ஏலம் (தாவரம்)

(ஏலக்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏலம்
Cardamom
ஏலம் (Elettaria cardamomum)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
இஞ்சிவரிசை
குடும்பம்:
Genera
  • Amomum
  • Elettaria

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிறிய ஏலக்காய் எலெட்டாரியா (Elettaria), பெரிய ஏலக்காய் அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

இத்தகை ஏலக்காய், இந்திய துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.

சிறிய, பச்சை நிறமுடைய எலெட்டாரியா வகை ஏலமும் பெரிய, அடர் பழுப்பு நிறம் கொண்ட அமோமம் வகை ஏலமும்
எலெட்டாரியா ஏலக்காயின் கறுப்பு விதைகள்

ஏலக்காயின் பயன்கள்

  • உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
  • சமையலின் நறுமணமாக
  • ஏலக்காய் எண்ணெய் பதப்படுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனைப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
  • வட இரோப்பாவில் இனியங்களில் ஓர் இன்றியமையாத உள் பொருளாக

மருத்துவ குணங்கள்

1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக2. செரிமானத்தை தூண்டுவதாக3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு4. மலட்டுத்தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிப்படுதலை தீர்ப்பதற்கு

ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்

ஏலக்காய்

மிகையான உற்பத்தியை இந்தியத் துணைக்கண்டம் அண்மைவரை தக்க வைத்திருந்தாலும், ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை குவாத்தமாலா(Guatemala) விடம் இழந்துள்ளது. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் நாடுகள்,BUSCHNEGER

ஏற்றுமதி

உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்:

1. கோஸ்ட்டா ரிக்கா
2. குவாத்தமாலா
3. இந்தோனேசியா
4. பிரேசில்
5. நைஜீரியா
6. இந்தியா
7. தாய்லாந்து
8. நிக்கராகுவா
9. தென் ஆபிரிக்கா

ஏலத் தாவரத்தைத் தாக்கும் தீ நுண்மம்

ஏல மொசைக் (mosaic) தீ நுண்மம், ஏலத் தாவரத்தைத் தாக்கி அதன் விளைச்சலைக் குறைக்கின்றது. இந்நுண்மம் ஓரிழை ஆர்.என்.ஏ கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை போட்டிவிரிடீ (Potyviridae) என்னும் செடிகொடி தீநுண்மக் குடும்பத்தில், மெக்ளாரா தீநுண்மம் (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வால்பாறையில் இருந்து கர்நாடகா வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதன் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக மதுரை காமராசர் பலகலைகழகத்தில் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் உசா அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது[1][2][3]. இத்தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏலம்_(தாவரம்)&oldid=3761828" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை