அல்கம்றா

அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது.[1][2][3]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அல்கம்பிரா, செனெரலைஃப் மற்றும் அல்பாய்சின், கிரெனடா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
The Patio de los Arrayanes.
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, iii, iv
உசாத்துணை314
UNESCO regionஐரோப்பாவும் வட அமெரிக்காவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8th தொடர்)
விரிவாக்கம்1994

ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்கம்பிராவுக்குள் உள்ள ஐந்தாம் சார்ல்சின் அரண்மனை 1527-ம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது.

மேலோட்டம்

அல்கம்பிரா அமைந்துள்ள சமவெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் (674 அடி) அகலமும் கொண்டது. இது மேல்வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 சதுர மீட்டர்கள் பரப்பளவையும் கொண்டுள்ளது. இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட அல்கசாபா (உள்நகரம்) அமைந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. இப்பகுதியைச் சூழ 13 கோபுரங்களைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக் கோபுரங்களுட் சில பாதுகாப்புக் காரணங்களுக்கானவை.

மேலும் வாசிக்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அல்கம்றா&oldid=3768228" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை