இனம் (மாந்த வகைப்பாடு)

இனம் (Race), அல்லது அறிவியல் வகைப்பாட்டில் நிறம், ஒரே போன்ற, அடையாளப்படுத்தக்கூடிய உடற்கூற்றுப் பண்புகளைக் கொண்ட மாந்தக் குழுவினர் ஆவர்.[1][2][3][4][5][6] துவக்கத்தில் பொதுவான மொழியைப் பேசுவோரையும் தேசிய அடையாளங்கள் கொண்டும் வகைபடுத்தப்பட்டது. 18ஆவது நூற்றாண்டிலிருந்து இது உடற்கூற்றுப் (காட்டாக தோற்றவமைப்பு) பண்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இச்சொல் பெருஞ்சமயங்களில் உயிரியல் இனத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.[7] 19ஆவது நூற்றாண்டிலிருந்து மரபணுசார்ந்து வேறுபட்ட தோற்றவமைப்புள்ள மாந்தத் தொகைகளை குறிக்கின்றது.[8][9]

1885-90களில் வரையறுக்கப்பட்ட மூன்று முதன்மை இனங்கள். மங்கோலிய இனத்தின் உட்பிரிவுகள் மஞ்சள் நிறத்திலும் ஓரஞ்சு வண்ணத்திலும் காக்கசீய இனத்தினர் இளம் அல்லது நடுத்தர சாம்பல் கலந்த பச்சை வண்ணத்திலும் நீக்ரோ இனத்தினர் பழுப்பு வண்ணதிலும் காட்டப்பட்டுள்ளன. திராவிடர், சிங்களவர்கள் ஓலிவ் பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு வகைப்பாடு வரையறுக்கப்படாதிருந்தது. மங்கோலிய இனத்தினர் புவியில் விரிந்த பரப்பில் பரவலாக உள்ளனர்; இவர்கள் அமெரிக்காக்கள், வடக்கு ஆசியா, கிழக்காசியா, தென்கிழக்காசியா, குடியேறாத ஆர்க்டிக் பகுதிகளில் பரந்துள்ளனர். பெரும்பான்மையோர் நடு ஆசியாவிலும் பசிபிக் தீவுகளிலும் உள்ளனர்.
ஆசிய மக்களின் இனப் பன்முகமை (1904)

18-ஆம் நூற்றாண்டில் மானிடவியலில் அறிஞர்கள் மனித இனத்தை நான்காக வகைப்படுத்தப்படுத்தினர். அதில் மஞ்சள் நிறத் தோல் கொண்டவர்களை மங்கோலாய்டுகள் என்றும், வெள்ளை நிறத் தோல் கொண்டவர்களை காகசாய்டுகள் என்றும், கருப்பு நிறத் தோல் கொண்ட நீக்ராய்டுகள் மற்றும் ஆஸ்டிரலாய்டு இனம் என வகைப்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டில் மரபியல் அடிப்படையில் அனைத்து மாந்தரும் ஒரே இனத்தவர் எனக்கண்டறிந்தனர். எனலே மனித இனத்தை வகைப்படுத்தி பார்க்கும் போக்கு தற்போது இல்லை.

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை