ஏசியானா ஏர்லைன்ஸ்

ஏசியானா ஏர்லைன்ஸ் (Asiana Airlines) தென்கொரியாவின் இரு முக்கிய வானூர்திச்சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றைய நிறுவனம் கொரியன் ஏர். ஏசியானா ஏர்லைன்ஸ் முன்னர் சியோல் ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. சியோலின் ஏசியானாவில் இதன் தலைமையகம் உள்ளது.[2]

ஏசியானா ஏர்லைன்ஸ்
아시아나항공
IATAICAOஅழைப்புக் குறியீடு
OZAARASIANA
நிறுவல்17 பெப்ரவரி 1988; 36 ஆண்டுகள் முன்னர் (1988-02-17)
மையங்கள்
  • கிம்போ பன்னாட்டு விமானநிலையம்
  • Iஇங்கேயன் பன்னாட்டு விமானநிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்
  • கிம்கே பன்னாட்டு விமானநிலையம்
  • ஜேஜு பன்னாட்டு விமானநிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஏசியான கிளப்
கூட்டணிஸ்டார் அலையன்ஸ்
கிளை நிறுவனங்கள்
  • Air Busan
  • Asiana IDT
வானூர்தி எண்ணிக்கை85
சேரிடங்கள்108
தாய் நிறுவனம்கும்கோ ஏசியான குழுமம்
தலைமையிடம்ஓசோ-டோங்க், காங்க்சியோ-கு, சியோல், தென்கொரியா
முக்கிய நபர்கள்
  • கிம் சூ-சியோன் (Kim Soo-Cheon) (김수천) (President & CEO)
Revenue KRW\ 5,638.1 பில்லியன் (2012)[1]
பணியாளர்கள்10,183 (2015)
வலைத்தளம்www.flyasiana.com

இந்த விமானச் சேவையின் உள்நாட்டு மையம் கிம்போ பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இதன் சர்வதேச மையம் இங்கேயன் பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இந்த இடம் மத்திய சியோலில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் (43 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினரான ஏசியானா ஏர்லைன்ஸ் 14 உள்நாட்டு வழித்தடங்களிலும், 90 சர்வதேச வழித்தடங்களிலும், 27 சரக்கு வழித்தடங்களில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளிலும் செயல்படுகிறது.[3]

டிசம்பர் 2014 இன் படி, ஏசியானா ஏர்லைன்ஸில் மொத்தம் 10,183 மக்கள் வேலை செய்கின்றனர். இதில் ஏசியானாவின் விமானிகள், விமானம் தரையிலுள்ளபோது அதன் வேலைகளை பராமாரிப்பவர்கள் மற்றும் விமானத்தின் இதர செயல்பாடுகளில் பங்குவகிப்போர் முக்கியமானவர்கள் ஆவர். ஏசியானா ஏர்லைன்ஸ், புசன் பெருநகரின் குறைந்த கட்டண விமானச் சேவையான ஏர் புசனுடன் தொடர்பு கொண்டுள்ள மிகப்பெரிய பங்குதாரர் ஆவார்கள். தென் கொரியா நாட்டின் கால்பந்து அணி மற்றும் பிரசிடென்ஸ் கோப்பை 2015 க்கான அலுவலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளராக ஏசியான ஏர்லைன்ஸ் உள்ளது.

பெருநிறுவன விவகாரங்கள்

ஏசியானா ஏர்லைன்ஸ் தனது தலைமையகங்களை ஏசியானா நகரம், ஓசோ-டோங்க், காங்க்சியோ-கு, சியோல் ஆகிய இடங்களில் கொண்டுள்ளது. ஏசியானா ஏர்லைன்ஸின் தலைமையகம் ஹோஹியோன்-டோங்கில் இருந்து ஏசியானாவிலுள்ள ஓசோ-டோங்கிற்கு ஏப்ரல் 1, 1998 இல் மாற்றப்பட்டது.[4]

இலக்குகள்

ஏசியானா ஏர்லைன்ஸ் உலகின் நான்கு முக்கிய கண்டங்களுக்கும் தனது விமானச் சேவையினைப் புரிகிறது. அவற்றுள் சீனா, ஜப்பான், மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்றவை மிக முக்கியமானவை. சியோலில் இருந்து, டாஷ்கென்ட், அல்மாடி, சியம் ரீப், ப்னோம் பென்ஹ் மற்றும் கோரோர் போன்ற பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பயணிகள் விமானங்களைச் செலுத்திய முதல் நிறுவனம் ஏசியானா ஏர்லைன்ஸ் ஆகும்.

இந்த பயணிகள் விமானங்களுக்கு இடையிலும், சில முக்கியப் பகுதிகள் மற்றும் சுற்றுலா இடங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட காலங்களில் விமானச் சேவைகளை செய்தது. அவற்றுள் ப்ருனை, ந்ஹா ட்ராங்க், கியூஹார் மற்றும் ஸாங்க்ஜாஜி போன்ற இடங்கள் அடங்கும். ஜூலை 2013 இல் ஏசியானா தனது தொடர்ச்சியான பயணிகள் விமானச் சேவையினை ஜாகர்டா, டென்பஸார் மற்றும் இந்தோனேசியா போன்ற இடங்களுக்கும் தொடங்கியது. தற்போது சியோலுக்கும், வுக்ஸிக்கும் இடையே புது பயணிகள் விமானம் ஒன்றினை இயக்க ஏசியானா ஏர்லைன்ஸ் திட்டமிட்டு வருகிறது.[5]

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராக ஏசியானா ஏர்லைன்ஸ் உள்ளது. அத்துடன் ஏப்ரல் 2014 இன் படி, பின்வரும் நிறுவனங்களுடன் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.

  1. ஏர் ஏஸ்டானா
  2. ஏர் புசன்
  3. ஏர் மகௌ [6]
  4. சீனாவின் தெற்கு ஏர்வேஸ்
  5. எடிஹட் ஏர்வேஸ்
  6. ஜெட்புளூ ஏற்வேஸ்
  7. மியான்மர் ஏர்வேஸ் இன்டர்நேஷனல்
  8. குவாண்டாஸ்
  9. கத்தார் ஏர்வேஸ்
  10. எஸ்7 ஏர்லைன்ஸ்
  11. ஷான்டோங்க் ஏர்லைன்ஸ்
  12. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

விமானக் குழு

மே 2015 இன் படி ஏசியானா ஏர்லைன்ஸிடம் பின்வரும் விமானங்கள் அதன் விமானக் குழுவில் உள்ளன.[7]

விமானம்சேவையில்

இருப்பது

ஆர்டர்கள்விருப்பங்கள்பயணிகள்
முதல்தரவகுப்புபொருளாதாரவகுப்புபயணவகுப்புமொத்தம்
ஏர்பஸ்

ஏ320-200

9--00

0

156

162

156

162

ஏர்பஸ்

ஏ321-100

2--00

0

200200
ஏர்பஸ்

ஏ321-200

232-012

1200

159

165191195

171

177191195

ஏர்பஸ்

ஏ321 நியோ

-25-அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

ஏ330-300

15--030260

245

290

275

ஏர்பஸ்

ஏ330-900 நியோ

-613அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

350-800

-810அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

350-900

-1210அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

350-1000

-1010அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

380-800

35-1266417495
போயிங்க்

747-400

2--1045304359
போயிங்க்

747-400 எம்

2--1024230264
போயிங்க்

767-300

7--015

0

235

270

250

270

போயிங்க்

777-200 ஈஆர்

12--8

8
0
0
0
0

24

28
24
22
28
28

214

226
271
274
271
272

246

262
295
296
299
300

உயர்தர வழித்தடங்கள்

ஏசியானா ஏர்லைன்ஸின் முக்கியமான உயர்தர வழித்தடங்கள்: ஜோஜு – சியோல், சியோல் – ஜேஜு, புசன் – சியோல் மற்றும் ஜேஜு - புசன் ஆகியவையாகும். இந்த வழித்தடங்களில் முறையே வாரத்திற்கு 164, 161, 81 மற்றும் 69 விமானங்களை இயக்குகிறது. இவை தவிர, சியோல் – டாகாமட்சு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் – டாலாஸ் ஃபோர்ட் வொர்த் போன்ற வழித்தடங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களாக உள்ளது.[8]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏசியானா_ஏர்லைன்ஸ்&oldid=3793076" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை