எதிர்க்கட்சித் தலைவர் (இந்தியா)

இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள்

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அலுவல்முறையாக அறிவிக்கப்படும் அரசியல்வாதி ஆவார்.

இந்தியா எதிர்க்கட்சித் தலைவர்
இந்திய அரசுச் சின்னம்
தற்போது
தற்போது இடம் காலியாக உள்ளது (மக்களவையில்)
மல்லிகார்ஜுன் கார்கே (மாநிலங்களவையில்)
இணையதளம்www.parliamentofindia.nic.in

இந்தப் பதவி முந்தைய நடுவண் சட்டமன்றத்திலும் இருந்தாலும் 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகே அரசியலமைப்பு அங்கீகரித்த பதவியாக மாறியது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊதியம் மற்றும் படிகள் சட்டம் 1977 என்றறியப்படும் இந்தச் சட்டத்தின்படி மக்களவை அல்லது மாநிலங்களவையில் மிகவும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவராக முறையே மக்களவைத் தலைவர் அல்லது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் அறிவிக்கப்படுகிறார்.[1][2] இருப்பினும், முறையான அங்கீகாரம் பெற, குறிப்பிட்ட கட்சி குறைந்தது மொத்த உறுப்பினர்களில் 10% ஆவது பெற்றிருக்க வேண்டும் (மக்களவையில் 54 உறுப்பினர்கள்). இதற்கு கீழாக இருந்தால் அவையில் அங்கீகரிகப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவதில்லை.[1][3] இப்பதவிக்கான உரிமை ஒரு கட்சிக்கே உள்ளது; கட்சிகளின் கூட்டணிகளுக்கல்ல. எனவே தனிக்கட்சி ஒன்று 10% உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.[4]

ஆய அமைச்சருக்கான தகுதியை மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களும் பெறுகின்றனர். முறையான எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படாதவிடத்து எதிரணியில் உள்ள மிகப் பெரிய கட்சியின் தலைவர் எதிர்கட்சித் தலைவரின் பணிகளை மேற்கொள்வார். இருப்பினும் பெரிய கட்சியின் தலைவருக்கு அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவருக்கான ஊதியமும் படிகளும் வழங்கப்படுவதில்லை.[5]

இப்பதவியை அறிவிப்பதற்கான இந்த விதிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது மரபுசார்ந்த ஒன்றாகும். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் ஊதியமும் படிகளும் சட்டம், 1977இல் பெரும்பான்மையை நிர்ணயிக்கும் அதிகாரம் குறிப்பிட்ட அவைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பல முக்கியத்துவம் பெற்ற குழுக்களில் தமது பதவியின் காரணமாக இடம் பெறுகிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம், நடுவண் புலனாய்வுச் செயலகம் ஆகியவற்றின் இயக்குநர்களையும் லோக்பால், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களையும் முதன்மைத் தகவல் ஆணையர்களையும் தேர்வு செய்யும் குழுக்களில் அங்கம் வகிக்கிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம், 2003, பிரிவு 4, வெளிப்படையாக அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதவிடத்து மக்களவைவில் பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை தேர்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ள வழி வகுத்துள்ளது.[6]

2014-இல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சைகள்

1977ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குறைந்தது 10% மற்றும் அதற்கு மேலும் உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க மக்களவைத் தலைவரால் இயலும். ஆனால் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி உட்பட எந்த எதிர்க்கட்சியும் குறைந்த பட்சம் 10 விழுக்காடு உறுப்பினர்களை மக்களவையில் கொண்டிருக்கவில்லை. எதிர்க்கட்சிகளில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மட்டும் அதிகமாக பட்சமாக 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருப்பதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவி கோருவதை, மக்களவைத் தலைவரால் ஏற்க இயலாமல் உள்ளது. இதனால் தற்போது இந்த விவகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.[7][8]

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள்

பெயர்கட்சிபதவிக்காலம்மக்களவை
வெற்றிடம்[9]அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை[10]26 சனவரி 1952 – 4 மார்ச் 1967முதல்
இரண்டாம்
மூன்றாம்
வெற்றிடம்[11]அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை4 மார்ச் 1967 – 12 திசம்பர் 1969நான்காவது
ராம் சுபாக் சிங்இந்திய தேசிய காங்கிரசு (நிறுவனம்)17 திசம்பர் 1969 – 27 திசம்பர் 1970
வெற்றிடம்அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை27 திசம்பர் 1970 – 31 சூன் 1977ஐந்தாவது
யசுவந்த்ராவ் சவான்இந்திய தேசிய காங்கிரசு1 சூலை 1977– 11 ஏப்ரல் 1978ஆறாவது
சி. எம். இசுடீபன்12 ஏப்ரல் 1978 – 9 சூலை 1979
யசுவந்த்ராவ் சவான்10–28 சூலை 1979
ஜெகசீவன்ராம்ஜனதா கட்சி29 சூலை – 22 ஆகத்து 1979
வெற்றிடம்அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை[10]22 ஆகத்து 1979 – 18 திசம்பர் 1989ஏழாவது
எட்டாவது
ராஜீவ் காந்திஇந்திய தேசிய காங்கிரசு18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990ஒன்பதாவது
லால் கிருஷ்ண அத்வானிபாரதிய ஜனதா கட்சி24 திசம்பர் 1990 – 13 மார்ச் 1991
21 சூன் 1991 – 26 சூலை 1993பத்தாவது
அடல் பிகாரி வாச்பாய்26 சூலை 1993 – 10 மே 1996
பி. வி. நரசிம்ம ராவ்இந்திய தேசிய காங்கிரசு16–31 மே 1996பதினோராவது
அடல் பிகாரி வாச்பாய்பாரதிய ஜனதா கட்சி1 சூன் 1996 – 4 திசம்பர் 1997
சரத் பவார்இந்திய தேசிய காங்கிரசு19 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999பன்னிரெண்டாவது
சோனியா காந்தி13 அக்டோபர் 1999 – 6 பெப்ரவரி 2004பதின்மூன்றாவது
லால் கிருஷ்ண அத்வானிபாரதிய ஜனதா கட்சி22 மே 2004 – 18 மே 2009பதினான்காவது
சுஷ்மா சுவராஜ்21 திசம்பர் 2009 - 19 மே 2014பதினைந்தாவது
வெற்றிடம்அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை4 சூன் 2014 - இன்றளவில்பதினாறாவது மற்றும் பதினேழுவது
மூலம்:[12]

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்

மாநிலங்களவையில் 1969 வரை எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவரும் அறியப்படவில்லை. அதுவரை எதிரணியில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், எந்தவொரு அங்கீகாரமோ, தகுதியோ, உரிமைகளோ இன்றி, எதிர்க்கட்சித் தலைவர் என அழைக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு பின்னரே இந்தப் பதவி முறையாக வரையறுக்கப்பட்டது. இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்: (i) அவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்(ii) மாநிலங்களவையில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அரசுக்கு எதிரான கட்சியின் தலைவராக இருத்தல் வேண்டும். (iii) மாநிலங்களையின் அவைத்தலைவரால் (இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மாநிலங்களையில் எதிர்க்கட்சித் தலைவர்களாக பொறுப்பேற்றவர்களின் பட்டியல்:[13]

பெயர்கட்சிபதவிக்காலம்
1சியாம் நந்தன் மிஸ்ராபிறதிசம்பர் 1969 - மார்ச்சு 1971
2எம். எஸ். குருபாதசாமிபிறமார்ச்சு 1971 - ஏப்ரல் 1972
3கமலபதி திரிபாதிஇந்திய தேசிய காங்கிரசுமார்ச்சு 30, 1977 - பெப்ரவரி 15, 1978
4போலா பாசுவன் சாத்திரிஇந்திய தேசிய காங்கிரசு (நிறுவனம்)February 24, 1978 - March 23, 1978
5கமலபதி திரிபாதிஇந்திய தேசிய காங்கிரசுமார்ச்சு 23, 1978 - சனவரி 8, 1980
6லால் கிருஷ்ண அத்வானிபாரதிய ஜனதா கட்சிசனவரி 21, 1980 - ஏப்ரல் 7, 1980
7பி. சிவசங்கர்இந்திய தேசிய காங்கிரசுதிசம்பர் 18, 1989
8எம் எஸ் குருபாதசாமிபிறசூன் 28, 1991 - சூலை 21, 1991
9எஸ். ஜெய்பால் ரெட்டிகாங்கிரசு கட்சி (எதிர்ப்பாளர்)சூலை 22, 1991 - சூன் 29, 1992
10சிக்கந்தர் பக்த்பாரதிய ஜனதா கட்சிசூலை 7, 1992 - மே 23, 1996
11சங்கர்ராவ் சவான்இந்திய தேசிய காங்கிரசுமே 23, 1996 - சூன் 1, 1996
12சிக்கந்தர் பக்த்பாரதிய ஜனதா கட்சிசூன் 1, 1996 - மார்ச்சு 19, 1998
13மன்மோகன் சிங்இந்திய தேசிய காங்கிரசுமார்ச்சு 21, 1998 - மே 21, 2004
14ஜஸ்வந்த் சிங்பாரதிய ஜனதா கட்சிசூன் 3, 2004 - 16 மே 2009
15அருண் ஜெட்லிபாரதிய ஜனதா கட்சிசூன் 3, 2009 – மே 2014
16குலாம் நபி ஆசாத்இந்திய தேசிய காங்கிரஸ்சூன் 2014 - பிப்ரவரி 2021
17மல்லிகார்ஜுன் கார்கேஇந்திய தேசிய காங்கிரஸ்பிப்ரவரி 2021 - அக்டோபர் 2022 மற்றும் 17 டிசம்பர் 2022- பதவியில்

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை