உள்ளடக்கத்துக்குச் செல்

எத்திலீன் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீன் கார்பனேட்டு
Skeletal formula of ethylene carbonate
Ball-and-stick model of the ethylene carbonate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டையாக்சலான்-2-ஒன்
வேறு பெயர்கள்
எத்திலீன் கிளைக்கால் கார்பனேட்டு[1]
இனங்காட்டிகள்
96-49-1 Y
ChemSpider7030 Y
InChI
  • InChI=1S/C3H4O3/c4-3-5-1-2-6-3/h1-2H2 Y
    Key: KMTRUDSVKNLOMY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H4O3/c4-3-5-1-2-6-3/h1-2H2
    Key: KMTRUDSVKNLOMY-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்7303
  • C1COC(=O)O1
பண்புகள்
C3H4O3
வாய்ப்பாட்டு எடை88.06 g·mol−1
தோற்றம்வெண்மையும் மஞ்சளும்
அடர்த்தி1.3210 கி/செ.மீ3
உருகுநிலை 34 முதல் 37 °C (93 முதல் 99 °F; 307 முதல் 310 K)
கொதிநிலை 243.0 °C (469.4 °F; 516.1 K)
கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
ஈயூ வகைப்பாடுஎரிச்சலூட்டும் (XI)
R-சொற்றொடர்கள்R41
S-சொற்றொடர்கள்S26 S39
தீப்பற்றும் வெப்பநிலை 150 °C (302 °F; 423 K)
Autoignition
temperature
465 °C (869 °F; 738 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

எத்திலீன் கார்பனேட்டு (Ethylene carbonate) (CH2O)2CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். எத்திலீன் கிளைக்கால் மற்றும் கார்பானிக் அமிலத்தின் கார்பனேட்டு எசுத்தர் என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் (25°செ) எத்திலீன் கார்பனேட்டு ஒரு ஒளிபுகும் படிகத் திண்மமாக நிறமற்றும் நெடியற்றும் காணப்படுகிறது. சிறிதளவு நீரில் கரைகிறது. எத்திலீன் கார்பனேட்டு திரவ நிலையில் இருக்கும் போது (உ.நி: 34-37 °செல்சியசு|செ]]) நிறமற்ற மணமற்ற திரவமாக உள்ளது [2].

தயாரிப்பும் வினைகளும்

எத்திலீன் ஆக்சைடும் கார்பனீராக்சைடும் வினைபுரிவதால் எத்திலீன் கார்பனேடு உருவாகிறது. இவ்வினையில் பல்வேறு வகையான நேர்மின் அயனிகளும் அணைவுச் சேர்மங்களும் வினையூக்கியாகச் செயல்படுகின்றன :[3]

(CH2)2O + CO2 → (CH2O)2CO.

எத்திலீன் கார்பனேட்டு (மற்றும் புரோப்பைலீன் கார்பனேட்டு) மெத்தனால் பதிலீட்டு எசுத்தராக்கல் வினையின் பயனாக டைமெத்தில் கார்பனேட்டைத் தருகிறது. டைமெத்தில் கார்பனேட்டு ஒரு பயனுள்ள கரைப்பானாகவும் மெத்திலேற்றும் ,முகவராகவும் பயன்படக்கூடிய சேர்மம் ஆகும்.

C2H4CO3 + 2 CH3OH → CH3OCO2CH3 + HOC2H4OH

டைமெத்தில் கார்பனேட்டும் இதேபோல பதிலீட்டு எசுத்தராக்கல் வினையின் பயனாக ஒரு பாசுகீன் பதிளிட்டு சேர்மமான டைபீனைல் கார்பனேட்டாக மாறுகிறது :[3]

CH3OCO2CH3 + 2 PhOH → PhOCO2Ph + 2 MeOH.

பயன்கள்

மூலக்கூற்று மின்னிருமுனைவுத் திருப்புத்திறன் மதிப்பு 4.9 டி உள்ள ஒரு முனைவுக் கரைப்பானாகப் பயன்படுகிறது. புரோப்பைலீன் கார்பனேட்டை விட மின்னிருமுனைவுத் திருப்புத்திறன் டி மட்டுமே எத்திலீன் கார்பனேட்டு கொண்டுள்ளது. இலித்தியம் மின்கலங்களில் உள்ள மின்பகுளிகளில் மின் தடையை பகுதிப் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். பலபடிகளிலும் கரிமத் தொகுப்பு வினைகளிலும் பயனாகும் வினைலீன் கார்பனேடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் நெகிழ்வியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=எத்திலீன்_கார்பனேட்டு&oldid=3236060" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்