ஜி.பி
வரைகளை செயலி(GPU)டிரக்ட் எக்ஸ் 11 இயங்கக்கூடியதுடிரக்ட் எக்ஸ் 11 இயங்கக்கூடியதுஎன்வீடியா ஜி இ போர்ஸ் 470 ஜி டி எக்ஸ்

அன்ரியல் என்ஜின் இதை விட குறைந்த நிலையிலும் இயங்கக்கூடியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Unreal Engine
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அன்ரியல்_எஞ்சின்&oldid=3694563" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை