அஸ்டெக் நாகரிகம்

அசுடெக் நாகரிகம் (Aztec culture:/ˈæztɛk/ [1]) 1300 முதல் 1521 வரையிலான காலகட்டத்தில் மத்திய மெக்சிகோவில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தைக் குறிக்கிறது. மெக்சிகா கலாச்சாரம் என்றும் அறியப்படும் இக்கலாச்சாரம் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியிலிருந்து தழைத்தோங்கியது ஆகும். இக்காலகட்டத்தில் மெக்சிகோ மூன்று நகர அரசுகள் சேர்ந்து உருவான மும்மடிக் கூட்டணியால் ஆளப்பட்டு வந்தது. டெக்சுகோகா மற்றும் டெபானிகா பழங்குடியினர்கள் சேர்ந்து அசுடெக் பேரரசை நிறுவினர். மத்திய மெக்சிகோவின் சில இனக்குழுக்கள், குறிப்பாக நகோதா மொழி பேசக்கூடிய மக்கள் அசுடெக் மக்கள் என அழைக்கப்பட்டனர். 14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை இடையமெரிக்கப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் இவ்ர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இவர்கள் தங்களை மெக்சிகா அல்லது மெகிக்கா என்று அழைத்துக்கொண்டனர் [2].

அசுடெக் பேரரசின் வரைபடம், ஆண்டு 1519

அசுடெக்குகள் என்று அழைக்கப்பட்ட மக்களின் கலாச்சாரம் அசுடெக் கலாச்சாரம் எனப்பட்டது. ஆனால் மத்திய மெக்சிகோவின் பெரும்பாலான இன குழுக்கள் அடிப்படை கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொண்டதால் அசுடெக் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் பண்புகளை அசுடெக்குகளுக்கு மட்டுமே உரியவை எனப் பிரத்யேகமாகக் கூற முடியாது. இதே காரணத்திற்காக அசுடெக் நாகரிகம் என்ற கருத்துத் தோற்றத்தை, ஒரு பொது இடையமெரிக்க நாகரிகத்தின் சமகால நாகரிமாக அறிய முடிகிறது [3]. மத்திய மெக்சிகோவில் வாழ்ந்த மக்கள் நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். பிபில்டின் எனப்படும் உயர்குடிப் பிரபுக்கள் மற்றும் மாசெகுவால்டின் எனப்படும் சாதாரன மக்களும் கலந்ததாக அசுடெக் சமுதாயம் காணப்பட்டது. டெசுகாட்லிபோகா, டிலாலோகா, கிட்சால்குவாடலி போன்ற தெய்வங்களின் வழிபாடு இச்சமூகத்தின் ஓர் அங்கமாக விளங்கியது. டொனால்போகுவலி எனப்படும் 260 நாட்கள் உள்ளடங்கிய சியுபோகுவலி என அழைக்கப்பட்ட 365 நாட்கள் நாட்காட்டி முறையை இவர்கள் பயன்படுத்தினார்கள். டெனோகிட்லாங்கின் நகரத்திலிருந்த அசுடெக்குகள் குறிப்பாக மெக்சிகோவின் காக்கும் கடவுள் ஊட்சிலோபோச்சோட்லி, இரட்டை பிரமிடுகள், மற்றும் அசுடெக் I முதல் III என அறியப்பட்ட பீங்கான் ஆடை ஆகியவற்றை வணங்கினர்.

13 ஆம் நூற்றாண்டு முதல் மெக்சிகோ பள்ளத்தாக்கு அசுடெக் நாகரிகத்தின் இதயமாக இருந்தது. அசுடெக்கு மும்மடி கூட்டணியின் தலைநகரமான டெனோகிட்லான் நகரம் இப்பள்ளத்தாக்கில்தான் இருந்தது. டெக்சுகோகோ ஏரியில் சிறுதீவாக உயர்ந்த நிலப்பகுதியில் இந்நகரம் உருவாக்கப்பட்டது. மும்மடிக் கூட்டணி அசுடெக் பேரரசை உருவாக்கியது. கப்பம் கட்டிக்கொண்டு ஒரு சிற்றரசாக இருந்த அசுடெக் நாகரிகம் நாளடைவில் மெக்சிகோ பள்ளத்தாக்குக்கு அப்பாலும் அதன் அரசியல் மேலாதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. இடையமெரிக்க நகரங்கள் சிலவற்றை பிந்தைய காலகட்டத்தில் வென்று தன்னுடன் இணைத்துக் கொண்டது. டெனோகிட்லான், டெக்சுகோகோ மற்றும் இட்லாகோபான் நகர அரசுகள் ஒன்றிணைந்து 1427 ஆம் ஆண்டில் மும்மடிக் கூட்டணியை உருவாக்கின. முன்னதாக மெக்சிகோ வளைகுடாவை ஆட்சி செய்துகொண்டிருந்த அசுகாபோட்சால்கோவின் டெபானெக் அரசை இக்கூட்டணி தோற்கடித்தது. விரைவிலேயே இக்கூட்டணியிலிருந்த டெக்சுகோகோவும் இட்லாகோபானும் பலமிழந்து டெனோகிட்லான் நகர அரசின் தலைவர்கள் உண்மையில் கூட்டணியை ஆட்சிசெய்தனர். பேரரசு தன் சக்தியை வர்த்தக மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அதிகரித்துக் கொண்டது. ஆக்ரமித்த அல்லது கைப்பற்றிய மாகாணங்களில் வெறும் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மட்டும் ஆட்சி செய்வது உண்மையான பேரரசு அல்ல. மாறாக அதன் கட்டுபாட்டிலுள்ள சிற்றரசுகளை நட்பு ஆட்சியாளர்களை நிறுவியும், ஆளும் வம்சங்களுக்கிடையில் திருமண உறவுகளை உருவாக்குவதன் மூலமூம், அவர்களுக்கு வழங்கப்படும் உயர் அதிகாரங்களை விரிவுபடுத்துவதன் மூலமும் மட்டுமே உண்மையான பேரராசாக இருக்க முடியும் [4]. சிற்றரசுகள் அசுடெக் பேரரசர் இயூ டிலாட்டோவானிக்கு கப்பம் கட்டினர். இது அவர்களை பொருளாதார ரீதியாக வெளியுறவுக் கொள்கைகளையும், தொலைவில் உள்ள பகுதிகளுடன் தொடர்பாடல் மற்றும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தியது. ஆடம்பர பொருட்களை கையகப்படுத்துவதற்கு உயரதிகார மையத்தை சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று [5].


பேரரசின் அரசியல் செல்வாக்கு மேலும் தெற்கில் பரவியது. பல போர்களை நடத்தி இடையமெரிக்க நகரங்களைக் கைப்பற்றி தனது ஆட்சிப்பகுதிகளை விரிவாக்கியது. மெக்சிகோவின் சியாபாசு பகுதியையும், மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலாவையும் தனது பேரரசுடன் சேர்த்துக் கொண்டது. பசிபிக் பெருங்கடல் முதல் அட்லாண்டிக் பெருங்கடல் வரை பக்கத்துக்குப் பக்கம் தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது. எர்னான் கோர்டெசு தலைமையிலான எசுபானிய வெற்றியாளர்கள் வருவதற்கு சற்று முன்பாக 1519 இல் பேரரசு அதன் அதிகபட்ச அளவை அடைந்தது, அசுடெக் பேரரசின் பாரம்பரிய எதிரிகளான நகூவல் மொழி பேசும் டிலாக்சுகால்டெகாவுடன் இணைந்ததன் மூலம் அவரல் அசுடெக் பேரரசை கவிழ்க்க முடிந்தது. இதன் விளைவாக மெக்சிக்கோ நகரத்தின் புதிய குடியேற்றத்தை அசுடெக் தலைநகரில் எசுபானிய புதிய குடியேற்றம் நிறுவப்பட்டது. மேலும் இவர்கள் மத்திய அமெரிக்காவை காலனித்துவப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டனர்.

அசுடெக் கலாச்சாரம் மற்றும் அதன் வரலாறு போன்றவற்றை மெக்சிகோ நகரத்திலுள்ள புகழ்பெற்ற டெம்போலோ மேயர் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தொல்பொருள் சான்றுகளால் முதன்மையாக அறியப்பட்டது.

கொலம்பியர்களின் வருகைக்கு முன்னரே எழுதப்பட்ட புத்தகங்களில் இருந்தும் அறியப்பட்டது. அசுடெக் நாகரிகத்தைக் குறித்து கோர்டெசு மற்றும் பெர்னல் டிலாசு டெல் காசுடில்லோ போன்ற எசுபானிய வீரர்கள் நேரடியாக சாட்சியம் அளித்தனர். குறிப்பாக அசுடெக் கலாச்சாரம் மற்றும் வரலாறு என்ற தலைப்பில் எழுதப்பட்ட எசுபானிய துறவியின் வரலாற்று நூலும், பிரான்சிசுகன் சபையைச் சேர்ந்த பெர்னார்டினோ டி சகாகுயின் எழுதிய புளோரெண்டைன் கோடெக்சு போன்றவர்கள் நாவாட்டில் மொழியில் எழுதிய இலக்கியங்களும் அசுடெக் நாகரிகத்திற்கான சான்றுகளாகும். அசுடெக் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருந்தபோது வளமான மற்றும் சிக்கலான புராண மற்றும் சமயமரபுகளை கொண்டிருந்தது, அத்துடன் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை மற்றும் கலைச் சாதனைகளையும் அடைந்திருந்தது.

அசுடெக் நாகரிகம் கட்டாய கல்வி முறையைக் கொண்டிருந்த ஒரு முன்னேற்றகரமான நாகரிகமாகும். அசுடெக் நாகரிகம் கட்டட கலையிலும், கலை திறன்களிலும் சிறந்து விளங்கியது. கலாசாரத்திலும், அறிவியல் முன்னேற்றதிலும் உன்னத நிலையில் விளங்கிய அசுடெக் நாகரிக மக்கள், நரபலியிடுதல் போன்ற கொடுர பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[6]

வரையறைகள்

நாகுவாட்டல் மொழியில் அசுடெக்கல்[7] என்ற ஒருமைச் சொல்லும் அசுடெக்கா[7] எனப்படும் பன்மைச் சொல்லும் நாகுவாட்டல் மொழியைப் பேசுகின்ற அசுட்லான்[8] என்ற தொன்மைப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்ற பொருளைக் குறிக்கின்றன. பின்னாளில் இப்பகுதி மக்கள் மெக்சிகா மக்கள் எனப்பட்டனர். டெக்சுகோகோ ஏரியில் உள்ள் ஒரு தீவில் பொதுவாக அசுடெக் என்ற சொல் டெனோகிட்லாங் பகுதியிலிருந்து வ்ந்த மெக்சிகா மக்களைக் குறிக்கும். இவர்கள் டெக்சுகோகோ ஏரியில் உள்ள் ஒரு தீவிலிருந்து வந்து தங்களை மெக்சிகா டெனொட்கா என்று அழைத்துக் கொண்டார்கள்.

சில சமயங்களில் டெனோகிட்லான் நகருடன் சேர்ந்த இரண்டு பிரதான நகர-மாநிலங்களான டெக்சுகோகோவின் அகோல்குவா மற்றும் டிலாகோபானின் டெபானெக்ச்சையும் அசுடெக் என்ற சொல் உள்ளடக்குகிறது. இவையிரண்டுந்தான் மெக்சிகாவுடன் சேர்ந்து மும்மடிக் கூட்டணியாக உருவாயின.இக்கூட்டணியே அசெடெக் பேரரசைக் கட்டுப்படுத்தியது. மற்ற சில சூழல்களில் அசுடெக் நாகரிகம் என்பது பல்வேறு நகர்ப்புற மாநிலங்கள் அதாவது, மெக்சிகா, அகோல்குவா இனத்துடன் பகிர்ந்து கொள்ளும் மக்களையும், அவர்கள் இன வரலாறு மற்றும், கலாச்சார அம்சங்களையும் இணைத்துக் கொள்கிறது. மேலும் நாகுவாட்டல் மொழி பேசும் மக்களும் அசுடெக் தன்னோடு இணைத்துக் கொண்டது. இந்த பொருளுடன் அசுடெக் நாகரிகத்தை நோக்கினால், அசுடெக் நாகரிகத்திற்கு சொந்தமான அனைத்து கலாச்சார வடிவங்களும் கொண்டு வாழ்கின்ற மத்திய மெக்சிகோவில் வாழும் மக்கள் அனைவரையும் இக்கலாச்சாரத்தின் வகையில் சேர்த்து பேச முடியும்.

இனக் குழுக்களை விவரிக்க அசுடெக் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது அது தொன்மை காலத்தின் பிற்பகுதியில் மத்திய மெக்சிகோவின் காலப்பகுதியில் நாகுவாட்டல் மொழியைப் பேசும் மக்களைக் குறிப்பதாக கொள்ளப்படுகிறது. தெனோகிட்லான் பேரரசை நிறுவுதலில் மெக்சிகா இனக்குழுக்கள் முக்கியப் பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அசுடெக் பேரரசுடன் தொடர்புடைய அகோல்குவா, டெபனெக் மற்றும் பிற குழுக்களையும் அசுடெக் என்ற சொல் குறிக்கிறது. பழைய பயன்பாடுகளில் இந்த வார்த்தை நாகுவாட்டல் மொழி பேசும் இனக்குழுக்களைக் குறிக்கவே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் நாகுவாட்டல் மொழிதான் அசுடெக் நாகரிகத்தின் மொழியாக முன்னர் கருதப்பட்டது. சமீபத்திய பயன்பாட்டில், இந்த இனக்குழுக்கள் நாகுவா மக்கள் என அழைக்கப்படுகிறார்கள் [9][10]. மொழியியல் ரீதியாக, "அசுடெக்கான்" என்ற சொல்லானது யூட்டோ-அசுடெக்கான் மொழிகளின் கிளை அல்லது சில நேரங்களில் யூட்டோ-நாநாகுவன் மொழிகள் அழைக்கப்படுகிறது இதில் நாகுவாட்டல் மொழியும் அதன் நெருங்கிய மொழிகளான போச்சூடெக், மற்றும் பிப்பில் மொழிகளும் அடங்கும் [11].

வரலாறு

அசுடெக் மக்களின் பிரமிடு கோயில்
அசுடெக் போர் வீரர்கள்

அசுடெக்குகள் 14, 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் மத்திய மெக்சிகோவில் கொலம்பியர்களுக்கு முந்தைய இடையமெரிக்க மக்களாக இருந்தனர். அவர்கள் தங்களை மெக்சிகா என்று அழைத்துக் கொண்டனர்.

அசுடெக் பேரரசின் தலைநகரம் டெனோகிட்லான் ஆகும். இப்பேரரசின் காலத்தில் டெக்சுகோகோ ஏரியில் இருந்த ஒரு திவில் இந்நகரம் உருவாக்கப்பட்டது. நவீன மெக்சிகோ நகரம் டெனோகிட்லான் நகரின் lan இடிபாடுகள் மீது கட்டப்பட்டது.

அமெரிக்காவின் எசுபானியக் குடியேற்றமானது, இரண்டாம் இயூய் டிலாட்டானி மொக்டெசூமா ஆட்சியின் போது நிகழ்ந்தது. 1521 இல் எர்னான் கோர்டெசு, மற்ற பூர்வீக அமெரிக்கர்களுடன் சேர்ந்து, அசுடெக்குகளை உயிர்நஞ்சுப் போர், முற்றுகைப் போர், உளவியல் போர் மற்றும் நேரடி போர் மூலம் வெற்றி கொண்டனர்.

1376 ஆம் ஆண்டு முதல் 1427 ஆம் ஆண்டு வரை, மெக்சிகாவானது அசுகாபோசால்கோவின் சிற்றரசாக இருந்தது. ஆஜ்டெக் ஆட்சியாளர்கள் அகாமாபிசிட்லி,அல்ட்சுயிலிகூட்டல் மற்றும் சிமல்போபோகா ஆகியோர் சிற்றரசை ஆட்சி செய்தனர்.

டெபானிக்கை ஆட்சி செய்த டெசோசோமோக் 1425 இல் இறந்த பின்னர் அவரது மகன் மேக்சுட்லா அசுகாபோட்சால்கோவின் அரியணை ஏறி அரசரானார். மெக்சிகோ சமவெளிக்கு அருகிலுள்ள மாகாணங்களில் தனது ஆட்சியை பரப்ப முயற்சிகள் மேற்கொண்டார். இந்த செயல்முறையின் போது, சிமல்போபோகா, டிலாட்டுவானி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே சமயத்தில் டெக்சுகோகொவின் நெசாகுவால்கோயோடல் நாடுகடத்தப்பட்டார் [12].

வீழ்ச்சி

அசுடெக் நாகரிகத்தின் வீழ்ச்சி கொடூரமான குடியேற்றவாதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். கேர்னன் கோர்டெஸ் தலைமையிலான எசுபானியப் படைகள் 1519 இல் மெக்சிக்கோவுக்குச் சென்றது. அஸ்டெக்குகளின் எதிரிகளான ட்லெக்சகாலாக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட இவர்கள் அசுடெக் பேரரசனான மொன்டெசூமாவைக் கொலை செய்தனர். ஆனால் அஸ்டெக்குகளின் தாக்குதலில் தப்பியோடினர்.

பின்னர் டெனோச்டிட்லனில் பரவிய பெரியம்மை காரணமாக பெருமளவு அஸ்டெக்குகள் இறந்த நிலையில் மீண்டும் தாக்கிய ஸ்பானியர்கள் டெனோச்டிட்லனினை அழித்து அதனைக் கைப்பற்றினர். அசுடெக் பேரரசு முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அசுடெக்குகள் கல்வி கற்பது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aztec
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அஸ்டெக்_நாகரிகம்&oldid=3209399" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை