அரிசுட்டார்க்கசு

சாமோசின் அரிசுடார்க்கசு (Aristarchus of Samos, /ˌærəˈstɑːrkəs/; கிரேக்கம்: Ἀρίσταρχος, அரிஸ்டார்க்கஸ், அண். கிமு 310 – கிமு 230) ஒரு பண்டைக் கிரேக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். அன்றறியப்பட்ட அண்டத்தின் மையத்தில் சூரியனை முதன்முதலாக வைத்தவர் இவரே. மேலும் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றார் (காண்க சூரியக் குடும்பம்). இவர் குரோட்டன் நகரப் பிலோலௌசு என்பவரால் தாக்கம் உற்று அண்ட நடுவண் நெருப்பாகச் சூரியனை இனங்கண்டது மட்டுமன்றி, சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் தொலைவு சார்ந்த வரிசைமுறையைச் சரியாகத் தொடுத்தவரும் இவரே எனலாம்.[1] இவருக்கு முந்தியவரான அனாக்சகோரசைப் போலவே இவரும் விண்மீன்கள் சூரியனைப் போன்ற வான்பொருட்களே என ஐயப்பட்டார். அரிசுட்டாட்டில், தொலமி (இ.வ) ஆகிய இருவரின் புவிமையக் கோட்பாடுகளின் தாக்கத்தால் இவரது வானியல் எண்ணக்கருக்கள் தள்ளப்பட்டுவிட்டன.

சாமோசுவின் அரிசுட்டார்க்கசு
தெசலோனிகி அரிசுட்டாட்டில் பல்கலைக்கழகத்தில் உள்ள அரிசுட்டார்க்கசு வான் சாமோசு சிலை
பிறப்புஅண். கிமு 310
இறப்புஅண். கிமு 230
இனம்கிரேக்கர்
பணிமுழுமைவாதி, அறிஞர், கணிதவியலாளர், வானியலாளர்

சூரிய மையக் கருதுகோள்

இவரது மூலநூல் கிடைக்காவிட்டாலும் ஆர்க்கிமிடீசின் "மணற்காட்டி" (Archimedis Syracusani Arenarius & Dimensio Circuli) என்ற நூலில் புவிமையக் கருதுகோளுக்கு மாற்றாகச் சூரியமையக் கருதுகோளை அரிசுட்டார்க்கசு முன்வைக்கும் நூல்பற்றிப் பேசுகிறார். ஆர்க்கிமெடீசு எழுதுகிறார்:

நீங்கள் (அரசர் கெலோன்) அறிந்திருப்பீர்கள், புடவி என்ற பெயர் பெரும்பாலான வனியலாளரால் புவியை மையமாகக் கொண்டுள்ள கோளத்தைக் குறிப்பிடுவதையும் அதன் ஆரம் சூரியமையத்துக்கும் புவிமையத்துக்கும் இடையில் உள்ள நேர்க்கோட்டுத் தொலைவாகும் என்பதையும் ) அறிந்திருப்பீர்கள். ஆனால் அரிசுட்டார்க்கசு புடவிக்கான மாற்றுக் கருதுகோளை விவரிக்கும் நூலைக் கொண்டுவந்துள்ளார். அவர் அதில் சில கற்பிதங்களின்படி, நாம் கூறும் புடவியைவிட அது மிகப்பெரியது என்கிறார். அவர் கருதுகோளின்படி, நிலையாக அமையும் விண்மீன்களும் சூரியனும் இயங்குவதில்லை. ஆனால் புவி ஒரு வட்டத்தின் பரிதியில் நடுவில் உள்ள சூரியனைச் சுற்றிவருகிறதாம். இதேபோல நிலையான விண்மீன்களின் கோளமும் அதே சூரிய மையத்தை மையமாகக் கொண்டுள்ளதாம்., புவி சூரியனைச் சுற்றும் வட்டம் மிகமிகப் பெரியதாம். இத்தொலைவு விண்மீன்கள் மேற்பரப்பில் இருந்து புடவிக்கோள மையமான சூரிய மையம் வரையுள்ள தொலைவுக்கு விகிதச் சமத்தில் அமையும் என்கிறார்.[2]

அவர் விண்மீன்களும் சூரியனைச் சுற்றும் புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள சூரியன்களே என ஐயப்பட்டுள்ளார்.[3] அதனால் தான் காணமுடிந்த இடமாறு தோற்ற பெயர்ச்சி ஏதும், அதாவது விண்மீன்களின் இயக்கமேதும் புலப்படுவதில்லை என்கிறார். பண்டைக்காலத்தில் கருதப்பட்டதைவிட விண்மீன்கள் உண்மையிலேயே நெடுந்தொலைவில் உள்ளனவாகும். தொலைநோக்கியால் அன்றை வேறுவழிகளில் விண்மீன் இடமாறு தோற்றப்பிழையைக் காணமுடியாது தான். அவருடைய கணிப்பு சரிதான் என்றாலும் அந்நாளில் நிறுவ இயலாததாகும்.

புவிமையப் படிமம் கோள்களின் இணைமாற்றத் தோற்றப்பிழையைப் பொறுத்தவரை தொடர்ந்து பொருத்தமாக இருந்திருக்கலாம் எனவே தான் விண்மீன்களின் இணைமாறு தோற்றப்பிழை நோக்கப்படவில்லை. நாம் அறிந்தபடி தாலமி பின்னாட்களில் புவிமையப் படிமத்தையே தேர்வு செய்தார். இடைக்கால முழுதும் இதுவே உண்மையாக இருந்தது.இந்தச் சூரியமையக் கோட்பாடு வெற்றிகரமாக கோப்பர்னிக்கசால் மீட்டெடுக்கப்பட்ட்து. மேலும் இதைச் சார்ந்து கோள்களின் இயக்க விதிகளை யோகான்னசு கெப்லர் பெருந்துல்லியத்துடன் வருவித்தார். ஐசாக் நியூட்டன் ஈர்ப்பு விதிகளாலும் இயங்கியலாலும் கோள்களின் இயக்கத்தை கோட்பாட்டுமுறையில் விரிவாக விளக்கினார்.

சூரியத் தொலைவு (நிலா எதிரிணை)

கி.பி பத்தாம் நூற்றாண்டு கிரேக்கப் படியில் இருந்து கிடைக்கும் (இடது பக்கத்தில் இருந்து) சூரியன் புவி, நிலா பற்றிய அர்சுட்டார்க்கசின் கி.மு 3ஆம் நூற்றாண்டுச் சார்புநிலை உருவளவுக் கணக்கீடுகள்
இன்று கிடைக்கும் அரிசுடார்க்கசினதாகக் கருதப்படும் ஒரே நூலான, சூரியன், நிலாவின் உருவளவுகளும் தொலைவுகளும்,எனும் பணி புவிமைய உலகப்பார்வை யை அடிப்படையாக்க் கொண்டதே.  இது சூரிய விட்டம் வெட்டும் கோணம் 2 பாகையைக் குறிப்பதாக வரலாற்றியலாக்க்  கொள்ளப்படுகிறது. ஆனால் ஆர்க்கிமெடீசு தன்  மணற்கடிகை  என்ற நூலில் அரிசுடார்க்கசு 0.5 பாகை கோண மதிப்பைப் பெற்றிருந்ததாகக் கூறுகிறார். இம்மதிப்பு மிகச்சரியான இக்கால மதிப்பான 32 நெருக்கமாக அமைகிறது.  இப்பிழை அளவின் அலகு குறித்து ஆர்க்கிமெடீசு நூலின் கிரேக்கச் சொல்லைப் புரிவதில் உள்ள சிக்கலால் ஏற்பட்டிருக்கலாம்.[4]

அரிசுட்டார்க்கசு அரைப் பிறைக்கட்ட நிலாவுக்கும் (முதல் அல்லது கடைசி வார நிலா) சூரியனுக்கும் இடையில் உள்ள கோணம் 87° என்றார்.[5] அவர் இதைத் தாழ்வரம்பாகக் கூறியிருக்கலாம். இயல்பான மாந்தக் காட்சி வரம்பு விலக்கம் 1° என்றால் நிலா விளிம்பு/சூரிய விளிம்புகளின் மொத்தக் காட்சி விலக்கம் (3° துல்லியம்) ஆகும். அரிசுட்டார்க்கசு ஒளி, காட்சி பற்றியும்கூட ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.[6]

அரிசுடார்க்கசுக்கு ஒருநூற்றாண்டுக்குப் பிறகு வாழ்ந்த ஃஎலனிய வானியலாளரான செல்யூசியாவைச் சேர்ந்த செலெயூக்கசு இவரது கதிர்மையகப் படிமத்துக்கான செயல்விளக்கத்தைத் தந்தார்.[7] ஆனால் அவ்விளக்கம் நமக்குக் கிடைக்கவில்லை. முதுவல் பிளினியும்[8] செனிக்காவும்[9] கோள்களின் பின்செல்லும் இயக்கம் ஒரு தோற்ற மயக்கமே என உறுதிப்படுத்தியது, அவர்களது காலம்வரை கதிர்மையக் கோட்பாடு ஏற்கப்பட்ட கோட்பாடாக நிலவியதைக் காட்டுகிறது.

கதிர்மையக் கோட்பாடு அவரது காலத்தில் மறுக்கப்பட்டது என்பது பொதுவான கருத்தே. புளூட்டார்க் இயற்றிய நிலா வட்டணையின் தோற்றமுகம் பற்றி எனும் நூலின் ஒரு பகுதியை கில்லேசு மேனக் மொழிபெயர்த்ததால் ஏற்பட்டது எனலாம். அதில் அரிசுடார்க்கசின் ஒருசாலை அறிஞரும் சுதாயிக்குகளின் தலைவருமான கிளீந்தெசு ஒரு சூரிய வழிபாட்டாளர் என்றும் அவர் கதிர்மையக் கோட்பாட்டை எதிர்ப்பது அவரது பக்தியின்மையையே காட்டுகிறது என அரிசுடார்க்கசு நகைபடக் கூறியதாக உள்ளது. கலிலியோவுக்கும் ஜியார்டினோ புரூனோவுக்கும் தண்டணை வழங்கப்பட்ட்தும் கில்லேசு மேனக் செயபடுபொருளை (வினை செயற்படும் பொருளைச் சுட்டுவது) எழுவாயாக (தொடரனின்/வாக்கியத்தின் செய்வோனைச் சுட்டுவது) மாற்றி கதிர்மையக் கோட்பாட்டாளர் மேலேயே பக்தியின்மையைக் குற்றச்சாட்டை மாற்றித் திருப்பிவிட்டார். இதனால் உருவாகிய பொய்யுணர்வு கற்பித்த தனித்துவிடப்பட்ட, அரிசுடார்க்கசு ஆளுமை இன்றுவரையும் தொடர்கிறது.[10][11]

இந்தத் துல்லியம் குறைந்த 87° புவியளவுத் தரவைப் பயன்படுத்தி, ஆனால் சரியான வடிவவியல் முறையைக் கொண்டு சூரியன் நிலாவைப்போல 18 இலிருந்து 20 மடங்கு தொலைவு தள்ளியிருக்கும் எனக் கூறினார். (கோணத்தின் உண்மையான மதிப்பு 89° 50' ஆகும். நிலாவைப் போல சூரியன் 400 மடங்கு அப்பால் அமைகிறது.) கிபி 16ஆம் நூற்றாண்டு டைக்கோ பிராகி காலம் வரை இந்த 3° அளவுக்கும் சற்றே குறைவான, தவறான சூரிய இடமாறு தோற்றப் பிழையே அனைவராலும் பின்பற்றப்பட்டது. பார்க்கும்போது, சூரியனும் நிலாவும் கிட்டத்தட்ட சமத் தோற்றக் கோண அளவுகளில் வெட்டுவதால் சூரியன் விட்டம் நிலாவைப் போல அவற்றின் தொலைவுகளின் விகிதத்தில், அதாவது 18 இலிருந்து 20 மடங்காக, அமையும் என்றார்.[12]

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரிசுட்டார்க்கசு&oldid=3849129" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை