அமெரிக்க விடுதலைச் சாற்றுரை

அமெரிக்க விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence) பிலடெல்பியாவில் சூலை 4, 1776 அன்று கூடிய இரண்டாவது தேசியப் பேராயத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். இதன்படி பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் போரில் ஈடுபட்டிருந்த பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றங்கள் [2]தங்களை பதின்மூன்று சுதந்திரமான இறைமையுள்ள நாடுகளாகவும் பிரித்தானிய ஆட்சியின் கீழல்லாதவையாகவும் அறிவித்தன. இவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற புதிய நாட்டை உருவாக்கின. இதனை முன்னெடுப்பதில் ஜான் ஆடம்ஸ் முதன்மைப் பங்காற்றினார். இதற்கான தீர்மானம் சூலை 2 அன்று எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பேராயம் விடுதலையை ஏற்ற தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவிக்க ஐந்து பேரடங்கிய குழு ஒன்று முறையான சாற்றுரையை ஏற்கெனவே வரைந்திருந்தது. இந்தச் சாற்றுரையில் "விடுதலைச் சாற்றுரை" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படவில்லை.

ஐக்கிய அமெரிக்க விடுதலைச் சாற்றுரை
அழுந்திய நகலின் 1823 உருவ நேர்படி
அழுந்திய நகலின் 1823 உருவ நேர்படி
உருவாக்கப்பட்டதுசூன்–சூலை 1776
நிறைவேற்றம்சூலை 4, 1776
இடம்பதிந்த நகல்: தேசிய ஆவணகம்
செப்பமற்ற வரைவு: அமெரிக்கக் காங்கிரசு நூலகம்
வரைவாளர்தாமஸ் ஜெஃவ்வர்சன் மற்றும் பலர். (பதிந்தவர்: டிமோத்தி மட்லாக்காக இருக்கலாம்)
கைச்சாத்திட்டோர்இரண்டாம் தேசியப் பேராயத்திற்கு வந்திருந்த 56 சார்பாளர்கள்
நோக்கம்பெரிய பிரித்தானியா விடமிருந்து பிரிந்ததை அறிவிக்கவும் விளக்கவும்[1]
அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் இறுதி வடிவம் பேராயத்திடம் அளிக்கப்படுதல்.

குறிப்புகளும் சான்றுகளும்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை