எமிலியோ அகுயினால்டோ

எமிலியோ ஃபமி அகுயினால்டோ (Emilio Famy Aguinaldo) [c] (22 மார்ச்சு 1869[d] – 6 பெப்ரவரி 1964) அலுவல்முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர் (1899-1901) ஆவார். இவர் எசுப்பானியாவிற்கு எதிராக பிலிப்பீனியப் படைத்துறையை வழிநடத்தியதுடன் பிந்தைய பிலிப்பீனியப் புரட்சியிலும் (1896-1897) முக்கியப் பங்காற்றினார். 1898 ஆம் ஆண்டு நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போரை முன்னின்று நடத்தியதுடன் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் (1899-1901) காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிராக போராடினார். இப்போரில் 1901 இல் தோல்வியுற்று இவரது ஆட்சி முடிவிற்கு வந்தது.

மாண்புமிகு
புரட்சித் தலைவர்
எமிலியோ ஃபமி அகுயினால்டோ
குவிசோன் சேவை சிலுவை, பிஎல்எச்
முதல் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர்
முதலாவது பிலிப்பைன் குடியரசின் அரசுத்தலைவர்
மீயுயர் அரசின் தலைவர்
பியாக்-ன-பாதோவின் தலைவர்
சர்வாதிகாரி
புரட்சிகர அரசின் தலைவர்
பதவியில்
23 சனவரி 1897[a] – 1 ஏப்ரல் 1901[b]
பிரதமர்
  • அபொலினாரியோ மாபினி
  • (21 சன – 7 மே 1899)
  • பெத்ரோ பேடர்னோ
  • (7 மே – 13 நவ 1899)
Vice Presidentமாரியானோ திரியசு (1897)
பின்னவர்பதவி இல்லாதாயிற்று
மானுவல் எல். குவிசோன்
(பொதுநலவாயத்தின் தலைவராக)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1869-03-22)22 மார்ச்சு 1869
கவித்
எசுப்பானியக் கிழக்கிந்தியா (தற்போது கவித், கெவைட், பிலிப்பீன்சு)
இறப்பு6 பெப்ரவரி 1964(1964-02-06) (அகவை 94)
குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
இளைப்பாறுமிடம்அகுயினால்டோ புனிதவிடம், கவித், கெவைட், பிலிப்பீன்சு
அரசியல் கட்சிகதிபுனன்
தேசிய சோசலிசக் கட்சி
துணைவர்s
  • இலாரியா அகுயினால்டோ (1896–1921)
  • மாரியா அகோன்சில்லோ (1930–1963)
பிள்ளைகள்
  • கார்மென் அகுயினால்டோ மெலன்சியோ
  • எமிலியோ அகுயினால்டோ, இளை.
  • மரியா அகுயினால்டோ போப்லெட்
  • கிறிஸ்டினா அகுயினால்டோ சன்டே
  • மிகுவல் அகுயினால்டோ
முன்னாள் கல்லூரிகாலேசியோ டி சான் யுவான் டி லெட்ரான்
தொழில்படைவீரர், மேலாளர், ஆசிரியர், புரட்சியாளர்
கையெழுத்து

1935 ஆம் ஆண்டில் அகுயினால்டோ பிலிப்பீன்சு பொதுநலவாயத்திற்கான தலைவர் தேர்தலில் மானுவல் எல். குவிசோனுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1941 இல் சப்பானியர்களின் ஆக்கிரமிப்பின்போது புதிய ஆட்சியாளர்களுடன் ஒத்துழைத்தார்; அமெரிக்கப் படைகளையும் பிலிப்பினோ படைகளையும் சரணடைய வானொலியில் கோரிக்கை விடுத்தார். அமெரிக்கர்களின் மீள்வருகைக்குப் பிறகு இவர் தேசத்துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்; பின்னர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்புகள்

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை