ஆட்சி மொழி

ஆட்சி மொழி () அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.[1] மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது[2] என்பதால் "ஆட்சி மொழி" என்னும் சொல் மக்கள் அல்லது நாடு பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.[3]

விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆட்சி_மொழி&oldid=3532414" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை