உ. இரா. அனந்தமூர்த்தி

கன்னடக் கவிஞர், எழுத்தாளர், ஞானபீட விருது பெற்றவர்.

யூ. ஆர். அனந்தமூர்த்தி என அழைக்கப்படும் உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி (Udupi Rajagopalacharya Ananthamurthy, கன்னடம்: ಉಡುಪಿ ರಾಜಗೋಪಾಲಾಚಾರ್ಯ ಅನಂತಮೂರ್ತಿ; 21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014) கன்னட எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்.[1] 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2][3] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது[4].

உ. ரா. அனந்தமூர்த்தி
பிறப்புஉடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி
(1932-12-21)21 திசம்பர் 1932
மெலிகே, தீர்த்தஹள்ளி, சிமோகா மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்புஆகத்து 22, 2014(2014-08-22) (அகவை 81)
பெங்களூர்
தொழில்பேராசிரியர், எழுத்தாளர், கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர்
தேசியம்இந்தியர்
வகைகதை, இலக்கியம்
இலக்கிய இயக்கம்கன்னட இலக்கியம்

புதினங்கள்

  • சம்ஸ்காரா
  • பாரதிபுரா
  • அவஸ்தே
  • பவா
  • திவ்யா

திரைத்துறை

இவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு.

மொழிபெயர்ப்பு

அவருடைய சம்ஸ்காரா, அவஸ்தை உள்ளிட்ட சில புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1993இல் சாகித்ய அகாதெமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5].

விமர்சனம்

இந்தியாவில் சாதி முறைகளை விவரிக்கும் வர்ணாஸ்ரமங்களை எதிர்த்த இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் நாட்டைவிட்டுச் சென்றுவிடுவேன் என்று கருத்துக்கூறியதால் பல இன்னல்களுக்கு உள்ளானார்.[6]

மறைவு

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனந்தமூர்த்தி, ஆகஸ்ட் 22, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[7].

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை