இந்தோனேசிய நேரம்

இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமை

இந்தோனேசிய நேரம் அல்லது இந்தோனேசிய சீர் நேரம் (ஆங்கில மொழி: Indonesia Standard Time), (மலாய்: Waktu Piawai Indonesia), (இந்தோனேசிய மொழி: Zona waktu Indonesia) என்பது இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கில மொழி: Greenwich Mean Time - GMT)) +06:00 மணி நேரம் முன்னதாக அமைகின்றது.

இந்தோனேசியாவின் நேர மண்டலங்கள்

இந்தோனேசிய தீவுக்கூட்டம் புவியியல் ரீதியாக; ஆச்சே (Aceh) (UTC+06:00) நிலப்பகுதியில் தொடங்கி பப்புவா நியூ கினி (Papua) (UTC+09:00) நிலப்பகுதிகள் வரை; நான்கு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் மூன்று நேர மண்டலங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது.[1]

பொது

இந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் அங்கீகரித்த மூன்று நேர மண்டலங்கள்:

  • மேற்கு இந்தோனேசியா நேரம் (Western Indonesia Time - WIB) — ஏழு மணி நேரம் முன்னால் (ஒ.ச.நே + 07:00);
  • மத்திய இந்தோனேசியா நேரம் (Central Indonesia Time - WITA) — எட்டு மணி நேரம் முன்னால் (ஒ.ச.நே + 08:00);
  • கிழக்கு இந்தோனேசியா நேரம் (Eastern Indonesia Time - WIT) — ஒன்பது மணி நேரம் முன்னால் (ஒ.ச.நே + 09:00).

வரலாறு

இந்தோனேசியாவின் மேற்கு மற்றும் மத்திய நேர மண்டலங்களுக்கு இடையிலான எல்லை; மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மற்றும் மத்திய கலிமந்தான் (Central Kalimantan) மாநில எல்லைகளின் வழியாக ஜாவா மற்றும் பாலிக்கு இடையே வடக்கே செல்லும் ஒரு கோடாக நிறுவப்பட்டது.[2][3]

மத்திய மற்றும் கிழக்கு நேர மண்டலங்களுக்கு இடையிலான எல்லை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் (Timor) முனையில் இருந்து சுலவேசியின் (Sulawesi) கிழக்கு முனை வரை வடக்கே செல்கிறது.[4]

பகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time - DST) இந்தோனேசியாவில் எங்கும் பயன்பாட்டில் இல்லை.

மேற்கோள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்தோனேசிய_நேரம்&oldid=3784386" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை