கரடிப் பூனை

கரடிப் பூனை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Paradoxurinae
பேரினம்:
Arctictis

Temminck, 1824
இனம்:
A. binturong
இருசொற் பெயரீடு
Arctictis binturong[2]
(Raffles, 1822)
Binturong range

கரடிப் பூனை () (Binturong) என்பது ஒருவகை பாலூட்டி விலங்கு ஆகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றது. இது அழிவாய்ப்பு இனம் என்று செம்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று பத்தாண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 30% வரை குறைந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது ஒரு இரவாடி. பகல் நேரத்தில் மரப் பொந்துகளில் இருக்கும். இந்தியாவில் அசாம், சிக்கிம் காடுகளில் காணப்படுகிறது.

பண்புகள்

இதன் உடல் நீண்டும், தடிமனாகவும் இருக்கும். கால்கள் சிறியதாகவும், உடலில் அடர்த்தியான கருப்பு முடியோடு, வெள்ளை அல்லது மங்கிய மஞ்சள்நிற முடிகளும் இருப்பதால் நரைத்தது போல தோன்றும். இதன் குறுகிய காதுகளின் முனைகளில் நீளக் கொத்தாக முடி இருக்கும். இதன் பற்கள் சிறியதாக இருக்கும். புதர் மண்டியது போன்று முடியோடு காணப்படும் இதன் வால், இன்னொருகரம் போல மரக்கிளைகளை பிடிக்க வல்லது. இவை சிறிய பாலூட்டிகள், பறவைகள், மீன், மண்புழுக்கள், பூச்சிகள் பழங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன.

இவற்றின் வால், கிட்டத்தட்ட தலைமுதல் உடல்வரையான உடல் நீளத்தை ஒத்து இருக்கும். உடல் 28 இல் இருந்து 33 அங்குலம் (71 இல் இருந்து 84 செமீ) நீளம் இருக்கும். வால் 26 இல் இருந்து 27 அங்குலம் (66 இல் இருந்து 69 செமீ) நீளம் இருக்கும்.[3] சில கரடிப் பூனைகள் தலைமுதல் உடல்வரை 2 அடி 6 அங்குலம் (76 செமீ) அளவிலிருந்து 3 அடி (91 செமீ) நீளம் கொண்டவையாகவும், வால் 2 அடி 4 அங்குலம் (71 செமீ) கொண்டதாகவும் இருக்கின்றன.[4]

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கரடிப்_பூனை&oldid=3630750" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை