எகான்

அலியாயுன் தமலா பதார ஏகான் தியம் (Aliaune Damala Badara Akon Thiam (/ˈkɒn/;; பிறப்பு ஏப்ரல் 16, 1973), ஏகான் என்று பரவலாக அறியப்படும் இவர், செனிகல்-அமெரிக்கப் பாடகர், இசைப்பதிவுத் தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். 2004 ஆம் ஆண்டில் இவரது முதல் பாடல் தொகுதியான ட்ரபிள் (2004) இன் முதல் தனிப்பாடலான " லாக்ட் அப் " வெளியானதைத் தொடர்ந்து பரவலாக அறியப்பட்டார்,இதைத் தொடர்ந்து இரண்டாவது தனிப்பாடலான " லோன்லி" வெளியானது.

ஏகான்
2019இல் ஏகான்
பிறப்புஅலியாயுன் தமலா பதார ஏகான் தியம்
ஏப்ரல் 16, 1973 (1973-04-16) (அகவை 51)
செயின்ட் லூயிஸ் (மிசோரி), மிசூரி, U.S.
மற்ற பெயர்கள்
  • A-Kon
  • El Negreeto
குடியுரிமை
  • அமெரிக்கர்
  • செனகல்
கல்வி
  • வில்லியம் எல் டிக்கின்சன் உயர்நிலைப் பள்ளி
  • கிளார்க் அட்லாண்டா பல்கலைக்கழகம் (பட்டம் பெறவில்லை
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • இசைப் பதிவுத் தயாரிப்பாளர்
  • தொழில்முனைவோர்
  • வள்ளல்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்போது வரை
அமைப்பு(கள்)ஏகான் லைட்டிங் ஆப்பிரிக்கா
முகவர்ஜானி ரைட்
பிள்ளைகள்6
இசை வாழ்க்கை
பிறப்பிடம்நுவார்க், U.S.
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • ஏகானிக்
  • பிஎம்ஜி
  • அட்லாண்டிக்
  • கான்விக்ட்
  • கான்லிவ்
  • ரிபப்லிக்
  • யுனிவர்சல் மோட்டோவின்
  • எஸ் ஆர் சி
  • அப் பிரண்ட்
இணையதளம்akon.com

இரண்டாவது பாடல் தொகுதியான, கான்விக்டெட் (2006), சிறந்த சமகால சொல்லிசை பாடல் தொகுதிக்கான மூன்று கிராமி விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றது, மேலும் " ஸ்மாக் தட் " ( எமினெம் இடம்பெற்றது) மற்றும் " ஐ வான்னா லவ் யூ " ( ஸ்னூப் டோக் இடம்பெற்றது) ஆகியன சிறந்த சொல்லிசை பாடலுக்கான பரிந்துரையினைப் பெற்றது.

ஆரம்பகால வாழ்க்கை

அலியாயுன் தமலா பதார ஏகான் தியம் ஏப்ரல் 16, 1973இல் செயின்ட் லூயிஸ், மிசோரியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். [1] [2] [3] இவரது தாயார் நடனக் கலைஞர் கைன் குயே தியாம் ( நீ குயே), மற்றும் இவரது தந்தை தாள வாத்தியக்காரர் மோர் தியாம் ஆவர்.[4][5] மோர் தியாம் செனகலின் கயோலாக்கில் உள்ள குர்ஆனிய அறிஞர்களின் ஒரு டூகோலூர் குடும்பத்தில் பிறந்தார். [6] [7] ஏகான் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை செனகலில் கழித்தார், அதை அவர் தனது "சொந்த ஊர்" என்று விவரித்தார். மேளம், கிதார் மற்றும் டிஜெம்பே உட்பட ஐந்து கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். [8] ஏழு வயதில், அவரும் அவரது குடும்பத்தினரும் யூனியன் நகரம், நியூ ஜெர்சிக்கு இடம்பெயர்ந்தனர்[9] [10] நியூ ஜெர்சியில் வளர்ந்ததால், மற்ற குழந்தைகளுடன் பழகுவதில் ஏகான் சிரமப்பட்டார். ஏகானும் அவரது மூத்த சகோதரரும் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்கச் சென்ற போது, இவரது பெற்றோர் அவர்களை ஜெர்சி நகரத்தில் விட்டுவிட்டு மற்றவர்களுடன்ஜோர்ஜியாவின் அட்லாண்டாவுக்கு குடியேறினர்.[11] ஜெர்சி நகரில் உள்ள வில்லியம் எல். டிக்கின்சன் உயர்நிலைப் பள்ளியில் ஏகான் பயின்றார்.[12]

இசை வாழ்க்கை

2003-2005

அப்ஃப்ரண்ட் மெகாடெயின்மென்ட்டின் தலைவரான டெவின் ஸ்டீபன்ஸ், சொல்லிசைப் பாடகர் லில் ஜேன் ஏகானை, ஸ்டீபன்ஸின் ஒத்திகை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றபோது ஏகானைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டார், அந்த நேரத்தில் அஷர் மற்றும் டிஎல்சி போன்ற திறமையாளர்கள் வளர்ச்சி கண்டிருந்தனர். இறுதியில்,ஸ்டீபன்ஸ் ஏகானை தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து தொழில் ரீதியாக அவரை சீர்படுத்தத் தொடங்கினார். [13]

2006-2008 கான்விக்டெடு

சார்லோட்டில் உள்ள வெரிசோன் வயர்லெஸ் ஆம்பிதியேட்டரில் ஏகானின் நிகழ்ச்சி, 2007

இன்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸின் கீழ் கான்லைவ் எனும் புதிய இலச்சினையின் கீழ் விநியோகத்தைத் தொடங்கினார். அவரது இரண்டாவது பாடல் தொகுதியான கான்விக்டெடு நவம்பர் 2006 இல் வெளியிடப்பட்டது மற்றும் பில்போர்டு 200 இல் இரண்டாவது இடம் இடித்தது, முதல் வாரத்தில் 286,000 பிரதிகள் விற்பனையானது. ஆறு வாரங்களுக்குப் பிறகு, கான்விக்டெடு அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் விறபனையானது, இந்த பாடல் தொகுதி ஏழு வாரங்களுக்குப் பிறகு பிளாட்டினம் சான்றிதழ் பெற்றது, மேலும் பதினாறு வாரங்களுக்குப் பிறகு அது இரட்டை பிளாட்டினம் சான்றிதழ் பெற்றது. இது பில்போர்டு 200 இன் முதல் இருபது இடங்களில் தொடர்ந்து 28 வாரங்கள் இருந்தது மற்றும் நான்கு முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஒப்புரவு

ஏகான் 2014 இல் ஏகான் லைட்டிங் ஆப்பிரிக்கா என்ற திட்டத்தைத் தொடங்கினார், இது ஆப்பிரிக்காவின் 15 நாடுகளில் மின்சாரம் வழங்குகிறது. [14] [15] [16]

கான்ஃபிடென்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் ஆப்பிரிக்காவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தனது சொந்த தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார்.

பிட்புல்லின் "ஐ பிலீவ் தட் வி வில் வின் " அதிகாரப்பூர்வ இசை நிகழ்படத்தில் விருந்தினராக ஏகான் சேர்க்கப்பட்டார், இந்தப் பாடலின் விற்பனை, ஒளிபரப்பு மற்றும் காட்சிகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஃபீடிங் அமெரிக்கா மற்றும் அந்தோனி ராபின்ஸ் அறக்கட்டளைக்கு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணமாக வழங்கப்படுகிறது. [17]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எகான்&oldid=3844588" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை