ஈலாம் மாகாணம்

ஈரானின் மாகாணம்

இலாம் மாகாணம் (Ilam Province (பாரசீக மொழி: استان ایلام‎) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இது ஈரானின் வட்டாரம் நான்கில் உள்ளது.[8] இது நாட்டின் மேற்கு பக்கத்தில்,ஈராக்கின் எல்லையை ஒட்டி உள்ளது. மாகாணத்தின் தலைநகராக இலாம் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவானது 19,086 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த மாகாணத்தில் இலாம், மெஹ்ரான், டெஹலோலன், டாரேஹ் ஷார், சரபிள், ஐவன், அப்தானான், ஆர்க்க்ஸ் ஆகிய நகரங்கள் உள்ளன. இலாம் மாகாணத்தின் எல்லைகளாக ஈரானின் மூன்று அண்டை மாகாணங்கள் மற்றும் ஈராக் நாட்டையும் கொண்டுள்ளது. இதன் தெற்கில் குஜஸ்தான் மாகாணமும், கிழக்கில் லுரேஸ்தான் மாகாணம், வடக்கில் கர்மான்ஷா மாகாணம், ஈராக்குடன் 425 கிலோ மீட்டர் பொது எல்லையையும் கொண்டுள்ளது. மாகாணத்தின் மக்கள்தொகை சுமார் 600,000 (2015 மதிப்பீடு) ஆகும். இலாம் மாகாணத்தின் மாவட்டங்களாக ஐவன் கவுண்டி, சர்தாவல் கவுண்டி, சிர்வான் கவுண்டி, இலாம் கவுண்டி, மாலேஷஷா கவுண்டி, மெஹ்ரான் கவுண்டி, பேட்ரே கவுண்டி, டாரெஹ் ஷார் கவுண்டி, அப்தானான் கவுண்டி, டெஹலோலன் கவுண்டி ஆகியவை உள்ளன.

இலாம் மாகாணம்
Ilam Province

استان ایلام
மாகாணம்
சொற்பிறப்பு: ஈலானிய நாகரீகத்தைச் சேர்ந்த, பழங்கால ஈரானியருக்கு முந்தைய மக்கள்
அடைபெயர்(கள்): عروس زاگرس (சக்ரோசு மணமகள்)
இலாம் மாகாண மாவட்டங்கள்
இலாம் மாகாண மாவட்டங்கள்
ஈரானில் இலாம் மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் இலாம் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°38′18″N 46°25′21″E / 33.6384°N 46.4226°E / 33.6384; 46.4226
நாடு Iran
வட்டாரம்வட்டாரம் 4
நிறுவப்பட்டது1973[1]
தலைநகரம்இலாம்
மாவட்டங்கள்
பட்டியல்
  • Ilam
  • Eyvan
  • Sirvan
  • Chardavol
  • Malekshahi
  • Badreh
  • Darreh Shahr
  • Mehran
  • Dehloran
  • Abdanan
அரசு
 • நிர்வாகம்மாகாண அரசு
 • ஆளுநர்கேசெம் சோலிமனி டாஸ்தாக்கி
பரப்பளவு
 • மொத்தம்19,086 km2 (7,369 sq mi)
 [2]
உயர் புள்ளி[3] (கான் சீஃபி சிகரம்)3,050 m (10,010 ft)
தாழ் புள்ளி[4]36 m (118 ft)
மக்கள்தொகை (2011)[5]
 • மொத்தம்5,57,599
 • அடர்த்தி29/km2 (76/sq mi)
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
Postal code69311–69991[6]
தொலைபேசி குறியீடு+98 84
வாகனப் பதிவுIran 98[7]
இணையதளம்Ilam Portal
இலாம் மாகாண மாவட்டங்கள்.

புவியியலும், காலநிலையும்

இலாம் மாகாணமானது 19,086 km2 (7,369 sq mi) பரப்பளவுடன், நாட்டின் பரப்பளவில் 4.1 விழுக்காட்டைக் கொண்டுள்ளது.[9]

சக்ரோசு மலைகள் மாகாணத்தில் வடமேற்கு-தென்கிழக்காக நீண்டுள்ளன. இப்பகுதியில் உள்ள இரண்டு முதன்மையான மலைப்பகுதிகள் கபீர் குஹு மற்றும் திநார் குஹு ஆகியவை ஆகும். மாகாணத்தின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதி இந்த மலைப்பகுதிக்கு உப்பட்டுள்ளதால் சக்ரோசு மலைகளானது மாகாணத்துக்கு தனித்தன்மையான நிலத் தோற்றத்தை அளிக்கிறது. இதனால் ஈராக்கின் எல்லை ஓரம் அமைந்துள்ள மாகாணத்தின் மேற்கு மாவட்டங்களான மெஹ்ரான் மற்றும் டெஹலோலன் மாவட்டங்கள் பாலைவனப் பகுதிகளைக் கொண்டதாக உள்ளன. இந்த மாவட்டப்பகுதிகளனது கோடைக்காலத்தில் மிகவும் வெப்பமானதாகவும், லேசான குளிர்காலம் கொண்டவையாகவும் குறைந்த நீர்பாசண வசதிகள் கொண்டபகுதிகளாக உள்ளன. மழையளவு கொண்டவையாகவும் உள்ளன. அப்துனன் மற்றும் டாரெஹ் ஷார் போன்ற கிழக்கில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளானது மிதமானது முதல் அதிக மழைப்பொழிவை பெறும் பகுதிகளாகவும், அரிதாக பனிபெய்யக்கூடிய பகுதிகளாக உள்ளன. இலாம் மாகாணத்தின் வட பகுதியானது உயர் நிலமாக இருப்பதால் குளிர் காலத்தையும் மிதமான கோடைக் காலத்தையும் மாகாணத்தில் மிகுதியான மழை பொழியும் பகுதியாகவும் உள்ளது. இ்வாறு இந்த மாகாணமானது பல்வேறு வகையான நிலம் அமைப்பைக் கொண்டுள்ளது.

இலாம் மாகாணத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறும் வடக்குப் பகுதி.
இலாம் மாகாணத்தில் கபீர் குஹு மலைகள்.

மக்கள் மற்றும் கலாச்சாரம்

இலாம் மாகாணத்தில் பல்வேறு மக்களினத்தவர் வசித்து வருகின்றனர். இவர்களில் குர்துகள் பெரும்பான்மையாக 79.6% விகிதத்திலும், லார்ஸ் 10.7% என்றும், லாக்ஸ் (6.1%) என்றும், பாரசீகர்கள் (1.8%) என்றும் அரேபியர்கள் (1.8%) விகிதத்தல் வாழ்கின்றனர்.[10][11] அப்தானன், டெஹலான் மற்றும் மெஹ்ரானில் பெரும்பான்மையானவர்கள் குர்திஷ் மற்றும் லூரி மொழிகளைப் பேசுகின்றனர். டாரெஹ் ஷாரில், பெரும்பான்மையான மக்கள் லாக்கி மற்றும் லூரிஷ் பேசுகின்றனர். மேலும் மாகாணத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஷூஹான்ஸ், சீலேவர்ஸிஸ் மற்றும் கய்த்கோர்டே போன்ற சில பழங்குடிகளும் வாழ்கின்றனர். பெரும்பாலும் வடக்கில் வாழும் குர்திஷ் பழங்குடியினர் கலுரி மற்றும் ஃபெலி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இவர்களில் கெஹெல், ஆர்காவேசி, பைரேய் (அலி ஷெர்வான்) மாலே ஷாஹி போன்ற பெரும்பான்மையினர் ஃபெலி மொழியைப் பேசுகின்றனர் .[12] இலாம் மாகாணத்தில் கிட்டத்தட்ட அனைத்து மக்களும் ஷியா முஸ்லிம்கள்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஈலாம்_மாகாணம்&oldid=3927962" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை