உலக பாரம்பரியக் குழு

உலக பாரம்பரியக் குழு (World Heritage Committee) என்பது உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய மரபொழுங்குகளைச் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு குழுவாகும். 21 நாட்டு உறுப்பினர்களைக்[1] கொண்ட இக்குழு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.[2]

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவிற்கான இலச்சினை

உலக பாரம்பரிய மரபொழுங்கின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம். ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கி வருகின்றன.[2]. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்[2].

பொறுப்புகள்

இக்குழுவின் பொறுப்புகள்

  • பாரம்பரிய களங்கள் தொடர்பான மரபொழுங்குகள் கடைபிடிக்கப்படுவதைக் கவனித்துக் கொள்ளுதல்
  • மரபொழுங்குகள் தொடர்பான நடைமுறைகளை செயல்படுத்துதல்
  • உலக பாரம்பரிய நிதியத்தின் பயன்பாட்டை வரையறுத்தல்
  • ஒரு நாடானது தனது எல்லைக்குட்பட்ட பாரம்பரியக் களத்தைப் பாதுகாக்க நிதி உதவி கோரும்பொழுது, அதனை உலக பாரம்பரிய நிதியத்திலிருந்து வழங்குதல்

அமர்வுகள்

உலகப் பாரம்பரியக் குழு, ஏற்கனவே உள்ள பாரம்பரியக் களங்களின் மேலாண்மை குறித்தும் நாடுகளிலிருந்து பெறப்பட்ட புதியக் களங்களுக்கான பரிந்துரைகளை ஏற்பது குறித்தும் கலந்துரையாட ஆண்டுக்கொருமுறை கூடுகிறது.[2]

அமர்வு[3]ஆண்டுநாள்நடந்த நகரம்நாட்டுக் குழு
1197727 சூன்–1 சூலைபாரிசு  பிரான்சு
219785 செப்டம்பர்–8 செப்டம்பர்வாஷிங்டன், டி.சி.  அமெரிக்க ஐக்கிய நாடு
3197922 அக்டோபர்–26 அக்டோபர்கெய்ரோ & லுக்சார்  எகிப்து
419801 செப்டம்பர்–5 செப்டம்பர்பாரிசு  பிரான்சு
5198126 அக்டோபர்–30 அக்டோபர்சிட்னி  ஆத்திரேலியா
6198213 திசம்பர்–17 திசம்பர்பாரிசு  பிரான்சு
719835 திசம்பர்–9 திசம்பர்பிளாரென்சு  இத்தாலி
8198429 அக்டோபர்–2 நவம்பர்புவெனஸ் ஐரிஸ்  அர்கெந்தீனா
919852 திசம்பர்–6 திசம்பர்பாரிசு  பிரான்சு
10198624 நவம்பர்–28 நவம்பர்பாரிசு  பிரான்சு
1119877 திசம்பர்–11 திசம்பர்பாரிசு  பிரான்சு
1219885 திசம்பர்–9 திசம்பர்பிரசிலியா  பிரேசில்
13198911 திசம்பர்–15 திசம்பர்பாரிசு  பிரான்சு
1419907 திசம்பர்–12 திசம்பர்பான்ஃப்  கனடா
1519919 திசம்பர்–13 திசம்பர்கார்த்தேஜ்  துனீசியா
1619927 திசம்பர்–14 திசம்பர்சான்டா ஃபே  அமெரிக்க ஐக்கிய நாடு
1719936 திசம்பர்–11 திசம்பர்கார்டஜெனா  கொலொம்பியா
18199412 திசம்பர்–17 திசம்பர்பூகெத்  தாய்லாந்து
1919954 திசம்பர்–9 திசம்பர்பெர்லின்  ஜெர்மனி
2019962 திசம்பர்–7 திசம்பர்மெரிடா  மெக்சிக்கோ
2119971 திசம்பர்–6 திசம்பர்நேப்பிள்சு  இத்தாலி
22199830 நவம்பர்–5 திசம்பர்குயோட்டோ  ஜப்பான்
23199929 நவம்பர்–4 திசம்பர்மார்ரெகெச்  மொரோக்கோ
24200027 நவம்பர்–2 திசம்பர்கெய்ர்ன்ஸ்  ஆத்திரேலியா
25200111 திசம்பர்–16 திசம்பர்ஹெல்சிங்கி  பின்லாந்து
26200224 சூன்–29 சூன்புடாபெஸ்ட்  அங்கேரி
27200330 சூன்–5 சூலைபாரிசு  பிரான்சு
28200428 சூன்–7 சூலைசுசூ  சீனா
29200510 சூலை–17 சூலைடர்பன்  தென்னாப்பிரிக்கா
3020068 சூலை–16 சூலைவில்னியசு  லித்துவேனியா
31200723 சூன்–1 சூலைகிறைஸ்ட்சர்ச்  நியூசிலாந்து
3220082 சூலை-10 சூலைகுயுபெக் நகரம்  கனடா
33200922 சூன்-30 சூன்செவைல்  எசுப்பானியா
34201025 சூலை-3 ஆகத்துபிரசிலியா  பிரேசில்
35201119 சூன்-29 சூன்பாரிசு  பிரான்சு
36201225 சூன்-5 சூலைசென் பீட்டர்ஸ்பேர்க்  உருசியா
37201317 சூன்-27 சூன்புனோம் பென்  கம்போடியா
38201415 சூன்-25 சூன்தோகா  கத்தார்
39201528 சூன்-08 சூலைபான்  ஜெர்மனி
402016சூலைஇசுதான்புல்  துருக்கி


உறுப்பினர்கள்

2016ல் துருக்கியில் நடைபெற உள்ள 40ம் ஆண்டுக் கூட்டத்தில் பங்குபெறும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் குழு உறுப்பினர்கள்.

உறுப்பினர்[4]சார்பாளர்குறிப்புகள்
 அல்சீரியா
 கொலொம்பியா
 குரோசியா
 பின்லாந்து
 ஜெர்மனி
 இந்தியா
 ஜமேக்கா
 ஜப்பான்
 கசக்ஸ்தான்
 லெபனான்துணைத் தலைவர்
 மலேசியா
 பெருதுணைத் தலைவர்
 பிலிப்பைன்ஸ்துணைத் தலைவர்
 போலந்துதுணைத் தலைவர்
 போர்த்துகல்
 கத்தார்
 தென் கொரியாயூஜின் ஜோஒருங்கிணைப்பாளர்
 செனகல்துணைத் தலைவர்
 செர்பியா
 துருக்கிகுர்கன் துர்கோக்லுஅவைத்தலைவர்
 வியட்நாம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
World Heritage Sites
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை