ஆஸ்கார் ரொமெரோ

சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயர்

ஆஸ்கார் ரொமெரோ (15 ஆகஸ்ட் 1917 – 24 மார்ச் 1980) என்பவர் எல் சால்வடோரில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராகப்பணியாற்றியவர் ஆவார். இவர் பணியில் இருந்த போதே தம் நாடான எல் சால்வடோரில் நிலவிய வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, சர்வாதிகார ஆட்சி, படுகொலைகள் மற்றும் வதைப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.[1] இதனால் 1980இல் இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது இராணுவக் கூலிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேதகு
ஆஸ்கார் ரொமெரோ
சான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர்
ஆட்சி பீடம்சான் சால்வதோர்
ஆட்சி துவக்கம்23 பெப்ரவரி 1977
ஆட்சி முடிவு24 மார்ச் 1980
முன்னிருந்தவர்லூயிஸ் சாவஸ்
பின்வந்தவர்அர்துரோ ரிவேரா
பிற பதவிகள்சான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர் (1974-1977)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு4 ஏப்ரல் 1942
ஆயர்நிலை திருப்பொழிவு21 ஜூன் 1970
கிரோலாமோ பிரிகியோன்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்Óscar Arnulfo Romero y Galdámez
பிறப்பு(1917-08-15)15 ஆகத்து 1917
சியுடாட் பரியோஸ், எல் சால்வடோர்.
இறப்பு24 மார்ச்சு 1980(1980-03-24) (அகவை 62)
சான் சல்வடோர்
கல்லறைசான் சல்வடோர் மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்சான்தோஸ் ரொமெரோ & குவாதலூபே தெ ஜெசுஸ் கல்தாமெஸ்
குறிக்கோளுரைSentire cum Ecclesia (திருச்சபையோடு ஒன்றித்து சிந்தித்தல்)
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா24 மார்ச் (ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்)
ஏற்கும் சபைஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
பகுப்புஇறை ஊழியர், மறைசாட்சி (கத்தோலிக்கம்)

1997இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவருக்கு இறை ஊழியர் மட்டமளித்தார். இவர் பலராலும் அமெரிக்காக்கள், குறிப்பாக எல் சால்வடோரின் பாதுகாவலராகக்கருதப்படுகின்றார்; கத்தோலிக்கத்திருச்சபைக்கு வெளியே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் ஒரு சில லூத்தரனியப்பிரிவுகளில் இவர் புனிதரென ஏற்கப்படுகின்றார்.

இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் மேற்கு வாயிற்கதவின்மேல் சித்தரிக்கப்பட்டுள்ள நான்கு 20ம் நூற்றாண்டின் மறைசாட்சியருள் இவரும் ஒருவர்.[2] 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய செய்தி ஏடான A Different View, இவரை உலக மக்களாட்சியின் 15 வீரர்களுள் ஒருவர் (15 Champions of World Democracy) எனப்பட்டியல் இட்டது.[3]

இவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு 4 சனவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்தார்.[4]

மறைசாட்சி மற்றும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்

பேராயர் ரொமெரோ கிறித்தவ மறைநம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாரா அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டாரா என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. பெரும்பாலான மக்கள் அவர் கிறித்தவ மறையின் நம்பிக்கையோடு இரண்டற இணைந்த நீதி, சமாதானம், மனித உரிமை பாதுகாப்பு, மனித உயிர் மேம்பாடு ஆகிய விழுமியங்களை உறுதியோடு பறைசாற்றி, சர்வாதிகார அரசுக்குச் சவால் விடுத்தது உண்மையிலேயே மறைசார்ந்த ஒரு நிலைப்பாடுதான் என்று கணித்தனர். எனவே அவரை ஒரு புனிதர் என்று போற்றினார்.[5] ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடம் இவ்விடயத்தில் தயக்கம் காட்டியது.

இறுதியாக, திருத்தந்தை பிரான்சிசு “மறைசாட்சி” என்னும் சொல் எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். அதாவது, எல் சால்வடோர் நாட்டில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கராக இருந்தாலும், நாட்டில் ஏழைகளுக்கு எதிராக அநீதிகள் இழைத்துவந்த ஆட்சியாளர்கள் கத்தோலிக்கராக இருந்தாலும், ஆஸ்கார் ரொமெரோ கொல்லப்பட்டது கிறித்தவ நற்செய்தி ஏழைகளுக்கு வாழ்வளிக்கவும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவும் தூண்டுதலாக உள்ளது என்று வலியுறுத்தியதால்தான் என்று தெளிவுபடுத்தினார்.[6]

மறைசாட்சி ஆஸ்கார் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் 2015, மே 23ஆம் நாள் எல் சால்வடோரின் தலைநகரான சான் சால்வடோர் நகரில் மறைமாவட்டக் கோவிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது. உலகத்தின் திரு மீட்பர் என்ற இயேசு நினைவுச் சின்னம் அமைந்துள்ள உலக மீட்பர் வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. புனிதர் பட்டமளிப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் திருத்தந்தை பிரான்சிசின் பதிலாளாக நின்று அந்நிகழ்ச்சியை நடத்தினார். “அருளாளரான ரொமெரோ இன்றைக்கும் எதிரொலிக்கின்ற குரலாக இருக்கிறார்” என்று திருத்தந்தை பிரான்சிசு சான் சால்வடோர் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

"ஆயர் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்கிறது. ரொமெரோ அன்பின் அடிப்படையில் அமைதியைக் கட்டி எழுப்பினார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அவர் பாடுபட்டார். குரலற்ற மக்களுக்கு அவர் குரல் கொடுத்தார். இறுதிவரை நிலைத்திருந்து, தம்முடைய கிறித்தவ நம்பிக்கையைக் காத்து, சான்று பகர்ந்தார்” என்று திருத்தந்தை தம் கடிதத்தில் கூறினார்.[7]

மேற்கோள்கள்


கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
பிரான்செஸ்கோ ராவால் குருசஸ்
— பட்டம் சார்ந்தது —
தம்பேயே ஆயர்
5 ஏப்ரல் 1970 - 15 அக்டோபர் 1974
பின்னர்
ஆஞ்சலிகோ சாதாலோ பெர்னார்தினோ
முன்னர்
பிரான்செஸ்கோ இராமிரெஸ்
சான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர்
15 அக்டோபர் 1974 - 3 பெப்ரவரி 1977
பின்னர்
அர்டுரோ ரவேரா, ச.ச.
முன்னர்
லூயிஸ் சாவெஸ்
சான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர்
3 பெப்ரவரி 1977 - 24 மார்ச் 1980
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆஸ்கார்_ரொமெரோ&oldid=3634947" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை