ஆலன் ஜெய் ஈகர்

அமெரிக்க வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர்

ஆலன் ஜெய் ஈகர் (Heeger, Alan J.) (பிறப்பு ஜனவரி 22, 1936) ஒரு அமெரிக்க இயற்பியலாளர், கல்வியாளர் மற்றும் வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர் .

ஆலன் ஜெய் ஈகர்
2013 ஆம் ஆண்டில் ஈகர்
2013 ஆம் ஆண்டில் ஈகர்
பிறப்புசனவரி 22, 1936 (1936-01-22) (அகவை 88)
சியோக்ஸ் நகர், அயோவா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல், வேதியியல்
நிறுவனம்பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான்டா பார்பரா
Alma materநெப்ராஸ்கா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
துறை ஆலோசகர்ஆலன் போர்டிஸ்
பரிசுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2000)
பல்சான் பரிசு
எனி விருது
ஆலிவர் ஈ. பக்லீ கன்டென்ஸ்ட் மேட்டர் பரிசு(1983)

ஈகர் கடத்தும் தன்மை கொண்ட பலபடிகளைக் கண்டறிந்தமைக்காகவும், இத்தகைய புதுமையான பொருள்களை தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு கிடைக்கச் செய்தமைக்காகவும் பொறியியலுக்கான தேசிய அகாதெமியின் உறுப்பினராக 2002 ஆம் ஆண்டில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கை மற்றும் தொழில்

ஈகர் அயோவாவின் சியோக்ஸ் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவர் அயோவாவின் அக்ரோனில் வளர்ந்தார், அங்கு இவரது தந்தை ஒரு பொது அங்காடி வைத்திருந்தார். ஒன்பது வயதில், இவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, குடும்பம் சியோக்ஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்தது. [1]

ஈகர் 1957 ஆம் ஆண்டில் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், 1961 ஆம் ஆண்டில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1962 முதல் 1982 வரை அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக இருந்தார். 1982 ஆம் ஆண்டில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், சாண்டா பார்பராவில் இயற்பியல் துறை மற்றும் பொருள் துறையில் பேராசிரியராக தனது தற்போதைய பணியைத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சி யுனியாக்ஸ், கோனார்கா மற்றும் சிரிகன் உள்ளிட்ட பல தொடக்க நிறுவனங்களை உருவாக்க வழிவகுத்தது. இது 2003 இல் கில்லர்மோ சி.பசன், பேட்ரிக் ஜே. டயட்ஸன், பிரெண்ட் எஸ். கெய்லோர்ட் ஆகியோரால் நிறுவப்பட்டது. ஆலன் ஈகர் யூனியாக்ஸின் நிறுவனர் ஆவார். பின்னர், இது டுபோன்டால் வாங்கப்பட்டது.

இவர் 2000 இல் வேதியியலுக்கான நோபல் பரிசை ஆலன் ஜி.மக்டியார்மிட் மற்றும் ஹிடேகி ஷிரகாவா ஆகியோருடன் "கடத்தும் தன்மை கொண்ட பலபடிகளின் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக்காக" பெற்றார். இவர்கள் 1977 ஆம் ஆண்டில் “பாலிஅசெட்டிலீன் ஒரு கடத்தும் பலபடி" என்ற பெயரில் தங்கள் முடிவுகளை வெளியிட்டனர் [2] [3]

இவர் 1983 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் ஆலிவர் ஈ. பக்லி பரிசையும், 1995 ஆம் ஆண்டில், உயிரியல் அல்லாத பொருட்களின் அறிவியலுக்கான பல்சான் பரிசையும் வென்றார்.

இவரது மகன்கள் நரம்பியல் விஞ்ஞானி டேவிட் ஈகர் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் பீட்டர் ஈகர் ஆவர்.

அக்டோபர் 2010 இல், ஈகர் அமெரிக்காவின் அறிவியல் மற்றும் பொறியியல் திருவிழாவின் நோபல் விருதாளருடன் மதிய உணவு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியுடன் ஒரு மதிய உணவில் முறைசாரா உரையாடலில் ஈடுபட்டனர். [4] ஈகர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் அறிவியல் மற்றும் பொறியியல் விழாவின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். [5] ஈகர் மூன்று முறை (2006, 2007, 2010) ஸ்டேஜ் சர்வதேச ஆய்வுக்கட்டுரைப் போட்டியின் நீதிபதியாக இருந்தார்.[6]

மேற்கோள்கள்

 

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆலன்_ஜெய்_ஈகர்&oldid=3377619" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை