அழுத்த நீர் அணு உலை

அழுத்த நீர் அணு உலைகள் (Pressurized water reactor, PWRs) மேற்கத்திய அணு மின் நிலையங்களில் பெரும்பான்மையானதும் வெப்பக்கடத்தியாக நீரைப் பயன்படுத்தும் மூன்று வகை மென்னீர் அணு உலைகளில் ஒன்றுமாகும்; மற்றவை கொதிநீர் அணு உலைகளும் (BWRs) மற்றும் உய்யமிகை நீர் அணு உலைகளும் (SCWRs) ஆகும். ஓர் அழுத்த நீர் அணு உலையில் முதன்மை வெப்பமாற்றி அல்லது குளிர்வியான (நீர்) மிகுந்த அழுத்தத்தில் அணுஉலையின் உள்ளகத்திற்கு பீய்ச்சப்பட்டு அங்கு அணுக்களின் பிளவினால் வெளிப்படும் ஆற்றலால் சூடாக்கப்படுகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் ஓர் நீராவி ஆக்கிக்கு செலுத்தப்பட்டு அங்கு வெப்ப ஆற்றல் மாற்றமடைந்து நீராவி உருவாகிறது. இந்த நீராவி சுழலி மின்னாக்கிகளில் செலுத்தப்பட்டு மின்சாரம் உண்டாக்கப்படுகிறது. கொதிநீர் அணு உலைகளைப் போலன்றி வெப்பமாற்றியாக நீர் பயன்படுத்தும்போது உயர் அழுத்தத்தில் இருப்பதால் அணுஉலையின் உள்ளகத்தில் நீர் கொதிப்பதில்லை. அனைத்து மென்னீர் அணுஉலைகளிலும் சாதாரண மென்னீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவின் அணுக்கரு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அழுத்தநீர் அணு உலையின் கலன்களின் படிமம்.

அழுத்த நீர் அணுஉலைகள் துவக்கத்தில் அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்க வடிவமைக்கப்பட்டன; முதன்முதலாக ஷிப்பிங்போர்ட் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஐக்கிய அமெரிக்க நாட்டில் இயங்கும் அழுத்தநீர் அணுஉலைகள் இரண்டாம் தலைமுறை அணு உலைகள் எனக் கருதப்படுகின்றன. உருசியாவின் விவிஈஆர் அணுஉலைகளும் இவ்வாறானதே. பிரான்சு|பிரான்சின் மின்னுற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது அழுத்த நீர் அணு உலைகளே.

வரலாறு

அமெரிக்கா 1954 முதல் 1974 வரை அழுத்தநீர் அணு உலைகளை இயக்கி வந்தது. திரீ மைல் தீவு அணு மின் நிலையம் துவக்கத்தில் TMI-1 மற்றும் TMI-2 என பெயரிடப்பட்ட இரு அழுத்த நீர் அணு உலைகளை இயக்கி வந்தது.[1] TMI-2 அணு உலையில் 1979ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தின் பின்னணியில் புதிய அணு உலைகளின் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவில் நிறுத்தப்பட்டது. .[2]

வடிவமைப்பு

அழுத்த நீர் அணுஉலையில் ஆற்றல் பரிமாற்றங்கள் குறித்த சித்திர விளக்கம். முதன்மை குளிர்விப்பான் செம்மஞ்சள் வண்ணத்திலும் இரண்டாம் நிலை குளிர்விப்பான் (நீராவியும் பின்னர் ஊட்டுநீரும்) நீல வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அழுத்த_நீர்_அணு_உலை&oldid=2745156" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை