ஆன்கோவ்

ஆன்கோவ் என்றும் ஆன்கோ (Hankou), என்றும் அழைக்கப்படும் இது சீனாவின் ஊபேய் மாகாணத்தின் மூன்று நகரங்கள் (மற்றவை ஊச்சாங் மற்றும் அன்யாங்) ஒன்றிணைந்து தலைநகரான நவீன ஊகான் நகரமாக மாறியது. இது ஆன் ஆறு மற்றும் யாங்சி ஆறுகளுக்கு வடக்கே அமைந்துள்ளது. இங்கு ஆன் ஆறு யாங்சி ஆற்றில் கலக்கிறது. இது, அதன் மூன்று சகோதர நகரங்களான அன்யாங் (ஆன் ஆறு, யாங்சி ஆறுகளின் இடையே), ஊச்சாங் ( யாங்சியின் தெற்கே) ஆகியவற்றுடன் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆன்கோவ்
நகரம் சீனா
1921–1949
 

 

Location of ஆன்கோவ்
Location of ஆன்கோவ்
1915 நிலவரப்படி ஆன்கோவின் வரைபடம்
வரலாறு
 • நிறுவப்பட்டது3 சூலை 1921
 • Disestablished16 மே 1949
தற்காலத்தில் அங்கம்ஊகான் மாநிலத்தின் ஒரு பகுதி

இந்நகரம் ஊபேய் மாகாணத்தின் முக்கிய துறைமுகமாகவும், யாங்சி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள மிகப்பெரிய துறைமுகமாகவும் உள்ளது

வரலாறு

நகரத்தை மீண்டும் கைப்பற்ற துருப்புக்கள் அனுப்பப்பட்டன
நகரத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு (1911)
ஆன்கோ (ஆன்கோவ் என்று முத்திரை குத்தப்பட்ட வரைபடம்)

நகரத்தின் பெயர் "ஆனின் வாய்" என்று பொருள்படும். இது யாங்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இலியு சாங்கிங் என்பவர் எழுதிய தாங் வம்சக் கவிதையில் இப்பெயர் தோன்றுகிறது. நகரத்தின் பிற வரலாற்று பெயர்களில் சியாகோ, இலுகோ ஆகியவையும் அடங்கும்.[1]

இந்நகரம், மிங் முதல் சிங் வம்சங்களின் கீழ் அன்யாங்கில் உள்ளூராட்சி மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. இருப்பினும் இது ஏற்கனவே மிங் வம்சத்தில் உள்ள நான்கு முக்கிய தேசிய சந்தைகளில் ஒன்றாகும் . 1899 ஆம் ஆண்டு வரை தான் இந்நகரத்தை அன்யாங்கிலிருந்து பிரிக்க சீன அதிகாரியான சாங் சிடோங் என்பவர் முடிவு செய்தார். இது, பின்னர் சூரென், இயூயி, சூன்லி, தாசி ஆகிய நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதே போன்ற சில பெயர்களை இன்றைய ஊகானில் காணலாம். அங்கு புவியியல் பெயர்களான சூன்லிமென், சூரென்மென், தாசிமென் போன்ற பெயர்கள் உள்ளன.[2][3]

1926 ஆம் ஆண்டில், இது ஒரு நகரமாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதன் நகராட்சி அரசாங்கம் சியாங்கன் மாவட்டத்தில் இணைக்கப்ப்பட்டது. அதே ஆண்டில், வடக்குப் போர்கள் இந்நகரத்தை நெருருங்கியது. மேலும் நகரத்தின் அருகிலுள்ள ஊச்சாங், இதனுடன் இணைக்கப்பட்டு தேசிய தலைநகரான ஊகானின் இடமாக மாற்றியது.[2][3][4] ஆனால் 1927 ஆம் ஆண்டில், தேசிய தலைநகராக இருப்பதற்கான போராட்டத்தில் நாஞ்சிங் வெற்றி பெற்றபோது, ஊகான் அதன் அசல் வடிவத்திற்குத் திரும்பியது. இது மீண்டும் ஒரு நகரமாக இருந்தது. இந்த முறை இது ஒரு "சிறப்பு நகராட்சி" யாக நிறுவப்பட்டது. இது இன்றைய நாளில் நேரடி கட்டுப்பாட்டு நகராட்சியை ஒத்திருக்கிறது. 1949 க்கு முன்னர், ஒரு சிறப்பு நகராட்சி என்பதற்கும் மாகாண நகரம் என்பதற்கும் இடையில் மாறிவிட்டது. 1949 ஆம் ஆண்டில், மே 16 அன்று கம்யூனிஸ்டுகள் இங்கு வந்தபோது, ஹன்கோ இறுதியாக அன்யாங் மற்றும் ஊச்சாங்குடன் இணைக்கப்பட்டு மீண்டும் ஊகான் என ஆனது.[5]

புரட்சிகர காலங்கள்

1900 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணங்களில் குத்துச்சண்டை வீரர்களிடமிருந்து தப்பி ஓடிய தொண்டு நிறுவனங்களின் குழுக்கள் தப்பிக்கும் பாதையில் இந்த நகரம் இருந்தது. சான்சியில் நடந்த தை-யான் படுகொலையில் இருந்து சில தொண்டு நிறுவனங்களின் குழுக்களைப் பற்றி தப்பி ஓடிய தொண்டு நிறுவனங்களில் ஒருவரான ரெவரெண்ட் ஏ இ குளோவர் என்பவர் எழுதிய எ தவுசண்ட் மைல்ஸ் இன் சீனா என்ற படைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hankou
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆன்கோவ்&oldid=3937349" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை