இனுக்ரிருற் மொழி

கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற் (Inuktitut). நுனுவற்றில் வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாந்திலும் (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.

இனுக்ரிருற்
ᐃᓄᒃᑎᑐᑦ, இனுக்டிட்டுட், இனுட்டிட்டுட், இனுயினக்துன் மற்றும் பிற உள்ளூர் பெயர்கள்
நாடு(கள்)கனடா, நுனாவுட், கியூபெக், நுனாவிக், வடமேற்கு நிலப்பகுதிகள், நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், நுனாட்சியவுட்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
35,000 (சுமார்.)[1]  (date missing)
எஸ்கிமோ-அலூட்
  • இனூயிட்
    • இனுக்ரிருற்
இனுக்ரிருற் அசையெழுத்துக்கள், இலத்தின்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நுனாவுட், நுனாவிக், வடமேற்கு நிலப்பகுதிகள், நுனாட்சியவுட் (கனடா)
Regulated byஇனூயிட் தபிரிட் கனாதமி மற்றும் பல்வேறு மற்ற உள்ளூர் நிறுவனங்கள்.
மொழிக் குறியீடுகள்
ISO 639-1iu
ISO 639-2iku
ISO 639-3Variously:
iku — இனுக்ரிருற் (பொதுவழக்கு)
ike — கிழக்கு கனடிய இனுக்ரிருற்.
ikt — மேற்கத்திய கனடிய இனுக்ரிருற்.

இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் மூத்த குடிமக்களின் மொழி. 1894-இல் தான் இம்மொழியின் எழுத்துருவம் உருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி; இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள பல வகையிலும் முயன்று வருகின்றனர்.

1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையத்தில் இனுக்ரிருற் அகராதி உருவாகி வருகின்றது.

இனுக்ரிருற் இதழ் பரணிடப்பட்டது 2005-02-25 at the வந்தவழி இயந்திரம் இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இனுக்ரிருற்_மொழி&oldid=3343224" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை