நாஞ்சிங்

நான்கிங் அல்லது நான்ஜிங் (Nanjing) (; சீனம்: 南京பின்யின்: Nánjīngவேட்-கில்சு: Nan-ching) சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த ஜியாங்சு மாகாணத்தின் தலைநகர் ஆகும்.[1]சீனாவின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்த நான்கிங் நகரம், சீனாவின் வரலாற்றுத் தலைநகர் என்று அறியப்படுகிறது.[2]கீழ் யாங்கிடிசு ஆற்றின் வடிநிலப் பரப்பில் அமைந்துள்ளது.ஆறு சீன அரச குலங்களின் தலைநகராக நான்கிங் விளங்கியது.[3] 1912-1949ஆம் ஆண்டு முடிய மக்கள் சீனத்தின் தலைநகராக விளங்கியது.[4] சீனாவின் 15 துணை மாகாண நகரங்களில் நான்கிங் நகரமும் ஒன்றாகும்.[5]நாங்கிங் நகரம், சீனாவின் கல்வி, ஆய்வு, போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளில் மையமாக உள்ளது. 2014ஆம் ஆண்டில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்திய பெருமை, நான்கிங் நகருக்கு உண்டு.[6]

நான்கிங்
南京市
நகரம்
கடிகார முள் அசைவின்படி, இடமிருந்து வலம்; 1. நாங்கிங் நகரம், சுவான்வு ஏரி மற்றும் பர்பில் மலை; 2. கற்சிற்பங்கள்; 3. ஜிம்மிங் கோயில்; 4. நான்ஜிங் நகர கோட்டைச் சுவரின் யிஜியாங்க் கதவு ங்யிஜியாங்; 5. ஃஇன்ஹுவாய் ஆறு மற்றும் ஜிம்மிங் கோயில்; 6. நாங்கிங் ஒலிம்பிக் விளையாட்டு மையம்; 7. மிங் சியோலிங் அருங்காட்சியகம்; 8. சன்யாட்சென் அருங்காட்சியகம்.
கடிகார முள் அசைவின்படி, இடமிருந்து வலம்; 1. நாங்கிங் நகரம், சுவான்வு ஏரி மற்றும் பர்பில் மலை; 2. கற்சிற்பங்கள்; 3. ஜிம்மிங் கோயில்; 4. நான்ஜிங் நகர கோட்டைச் சுவரின் யிஜியாங்க் கதவு ங்யிஜியாங்; 5. ஃஇன்ஹுவாய் ஆறு மற்றும் ஜிம்மிங் கோயில்; 6. நாங்கிங் ஒலிம்பிக் விளையாட்டு மையம்; 7. மிங் சியோலிங் அருங்காட்சியகம்; 8. சன்யாட்சென் அருங்காட்சியகம்.
ஜியாங்சு மாகாணத்தில் நான்கிங் நகரம்
ஜியாங்சு மாகாணத்தில் நான்கிங் நகரம்
நாடு சீனா
மாகாணம்ஜியாங்சு
கவுண்டி11
நகரம்129
Settledகி. மு., 495
பரப்பளவு
 • நகரம்6,598 km2 (2,548 sq mi)
ஏற்றம்20 m (50 ft)
மக்கள்தொகை (2013)
 • நகரம்8,187,800
 • அடர்த்தி1,237/km2 (3,183/sq mi)
 • நகர்ப்புறம்7,347,900
நேர வலயம்சீன சீர் நேரம் (ஒசநே+8)
அஞ்சல் சுட்டு எண்210000–211300
தொலைபேசி குறியீடுதொலைபேசி சுட்டு எண்-25
 - Per capitaUS$ 17,493
 - Growth 10.1%
GDP (PPP)2014
 - மொத்தம்US$241.7 billion
 - ஆண்டு வருமானம்29,840 அமெரிக்க டாலர்
வாகனக் குறியீடுA
இணையதளம்நான்கிங் நகர வலைதளம்

நான்கிங் நகரத்தின் மக்கட்தொகை 8.16 மில்லியன்.[7][8] and a urban population of 6.55 million,[9][10] சாங்காய் நகரத்திற்கு அடுத்து, நாங்கிங் நகரம், கிழக்கு சீனாவின் பெரிய வணிக மையமாக திகழ்கிறது.

புவியியல்

யாங்கிடிசு ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த நாங்கிங் 6598, சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நகரம்; சீனாவின் பெரிய பொருளாதார சிறப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது.

நாங்கிங் நகரம் சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு வாயிலாக அமைந்துள்ளது. மேலும் சீனாவின் வடக்கு மற்றும் தெற்கு தொண்டையாக அமைந்துள்ளது.

சீனக்குடியரசின் தலைநகராக நாங்கிங்

நாங்கிங் புரட்சியின் முடிவில் சன் –யாட்- சென் தலைமையில் சீன மக்கள் குடியரசு (1912–1921) ஆட்சி சனவரி 1912இல் நிறுவப்பட்டது. அப்போது நாங்கிங் நகரம் சீன நாட்டின் புதிய தலைநகராக விளங்கியது.

1927ஆம் ஆண்டில் குவாமிங்டன் கட்சியின் தலைமைப் படைத்தலைவர் சியாங் கை சேக் (Chiang Kai-shek), சீனாவின் தலைநகரை பெய்ஜிங் நகரத்திலிருந்து மீண்டும் நாங்கிங் நகரத்திற்கு மாற்றினார்.இரண்டாம் சீனா-ஜப்பான் போரில், 1931இல், ஜப்பான் மஞ்சூரியாவை கைப்பற்றிய பின், 1937இல் சீனாவின் நாங்கிங் நகரைப் கைப்பற்றி முன்று இலட்சம் சீன மக்களை இரக்கமின்றி படுகொலை செய்தது. 13 திசம்பர் 1937இல் நடந்த இந்நிகழ்வை நாங்கிங் படுகொலைகள் என்பர். இப்போருக்குப் பின் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே நாஞ்சிங் உடன்படிக்கை ஏற்பட்டது.

நிர்வாகம்

நாங்கிங் நகர சீன பொது உடமைக் கட்சிக் குழுவின் செயலாளர், நாங்கிங் மக்கள் அரசு என்ற அமைப்பின் ஆளுனராகவும் மேயராகவும் செயல்படுகிறார்.நாங்கிங் நகரம் 11 மாவட்டங்களைக் கொண்டது

பொருளாதாரம்

மின் சாதனங்கள், கார் உற்பத்தி, பெட்ரோலிய பொருள் உற்பத்தி, இரும்பு மற்று எஃகு உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற நகரம்.

நான்கிங் நகரம்,2005

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாஞ்சிங்&oldid=3560411" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை