ஆந்தைக் கிளி

பறவை இனம்

ஆந்தைக் கிளி அல்லது காக்காப்போ ( kakapo (மாவோரி மொழி: kākāpō அல்லது இரவுக் கிளி ), Strigops habroptilus (Gray, 1845), என்பது, ஒரு வகைக் கிளி ஆகும். இது ஒரு பறக்காத பறவையாகத் தரையில் வாழக்கூடிய ஒரு இரவாடி இவை நியூசிலாந்தில் காணப்படக்கூடிய அகணிய உயிரினமாகும்.[2]

ஆந்தைக் கிளி
ஒரு ஆண்பறவை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
சிட்டாசிபார்மிசு
குடும்பம்:
Strigopidae
பேரினம்:
ஆந்தைக் கிளி

G.R. Gray, 1845
இனம்:
S. habroptilus
இருசொற் பெயரீடு
Strigops habroptilus
G.R. Gray, 1845

இவை மஞ்சள், பச்சை கலந்த நிறத்துடன், பூனை மீசை போன்று வாயைச் சுற்றி முளைத்துள்ள மயிர் போன்ற இறகுகள், பெரிய சாம்பல் நிற அலகு, குறுகிய கால்கள், பெரிய கால் அடிகளை உடையவை. இவற்றின் இறக்கைகள் மற்றும் வால் ஒப்பீட்டளவில் குறுகிய நீளமுடையவை. இது உலகின் ஒரே பறக்கமுடியாத கிளியாக இருக்கிறது, இவை உடல் பருமன் கொண்டவை; இரவு நேரங்களில் மட்டும் திரியக்கூடிய தாவர உண்ணிகளாகும். மேலும் இவ்வினப் பறவைகள் உடல் தோற்றத்தில் பால் ஈருருமை தோற்றம் உடையவை, இவை உலகில் நீண்டநாள் வாழும் பறவைகளில் ஒன்றாகும்.[3] சில கிளிகள் 120 ஆண்டுகள்வரைகூட உயிர் வாழும்.[4]நியூசிலாந்தின் பல பறவை இனங்களைப் போலவே, ஆந்தைக் கிளியும் மாவோரி மக்களின் பழங்குடி வாழ்வில் வரலாற்று சிறப்புமிக்கதாக, பாரம்பரியப் புனைவுகள் மற்றும் நாட்டுப்பறவியல் முக்கியத்தவம் மிக்கதாக இருந்தது. இவை இந்தப் பழங்குடி இனத்தவரால் வேட்டையாடப்பட்டு பல வகையில் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் இறைச்சி உணவுத் தேவைக்கும், இவற்றின் சிறகுகள் ஆடைகளை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கும் இம்மக்களுக்குப் பயனுள்ள பொருள்களாக இருந்தன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆந்தைக்_கிளி&oldid=3927456" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை