கணினிப் பொறியியல்

கணினி பொறியியல் என்பது கணினியையும் அதைச் சார்ந்தப் பொருட்களையும் பற்றி படிக்கும் பொறியியல் பிரிவு ஆகும்.[1] இதில் கணினி எவ்வாறு இயங்குகிறது என்றும் அதில் உள்ள மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்கள் எவ்வாறு இயங்குகிறது, அது எப்படி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் என்றும் விளக்கபடுவதுடன் அப்பொருட்களை தயாரிக்கும் முறைகளயும் இப்பிரிவு விளக்குகின்றது.

கணினி பாகங்கள்

உட்பிரிவுகள்

பெரும்பாலான கணினி பொறியாளர்கள், மென்பொருள் வடிவமைப்பு மற்றும் வன்பொருள் - மென்பொருள் இணைப்பு குறித்த பாடங்களை பயில்வர். அதோடு, நுண்செயலிகள், கணிப்பொறிகள், இயந்திரச் சுற்று வடிவமைப்பு உள்ளிட்டவைகளையும் கற்றுக்கொள்கின்றனர். தங்களுடைய துறை சார்ந்த பாடங்கள் மட்டுமல்லாது, பிற துறை சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொள்கின்றனர்.[2]

இப்பொறியியல் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு உள்ளது. அதுபோக அடிப்படையானவற்றைக் கற்றுக்கொள்ள பட்டையப் படிப்பும் உள்ளது.[3][4][5]

முதன்மைப் பிரிவுகள்

கணினிப் பொறியியலில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அவையாவன: மென்பொருட் பொறியியல், வன்பொருட் பொறியியல்

மென்பொருட் கணினிப் பொறியியல்

மென்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் மென்பொருட்களை வடிவமைத்து, விருத்தி செய்து, சோதனை செய்யும் பணியில் ஈடுபடுவர். சில மென்பொருட் பொறியியலாளர்கள் நிறுவனங்களுக்கான கணினிச் செய்நிரல்களை வடிவமைத்து, உருவாக்கிப் பேணுவர். சிலர், நிறுவனங்களுக்கான உள்ளக வலையமைப்பை உருவாக்கல் போன்ற வலையமைப்பு உருவாக்கல் பணியைச் செய்வர். ஏனையோர் புதிய மென்பொருட்களை உருவாக்குதல் மற்றும் நிறுவுதல் அல்லது கணினி முறைமைகளைத் தரமுயர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். இவர்கள் கணினிச் செயலிகளை உருவாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். இதன்போது, தனியாள் ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் தேவைகளுக்கமைவான புதிய செய்நிரல்களும் செயலிகளும் உருவாக்கப்படும்.[6]

வன்பொருட் கணினிப் பொறியியல்

பல வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் பல்வேறு கணினி உபகரணங்களை ஆராய்தல், விருத்தி செய்தல், வடிவமைத்தல் மற்றும் பரிசோதித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றனர். இவ்வுபகரணங்கள் மின்சுற்றுப்பலகைகள் மற்றும் நுண்செயலிகளிலிருந்து (microprocessors) திசைவிகள் (routers) வரை பல்வகைப்படும். சிலர், கணினி உபகரணங்களை சிறப்பாக இயங்கும் வகையில் அல்லது புதிய மென்பொருட்களுடன் இசையும் வகையில் இற்றைப்படுத்துவர். பல வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் ஆராய்ச்சிக்கூடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். அமெரிக்க நாட்டுப் புள்ளிவிபரங்களின்படி, 95%மான வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் அந்நாட்டின் பெருநகரப் பகுதிகளிலேயே பணிபுரிகின்றனர். பெரும்பாலும் இவர்கள் முழுநேரப் பணியாளர்களாகவே உள்ளனர். இவர்களின் வேலை நேரம் ஒரு வாரத்துக்கு 40 மணிநேரத்திலும் அதிகமாகும். தகைமை வாய்ந்த வன்பொருட் கணினிப் பொறியியலாளர்கள் சராசரியாக வருடமொன்றுக்கு (2010) 98,810 அமெரிக்க டொலர்களைச் சம்பளமாகப் பெறுகின்றனர். அதாவது மணித்தியாலத்துக்கு 47.50 டொலர்களாகும். 2010ல் கணினி வன்பொருட் பொறியியலாளர்களுக்கு 70,000 வேலைவாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.[7]

இதனை ஒத்த துறைகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கணினிப்_பொறியியல்&oldid=3547690" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை